என் மலர்
வேலூர்
வேலூரில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசியதாவது:-
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு எடப்பாடிபழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒரு சாமானியர்களாக இருந்து ஆட்சி புரிந்து வருகின்றனர்.
அத்தகைய சாமானியர்களின் ஆட்சியைக் கலைத்திட திமுகவுடன் கைகோர்த்துக் கொண்டு தினகரன் செயல்பட்டு வருகிறார்.
அவர் தற்போது தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களை கொண்டு மீண்டும் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக ஆட்சியைக் கலைக்க முயற்சித்து வருகிறார்.
மேலும், 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கு தீர்ப்பு வந்தால் ஆட்சியில் உள்ளவர்கள் சிறை செல்வர் என்றும் தினகரன் கூறி வருகிறார். அவரது 1991ஆம் ஆண்டுக்கு முந்தைய சொத்துக் கணக்கும், தற்போதைய சொத்துக் கணக்கும் வெளியானாலே யார் சிறைக்கு செல்வர் என்பது தெளிவாகிவிடும்.
எப்போதும் சிரித்து கொண்டே இருப்பவர் தான் லூசு மோகன். அவரது இடத்தை தற்போது டி.டி.வி.தினகரன் நிரப்பி உள்ளார். எனவே அவரை இனி லூசு மோகன் என்ற டி.டி.வி. தினகரன் என்று அழைக்கலாம்.
திருப்பரங்குன்றம், திருவாரூரில் டி.டி.வி.தினகரனின் பலம் எடுபடாது.
25 சதவீதம் மது அவரது தொழிற்சாலையில் இருந்து தான் வருகிறது. அவருடன் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை வார்த்தை கூறி வைத்துள்ளார். எங்கள் மீது பொய்யான பிரசாரம் செய்து வருகிறார்.
தொண்டர்களுக்கு எல்லாம் தெரியும். பெங்களூரு நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக வழக்கு இருந்த போது கருணாநிதியுடன் டி.டி.வி. தினகரன் கூட்டு வைத்துக்கொண்டு ஆட்சியையும், கட்சியையும் கலைக்க நினைத்தார்.
அதன் காரணமாகவே லண்டன் ஓட்டல் வழக்கில் இருந்து டி.டி.வி.தினகரன் விடுவிக்கப்பட்டார். ஜெயலலிதாவின் இறப்பிற்கும், அவருக்கு தண்டனை கிடைப்பதற்கும் காரணம் டி.டி.வி.தினகரன் தான்.
இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Thangamani #TTVDhinakaran
வேலூர் மாவட்டம் வாலாஜா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ‘நாட்டு வைத்தியம்’ என்ற பெயரில் போலி வைத்தியர்கள் ஏராளமானோர் கிளினீக் வைத்து பொதுமக்களிடம் நூதனமுறையில் ஏமாற்றி பணம் மோசடி செய்வது அதிகரித்துள்ளது.
வாலாஜா பஸ் நிலையம் சென்று இறங்கினாலே போதும் பயணிகள் சந்திக்கும் மிகப்பெரிய தொல்லையாக ஆட்டோக்காரர்கள், வைப்பு மருந்து புரோக்கர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். ‘‘இடுமருந்து என்று சொல்லப்படும் வைப்பு மருந்தை எடுக்க வேண்டுமா?
நாட்டு வைத்தியர்களிடம் அழைத்துசெல்கிறோம்’’ வாருங்கள் என்றுகூறி நச்சரிப்பதை பார்க்க முடிகிறது. போலி வைத்தியர்களுக்கு ஆள்பிடித்து தரும் புரோக்கர் கும்பலே வாலாஜா பஸ் நிலையத்தை பெரும்பாலும் ஆக்கிரமித்துள்ளன.
இதனால், மற்ற தேவைக்களுக்காக செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இடுமருந்து எடுக்க செல்பவர்கள் கண்ணில் பட்டால் போதும் கமிஷன் பணத்திற்காக ஆசைப்பட்டு புரோக்கர்கள், போலி வைத்தியர்களிடம் கொண்டு போய் விட்டுவிடுகின்றனர்.
வைத்தியர் என்று கூறிகொள்ளும் நபர்கள், பில்லி, சூனியம் வைத்திருப்பதாக சொல்லி, இல்லாத ஒரு நோய்க்கு வைத்தியம் செய்கின்றனர். வாலாஜாவில் கொடிகட்டி பறக்கும் இந்த தொழிலுக்கு அரசியல் பிரமுகர்களுடைய பின்னணி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு இடுப்பு முறிவுக்கு வாலாஜாவில் உள்ள ஒரு நாட்டு வைத்தியர் கொடுத்த மருந்தை சாப்பிட்ட ஒரு தொழிலாளியின் முகம் அகோரமாக மாறி உடல் உருகுலைந்தது. பாதிக்கப்பட்ட நபர் கலெக்டரிடம் புகார் அளித்தார்.
