என் மலர்
வேலூர்
குடியாத்தம் அருகே குடுமிப்பட்டியில், வன விலங்குகளிடம் இருந்து பயிர்களைக் காக்க விவசாய நிலத்தை சுற்றி அமைத்த மின் வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று உயிரிழந்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி பரதராமியை அடுத்த டி.பி.பாளையம் அருகே மர்ம நபர்கள் அமைத்த மின் வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று இறந்தது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, மாவட்ட உதவி வன அலுவலர்முரளி ஆகியோர் ஆலோசனையின் பேரில், வனத்துறை சார்பில், குடியாத்தத்தை அடுத்த சைனகுண்டா, ஆம்பூரான்பட்டி, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, குடுமிப்பட்டி, மத்தேட்டிப்பல்லி உள்ளிட்ட கிராமங்களில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. அதில், வன எல்லையில் நிலம் வைத்திருப்பவர்கள், நிலத்தை சுற்றி மின் வேலி அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியாத்தம் அருகே உள்ள ராமாலை தண்ணீர்பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42). இவரது மனைவி முருகேஸ்வரி மற்றும் 3 மகள்களுடன் இன்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க வந்தார்.
கலெக்டர் அலுவலக வாசலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். ஒரு கேனில் மண்எண்ணை இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
அப்போது சதீஷ்குமார் கூறுகையில்:- கடந்த 2016-ம் ஆண்டு வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் எனக்கு கிராம உதவியாளர் பணிக்கான நேர்முக தேர்வுக்கு அழைப்பு வந்தது. நான் அதில் கலந்து கொண்டேன்.
அப்போது என்னிடம் ரூ.4 லட்சம் பணம் கொடுத்தால் வேலை தருவதாக தெரிவித்தனர். எனக்கு வசதி இல்லாததால் பணம் கொடுக்கவில்லை. அந்த வேலை வேறு ஒருவருக்கு கொடுத்து விட்டனர்.
இது பற்றி கலெக்டர் அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது செக்யூரிட்டி வேலைக்கு சென்று குறைந்த வருமானமே வருகிறது.
இதனால் எனது மனைவி, 3 மகள்களுடன் கஷ்டப்படுகிறேன். எனக்கு நியாயமான முறையில் வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக குடும்பத்துடன் தீக்குளிக்க மண்எண்ணை கொண்டு வந்தேன் என்றார். போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அவர் சென்றார்.
ஆம்பூர் அருகே உள்ள அய்யனூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது42). இவரது நண்பர் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த பாஸ்கர் (43). இவர்கள் இருவரும் சேர்ந்து கள்ளநோட்டு அச்சடிக்க முடிவு செய்தனர்.
இதற்காக கள்ள நோட்டு அச்சடிக்க ஜெராக்ஸ் எந்திரம் வாங்கினர். அதனை அய்யனூர் கிராமத்தில் உள்ள சரவணன் வீட்டில் 2-வது மாடியில் வைத்து அங்கிருந்து ரூ.500 மற்றும் ரூ.200 கள்ள நோட்டுகளை ஜெராக்ஸ் மூலம் அச்சடித்தனர்.
இந்த கள்ள நோட்டுகளை மும்பையிலுள்ள ரவுடி கும்பல் மூலம் மும்பையில் புழக்கத்தில் விட்டனர். கடந்த 3-ந் தேதி பாஸ்கர் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் கள்ள ரூபாய் நோட்டுகளுடன் மும்பை சென்றார். அவர் ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்றபோது மும்பை தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில் ஆம்பூர் அய்யனூர் கிராமத்திலிருந்து கள்ள நோட்டுகள் மும்பைக்கு வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மும்பை தனிப்படை போலீஸ் அதிகாரி ராஜேஷ் படேல், தலைமையிலான போலீசார் பாஸ்கரை அழைத்துக்கொண்டு இன்று ஆம்பூர் வந்தனர்.
அவர்கள் இதுகுறித்து ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் மற்றும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோரை நேரில் சந்தித்து தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து மும்பை போலீசார் மற்றும் ஆம்பூர் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை அய்யனூர் கிராமத்திலுள்ள சரவணன் வீட்டை சுற்றிவளைத்தனர். அங்கிருந்த சரவணனை கைது செய்தனர்.

மேலும் அதே அறையில் ரூ.500, 200 கள்ள நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் ரூ.7 லட்சத்து 55 ஆயிரத்து 700 கள்ள நோட்டுகள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். மும்பையில் பறிமுதல் செய்ததையும் சேர்த்து மொத்தம் ரூ.8.80 லட்சம் கள்ள நோட்டுகள் இருந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட எந்திரம் மற்றும் கள்ள நோட்டுகளை ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.
