என் மலர்

  செய்திகள்

  ஆம்பூர் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
  X

  ஆம்பூர் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆம்பூர் அருகே 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். #suicide

  ஆம்பூர்:

  ஆம்பூர் அடுத்த கதவாளம் ஊராட்சிக்குட்பட்ட மாவேரி கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மகன் நவீன் (வயது14). இவர் தேவலாபுரத்தில் உள்ள நிதி உதவிப்பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவந்தார். நேற்று காலை வழக்கம்போல் நவீன் பள்ளிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினார்.

  அப்போது, ஏதோ ஒரு காரணத்திற்காக நவீனை தந்தை வேலாயுதம் கண்டித்து திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த நவீன் வீட்டில் உள்ள அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  போலீசுக்கு தகவல் கொடுக்காமல், பெற்றோர் உடலை எரிப்பதற்கான இறுதி சடங்கு ஏற்பாடுகளை செய்துள்ளனர். தகவலறிந்த உமராபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும், வழக்குப்பதிந்து மாணவன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×