அதுசம்பந்தமாக இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. இதேபோல் போலி வைத்தியர்கள் குறித்து பல்வேறு புகார்கள் சென்றாலும் போலீசார் கண்டுகொள்வதில்லை. நடவடிக்கை எடுப்பதும் இல்லை.
ஓராண்டுக்கு முன்பு சுகாதாரத்துறை அதிகாரிகள் போலி வைத்தியம் பார்த்த கும்பலை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், போலி வைத்தியர்களை கைது செய்யாமல் விடுவித்தனர். போலி வைத்தியர்கள் அவ்வளவு செல்வாக்கு நிறைந்தவர்களா? என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியவில்லை.
இந்த நிலையில் புதியதாக வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரிடம் இந்த போலி வைத்தியர்கள் பற்றி நகரில் பல்வேறு தரப்பினர் புகார் செய்தனர். அதன்பேரில் அவர் நடத்திய சோதனையில் போலி வைத்தியர்களான ஒத்தவாடை தெருவை சேர்ந்த ரமேஷ் (44), பாஸ்கர் (40) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல், வாலாஜாவில் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி போலி வைத்தியர்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். #tamilnews
பேரணாம்பட்டு டவுன் சின்ன மசூதி தெருவை சேர்ந்தவர் முஹம்மத்ரசாக் (54).தோல் தொழிலதிபர். இவர் பெங்களூருவில் தனது தங்கை புதியதாக கட்டியுள்ள வீடு கிரகபிரவேசத்திற்கு சென்றார்.
நேற்று மாலை அவர் வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் அறையில் பீரோக்கள் திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த சுமார் 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், மற்றும் ரொக்க பணம் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
கொள்ளையர்கள் வீட்டின் அருகிலுள்ள காலி மனை பகுதியிலிருந்து காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து பின்பக்க வாசல் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர்.
பீரோக்களில் வைக்கப்பட்டிருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளையும், மற்றும் ரொக்கப்பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லையான புல்லூரில் கனகநாச்சியம்மன் கோவில் அருகே ஏற்கனவே பாலாற்றின் குறுக்கே, ஆந்திர அரசு கட்டியிருந்த தடுப்பணையினால், தமிழகத்தின் பாலாற்று பகுதியில் தண்ணீர் வராமல் போனது. இந்நிலையில், மீண்டும் தடுப்பணையின் உயரத்தை மேலும் அதிகரித்து,12 அடியாக உயர்த்தி கட்டியது.
இதன் காரணமாக எப்போதுமே பாலாற்றில் தண்ணீர் வரமுடியாத நிலை ஏற்பட்டு விட்டது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான புல்லூர் அருகே, கங்குந்தி பெத்தவங்கா என்னும் பெரும்பள்ளம் பகுதி உள்ளது.
இப்பகுதியையொட்டி, தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு செல்லும் வழியில் பாலாற்றின் கிளை ஆற்றின் குறுக்கே ஆந்திர அரசு புதியதாக தடுப்பணை கட்டி வருகிறது. ரூ.1 கோடி மதிப்பில் சுமார் 10 அடி உயரம், 10 அடி அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இரும்பு, ஜல்லி, சிமெண்ட் கலவை கொண்டு திடமான தடுப்பணை கட்டப்பட்டு முடிவடையும் தருவாயில் உள்ளது.
தொடர்ந்து, மேலும் சில தடுப்பணைகள் கட்டுவதற்கான பணிகளும் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்துக்கு எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நிரந்தரமாக தண்ணீர் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனை அறிந்த தமிழக விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். #APReservoir
வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. நேற்று முன்தினம் ஒரே நாளில் சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகர் மற்றும் பேஸ்-2 பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போனது. இதுகுறித்து சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜ், ரவி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிள்ளையார்குப்பம் சாலை சந்திப்பில் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், சங்கரன்பாளையத்தை சேர்ந்த சூர்யா (வயது 20), தொரப்பாடி பல்லவன் நகரை சேர்ந்த குமரன் (21), வேலூரை சேர்ந்த அஜித் (18) என்பதும், அவர்கள் 3 பேரும் சேர்ந்து சத்துவாச்சாரி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, தென்றல் நகர், பேஸ்-2 பகுதி ஆகிய இடங்களில் இருந்து 6 மோட்டார் சைக்கிள்கள் திருடியதும், அதனை சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகர் பாலாற்றங்கரையோரம் பதுக்கி வைத்துள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து 6 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். பெயர் சேர்த்தல், நீக்கம் செய்து கொள்ள சிறப்பு முகாம்கள் நடத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 1-ந் தேதியை அடிப்படையாக கொண்டு தீவிர சிறப்பு சுருக்க திருத்தம், வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கான தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை வேலூர் மாவட்ட கலெக்டர் ராமன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
வேலூர் மாவட்டத்தில் 30 லட்சத்து 23 ஆயிரத்து 979 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த ஆண் வாக்காளர்கள் 14 லட்சத்து 86 ஆயிரத்து 758 பேரும், பெண் வாக்காளர்கள் 15 லட்சத்து 37 ஆயிரத்து 103 பேரும், 3-ம் பாலினத்தவர்கள் 118 பேரும் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களை காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக உள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக 1,681 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளதா? என்று சரிபார்க்கலாம்.