கைதான சரவணன் மற்றும் பாஸ்கரிடம் இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ள நோட்டு அச்சடிக்கும் எந்திரம் எங்கிருந்து கிடைத்தது? எத்தனை ஆண்டுகளாக கள்ள நோட்டுகளை அச்சடித்து வருகின்றனர்? அவர்கள் எந்த பகுதியில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டிலேயே கள்ள நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. 6-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது வீட்டில் கழிவறை வசதி இல்லை. கடந்த 6-ந்தேதி இரவு 7 மணிக்கு பாலாற்று கரையோரம் இயற்கை உபாதை கழிப்பதற்காக சிறுமி சென்றார்.
அப்போது அங்கு அப்பகுதியை சேர்ந்த சந்துரு (24). பார்த்திபன் (21), கண்ணன் (30) ஆகிய 3 பேர் மது அருந்தி கொண்டிருந்தனர். அவர்கள் மாணவியை பார்த்தும் அவருக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்று அவரை மடக்கினர். மறைவான இடத்திற்கு சிறுமியை தூக்கி சென்று கற்பழிக்க முயன்றனர். சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனால் பீர் பாட்டிலை உடைத்து சிறுமியின் கழுத்தில் வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டினர். பின் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டினர்.
பின்னர் அந்த சிறுமி தன்னை சுதாரித்துகொண்டு சுடுகாட்டில் பிணத்தின் மீது போற்ற பயன்படுத்திய உடைகளை எடுத்து தன் மீது போற்றிக்கொண்டு வீட்டிற்கு தப்பி வந்தார். வீட்டில் உள்ளவர்களிடம் அழுதுகொண்டே நடந்ததை கூறியுள்ளார். அவர்கள் உயிருக்கு பயந்து வெளியே சொல்லாமல் மறைத்து வந்தனர்.
இந்நிலையில் இந்த நிலை வேறு பெண்ணிற்கு வரக்கூடாது என்பதால் சிறுமியின் உறவினர் ஒருவர் வாணியம்பாடி தாலுகா போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகிய 3 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அவர்கள் மீது மேலும் 3 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த சின்ன கொம்மேஸ்வரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகள் சுமதி (வயது30). ஆம்பூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் மலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுமதியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது ஆம்பூர் அடுத்த மின்னூர் காளிகா புரத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் சீனு (30) ஆட்டு வியாபாரி. சுமதியுடன் கடைசியாக பேசியது தெரியவந்தது.
இதையடுத்து செதுவாலையில் உள்ள மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த சீனுவை நேற்றிரவு ஆம்பூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். போலீசாரிடம் சீனு கூறியிருப்பதாவது:-
நானும் சுமதியும் கடந்த 2 ஆண்டுகளாக சின்ன கொம்மேஸ்வரம் பகுதியில் வீடு எடுத்து தங்கி கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் எனக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை உள்ளது. தற்போது சுமதி 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாகவும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.
இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 17 நாட்களுக்கு முன்பு சாமுண்டி அம்மன் கோவில் திருவிழா நடந்தது. அப்போது கோவில் திருவிழாவிற்கு சுமதியை அழைத்து சென்றேன்.
பின்னர் விண்ணமங்கலம் மலையில் உள்ள கல்குவாரி அருகே அழைத்து சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தேன் என்று போலீசாரிடம் சீனு தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த கொலையில் மேலும் யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒடுகத்தூர் அடுத்த சத்தாத்தூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் அன்பு இவரது மனைவி அனிதா (வயது25) இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குழந்தைகள் இல்லை இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்தநிலையில் கடந்த 3-ந் தேதி இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்த அன்பு மனைவியை அடித்து துன்புறுத்தி தகராறு செய்துள்ளார்.
இந்நிலையில் 4-ந் தேதி காலை 10 மணிக்கு வீட்டில் இருந்த அனிதா மீது மண் எண்ணையை ஊற்றி அன்பு தீ வைத்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீபற்றி எரிந்தது வலிதாங்காமல் அனிதா அலறினார்.
அனிதாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்து அனிதா மீதுதண்ணீர் ஊற்றி அணைத்து அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அனிதா வேப்பங்குப்பம் போலீசில் புகார் அளித்தார் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாநகர பகுதியில் வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிவது மற்றும் காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இன்று 2-வது நாளாக வேலூர் நேஷனல் சிக்னல் அருகே இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகள் அமர வைக்கப்பட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
போலீசாரின் சோதனையை பார்த்த வாகன ஓட்டிகள் பலர் கிரீன் சர்க்கிள் அருகே சாலையில் திடீரென வாகனங்களில் திரும்பி சென்றனர்.
இந்த சோதனை வேலூரில் தினமும் நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
இன்று ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 700 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆம்பூர் அடுத்த மலையாம்பட்டு ஊராட்சி பெரிய மலையாம்பட்டு மலையில் அரசு கல்குவாரி இயங்கி வருகிறது.