பெயர் சேர்க்க படிவம்-6, பெயர் நீக்கம் செய்ய படிவம்-7, திருத்தம் மேற்கொள்ள படிவம்-8, சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய படிவம்-8ஏ ஆகிய விண்ணப்பங்களை பெற்று திருத்தங்களை சரி செய்து கொள்ளலாம்.
இந்த விண்ணப்பங்களை பெறும் வாக்காளர்கள் சமீபத்தில் எடுத்த வண்ண புகைப்படத்தை மட்டுமே ஒட்ட வேண்டும். கருப்பு- வெள்ளை புகைப்படம் ஏற்று கொள்ளப்படாது எனவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வருகிற 9-ந் தேதி, 23-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 7-ந் தேதி, 14-ந் தேதி ஆகிய நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து கொள்ளலாம்.
அதேபோல் வேலூர் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தி வாக்காளர் பட்டியலை வாசித்து காண்பிக்கவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, அனைத்து கிராமங்களிலும் வருகிற 8-ந் தேதி, 22-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 6-ந் தேதி, 13-ந் தேதி ஆகிய நாளில் சுருக்க திருத்தம்-2019 வரைவு வாக்காளர் பட்டியலை பார்வைக்கு வைத்தல் என்ற பொருளுடன் கிராம சபை கூட்டம் நடத்த உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் www.nvsp.in என்ற இணையதளத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.
கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் 30 லட்சத்து 51 ஆயிரத்து 171 பேர் இடம் பிடித்திருந்தனர். அதையடுத்து நடத்தப்பட்ட சிறப்பு முகாம்களில் 10 ஆயிரத்து 883 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். 38 ஆயிரத்து 75 பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் தேர்தல் தாசில்தார் பாலாஜி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி வேலூர் ஜெயிலில் 10 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அனுபவித்து வரும் 187 ஆண் கைதிகளும், 15 பெண் கைதிகளும் விடுதலையாவதற்கு தகுதி பெற்றிருந்தனர். அவர்களின் விடுதலை பட்டியலும் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
முதற்கட்டமாக கடந்த மாதம் 25-ந் தேதி வேலூர் ஜெயிலில் இருந்து 7 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். 2-வது கட்டமாக இந்த மாதம் 4-ந் தேதி 24 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து, 3-வது கட்டமாக கடந்த 11-ந் தேதி ஒரே ஒரு கைதி மட்டும் விடுதலையானார். 25-ந் தேதி 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், 5-வது கட்டமாக இன்று காலை மேலும் 16 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இன்று காலை 7 மணி அளவில் விடுதலை செய்யப்பட்ட 16 கைதிகளுக்கும் உடமைகள், ஜெயிலில் வேலை பார்த்ததற்கான கூலி பணத்தை வழங்கி சிறைத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். #MGRCenturyCeremony
வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். ஜெயிலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கைதிகளுக்கு எளிதில் கிடைக்கிறது.
கைதிகளை பார்க்கவரும் பார்வையாளர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை உணவு பொருட்களில் மறைத்து கொடுத்து விட்டு செல்கின்றனர்.
இதற்கு சில போலீசாரும் உடந்தையாக இருக்கின்றனர். சமீபத்தில் வேலூர் பெண்கள் ஜெயிலில் சோதனை நடத்தியபோது கத்தியை போலீசார் கைப்பற்றினர்.
இந்த நிலையில், ஆயுதப்படை டி.எஸ்.பி. விநாயகம் தலைமையிலான 50-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று காலை ஆண்கள் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அறை எண் 6-ல் உள்ள கைதிகளிடம் இருந்து 5 கிராம் கஞ்சா சிக்கியது. இதையடுத்து, ஒட்டு மொத்த அறைகளில் உள்ள கைதிகளிடமும், ஜெயில் வளாகத்திற்குள்ளும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.
கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக, பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
ஜெயிலில் குழந்தையுடன் அடைக்கபட உள்ள பரிதாப நிலைக்கு தள்ளபட்ட முத்துலட்சுமி மாமனாருடன் உல்லாசமாக இருப்பதில் இடையூராக இருந்ததாக நினைத்து அவரது கணவரின் முதல் மனைவிக்கு பிறந்த 6 வயது சிறுமி கொலையில் தண்டனை பெற்றுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவியை அடுத்த ஜடையன்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிகவுண்டர் (வயது 66). இவரது மகன் கோபாலகிருஷ்ணன்(35). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி தீபா. கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார்.
இவர்களுக்கு 6 வயதில் மகள் இருந்தார். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கும், முத்துலட்சுமிக்கும் இரண்டாவதாக திருமணம் நடந்தது. கோபாலகிருஷ்ணன் லாரி டிரைவராக வேலை செய்து வந்ததால், அடிக்கடி வெளியூர் சென்றுவிட்டு, மாதத்திற்கு ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இதனிடையே பழனிகவுண்டருக்கும், முத்துலட்சுமிக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு, இருவரும் வீட்டிலேயே உல்லாசமாக இருந்துள்ளனர்.
அதன்படி கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பழனிகவுண்டர், முத்துலட்சுமி இருவரும் உல்லாசமாக இருந்த போது, கோபாலகிருஷ்ணனின் முதல் மனைவியின் 6 வயது மகளால் தங்கள் சந்தோசத்திற்கு இடையூறு ஏற்படும் என்று முத்துலட்சுமி கூறினார்.
இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 6 வயது பேத்தியை தூக்கி சென்று அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் வைத்து பழனிகவுண்டர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதில் கதறி மயங்கிய நிலையில் இருந்த அந்த சிறுமியை, முத்துலட்சுமி துணியால் சுற்றி கொடுக்க, அந்த சிறுமியை பழனிகவுண்டர் தூக்கி சென்று அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் வீசி கொலை செய்தார்.
இது குறித்து கல்லாவி போலீசார் வழக்கு பதிவு செய்து, பழனிகவுண்டர் மற்றும் அவரது மருமகள் முத்துலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் கடந்த 10-ந் தேதி தீர்ப்பு கூறப்பட்டது. அதில் பேத்தி என்றும் பாராமல் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றத்திற்காக பழனி கவுண்டருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அபராதமாக ரூ. 5 ஆயிரமும், உடந்தையாக இருந்த முத்துலட்சுமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ. இரண்டாயிரத்து 500 அபராதமும் விதித்து கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
அப்போது 9 மாத கர்ப்பிணியாக இருந்த முத்துலட்சுமி வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவருக்கு குழந்தை பிறந்தது.
வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த தலங்கை ரெயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து பெங்களூர், கோவை மார்க்கமாக செல்லும் தண்டவாளத்தில் உள்ள உயர் அழுத்த மின் கம்பி இன்று காலை திடீரென அறுந்து விழுந்தது. இதனால் மின்தடை ஏற்பட்டு ரெயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் டபுள்டக்கர் ரெயில் சோளிங்கர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. இதே போல அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் பாசஞ்சர் ரெயில் அரக்கோணத்தில் நின்றது.
மின்கம்பி அறுந்தது குறித்து தகவலறிந்த அரக்கோணம் காட்பாடி ரெயில் நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
காலை 7.45 முதல் 2 மணி நேரத்திற்கு மேலாக சீரமைப்பு பணிகள் நடந்தது. நடுவழியில் நிறுத்தபட்ட ரெயில்களில் இருந்த பயணிகள் பாதிக்கபட்டனர்.
அரக்கோணத்தில் இருந்து வேலூர், காட்பாடி, ஆம்பூர் பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் நடுவழியில் தவித்தனர். #TrainStopped
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட மாவேரி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் நவீன் (வயது14). இவர் தேவலாபுரத்தில் உள்ள நிதி உதவிப்பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று காலை வழக்கம்போல் நவீன் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.
அப்போது, ஏதோ ஒரு காரணத்திற்காக நவீனை தந்தை வேலாயுதம் கண்டித்து திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த நவீன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசுக்கு தகவல் கொடுக்காமல், பெற்றோர் உடலை எரிப்பதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், வழக்குப்பதிந்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு அருகே உள்ள அரும்பாக்கம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் கந்தன் மகன் மூர்த்தி (வயது28) கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாம்பாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இரவு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
கலவை அருகே மூர்த்தி சென்று கொண்டிருந்த போது வழியில் வாலிபர் ஒருவர் லிப்ட் கேட்பது போல் பைக்கை நிறுத்தி உள்ளார். மூர்த்தி பைக்கை நிறுத்தியவுடன் அந்த மர்ம நபர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டி அவரிடம் இருந்து பைக்கை பறித்து கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இது குறித்து மூர்த்தி கலவை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று கலவை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் போலீசார்அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் அவர் செய்யாறு அடுத்த மோரணம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (28). என்பது தெரியவந்தது. மேலும் மூர்த்தியிடம் பைக்கை பறித்து சென்றதையும் ஓப்புக் கொண்டார். அவர் வேறு ஏதேனும் வழக்குகளில் சம்பந்தபட்டுள்ளாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