இந்த மலையை சுற்றி மலையாம்பட்டு, பெரிய மலையாம்பட்டு, சின்ன மலையாம்பட்டு 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த அரசு கல்குவாரியில் இரவு நேரங்களில் பாறைகளை வெடிவைத்து தகர்க்க படுவதால் அதிலிருந்து சிதறும் பாறைகள் குடியிருப்புகள் மற்றும் பள்ளி கோவில்கள் மீது விழுந்து சேதம் அடைவதாகவும் கால்நடைகள் காயமடைவதாகவும் கூறி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு கல்குவாரி மூடப்பட்டது. இந்நிலையில் மீண்டும் கடந்த மாதம் முதல் அரசு கல்குவாரி இயங்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திருப்பத்தூர் கலெக்டர் சிவன் அருளிடம் கடந்த 24-ந்தேதி கல்குவாரியை தடை செய்யக்கோரி மனு அளித்தனர்.
ஆனால் கல்குவாரி தொடர்ந்து இயங்கி வருகிறது. இரவு நேரங்களில் அதிக சத்தத்துடன் வெடிகள் வைப்பதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து விடிய விடிய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று காலை ஆண்கள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் அரசு கல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த அரசு கல் குவாரியை நிரந்தரமாக மூட கலெக்டர் சிவன்அருள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் 10 கிராம மக்கள் சேர்ந்து திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
பொதுமக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த ஓட்டேரிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது42). ஆடு மேய்க்கும் தொழிலாளி.
இவர் கடந்த மாதம் ஒடுகத்தூர் சந்தையில் ஆடுகளை விற்று ரூ.70 ஆயிரத்தை வீட்டில் வைத்திருந்தார்.
அன்றிரவு சீனிவாசனின் வீட்டில் முகமூடி அணிந்த 6 பேர் கும்பல் புகுந்தது. அந்த கும்பல் சீனிவாசன் அவரதுமனைவி கலா ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி, தாக்கி ரூ.70 ஆயிரம் மற்றும் கலா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து சீனிவாசன் கொடுத்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்த நிலையில் அரிமலை கூட்ரோட்டில் வேப்பங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மநாபன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அநதவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஒடுகத்தூரை அடுத்த கல்லுட்டை கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (19), ராமநாயணகுப்பத்தை சேர்ந்த தாமு (21) என்பது தெரிய வந்தது. ராஜேஷ் குடியாத்தம் அரசு கல்லூரியில் படித்து வருகிறார்.
மேலும் இவர்கள் ஓட்டேரி பாளையத்தில் சீனிவாசன் வீட்டிற்குள் புகுந்து, அவரை மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. அவர்கள் ஓட்டிவந்த பைக்கும் திருடப்பட்டதுதான்.
அதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர். மோட்டார் சைக்கிள் மற்றும் அவர்களிடம் இருந்து ரூ.30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
கல்லூரி மாணவர் ராஜேசுக்கு செல்போன் மீது அதிக ஆர்வம் இருந்தது. விலை உயர்ந்த செல்போன் மற்றும் பைக் வாங்கி உல்லாச வாழ்க்கை வாழ ஆசைப்பட்டார்.
சீனிவாசன் வீட்டில் பணம் இருப்பதை தெரிந்து நண்பர்களுடன் வீடு புகுந்து திருடியுள்ளார். செல்போன் மோகத்தால் மாணவர் திருடனாக மாறிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரத்தை சந்தித்து தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், நந்தகுமார் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில்:- வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. மேலும் சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு செய்து கொடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
பீஞ்ச மந்தை பகுதிக்கு சாலை அமைப்பது தொடர்பாக கலெக்டரிடம் தெரிவித்தோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் என்றார்.

காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 26). இவர் அதே பகுதியை சேர்ந்த 16 வயது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் மைனர் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி அவரை கற்பழித்தார். இதனால் மைனர் பெண் கர்ப்பமானார்.
இது பற்றி தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் ரஞ்சித்குமாரிடம் கேட்டபோது அவர் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் லத்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித்குமாரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
ஆம்பூர் அருகே மின்னூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒரு லாரி கடக்க முயன்றது. அப்போது அதன் மீது வாணியம்பாடி நோக்கி சென்ற கார் மோதியது.
அதன் பின்னால் வந்த அரசு பஸ் விபத்தில் சிக்கிய கார் மீது மோதாமல் இருப்பதற்காக திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் லேசான காயமடைந்தனர்.
ஏற்கனவே விபத்துக்குள்ளான லாரியுடன் வந்த மற்றொரு லாரியும் விபத்து நடந்த இடத்தில் நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விபத்தில் சிக்கிய லாரி மற்றும் அதன் அருகில் நின்ற மற்றொரு லாரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் ரேசன் அரிசி மூட்டைகள் இருந்தது. இந்த ரேசன் அரிசி கடத்தி வரப்பட்டதாக என விசாரணை நடத்தினர்.
விஜயவாடாவில் இருந்து கேரளாவுக்கு 2 லாரிகளில் ரேசன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. ஆம்பூர் தாசில்தார் செண்பகவள்ளி, வட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) பாரதி ஆகியோர் அங்கு சென்று 2 லாரிகளில் கடத்தப்பட்ட 60 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
வடபுதுப்பட்டில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ரேசன் அரிசியை ஒப்படைத்தனர்.
இதுகுறித்து லாரி டிரைவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.






