என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார்.
    • பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆத்துப்பக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு. விவசாயி. இவரது மனைவி, மகன், மகள் ஆகியோர் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வெளியூர் சென்று இருந்தனர். துரைக்கண்ணு மட்டும் வீட்டில் இருந்தார்.

    இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு உணவு வாங்குவதற்காக துரைக்கண்ணு வீட்டை பூட்டி விட்டு அருகில் உள்ள கடைக்கு சென்றார்.

    சிறிது நேரம் கழித்து திரும்பிவந்த போது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடப்பதை கண்டு துரைக்கண்ணு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் அதில் இருந்த ரூ.10 லட்சம் ரொக்கம், 2 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    தகவல் அறிந்தததும் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    துரைக்கண்ணு கடந்த வாரம் இடம் ஒன்றை விற்று ரூ.10 லட்சத்தை வீட்டில் வைத்து இருந்தார். இந்த பணத்தை வைத்து விவசாய நிலம் ஒன்று வாங்க திட்டமிட்டு இருந்தார்.

    இந்த நிலையில் துரைக்கண்ணு வீட்டில் பணம் இருப்பதை அறிந்த மர்மகும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர். இதனால் இந்த கொள்ளையில் ஈடுபட்டது அவருக்கு ஏற்கனவே அறிமுகமான நபர்களாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் (வயது26). இவர், உறவினர் ஒருவரின் திருமண அழைப்பிதழை கொடுப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த உறவினர்கள் அய்யப்பன் (30), ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்த ஜனார்த்தனம் மனைவி குமாரி (35) ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார். திருத்தணி அடுத்த புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தில் உறவினர்களுக்கு திருமண பத்திரிகை கொடுத்து விட்டு திருத்தணி நோக்கி திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.

    புச்சிரெட்டிப் பள்ளி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது எதிரே வேகமாக வந்த கார் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகேஷ் உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பலத்த காயம் அடைந்த மகேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும், அய்யப்பன், குமாரி ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் இருவரும் திருத்தணி அரசு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். விபத்து நடந்ததும் கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

    இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க தடுப்புச் சுவர் அமைக்கப்படுகிறது.
    • ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் 1500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன வல்லூர் கொண்டக்கரை குருவி மேடு கவுண்டர் பாளையம், வெள்ளி வாயல் சாவடி, உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து வெளிவரும் மழைநீர் அத்திப்பட்டுபுதுநகர் வழியாக சென்று கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் அத்திப்பட்டு புது நகர் தாழ்வான பகுதி என்பதால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்து பொது மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அங்குள்ள தாங்கல் நீர்நிலை இடத்தில் கன மழையால் வெள்ள நீர் ஊருக்குள் புகாமல் இருக்க பொதுமக்களை பாதுகாத்திடும் வகையில் வல்லூர் தேசிய அனல் மின் நிலைய சமூக மேம்பாட்டு நிதி 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்புச் சுவர் கட்டப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கட்டுமான பணி நடைபெறும் இடத்தை முற்றுகையிட்டனர். தடுப்பு சுவர் 50 அடி அகலத்திற்கு மட்டுமே 400 மீட்டர் தூரம் அமைக்கப்படுவதால், 100 அடி அகலத்திற்கு முழுவதுமாக தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி முறையாக அளவீடு செய்து தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும், தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும் என்றும் கூறிய மக்கள், சாலை மறியல் செய்ய முயன்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் எம்டிஜி கதிர்வேல் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதுகுறித்து சார் ஆட்சியரிடம் மனு அளித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததின்பேரில் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். மேலும் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணம் இருந்ததை அறிந்த யாரோ ஒருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு (வயது57). விவசாயி. இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் இக்கோவிலில் பணியாற்றுபவர்களுக்கு மதிய உணவு வாங்கி வர வீட்டை பூட்டிக் கொண்டு துரைக்கண்ணு தனது மோட்டார் சைக்கிளில் பெரியபாளையம் சென்றார். பணியாளர்களுக்கு தேவையான சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்டவர்களை வாங்கிக் கொண்டு வந்து பணியாளர்களுக்கு வழங்கினார்.

    பின்னர், தனது வீட்டிற்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

    துரைக்கண்ணு நிலம் வாங்க பணத்தை சேகரித்து வந்து பீரோவில் வைத்துள்ளார் என்பதை அறிந்த யாரோ ஒருவர்தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப் பகலில் விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஸ்பின் பைக், ட்ரெட் மில் ஆகிய உடற்பயிற்சி செய்யும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மணவாளநகர்:

    திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வசிப்பவர் தினேஷ் (வயது 40). இவர் மணவாளநகர் பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறார். கடந்த 26-ந் தேதி இவர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று பார்த்தார். அப்பொழுது உடற்பயிற்சி கூடத்தில் இருந்த ஸ்பின் பைக், ட்ரெட் மில் ஆகிய உடற்பயிற்சி செய்யும் பொருட்கள் திருடப்பட்டு இருப்பதாக தெரியவந்தது.

    இதுகுறித்து தினேஷ் மணவாளநகர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தாக்கினர்.
    • ஐந்து பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் ஒன்பது பேர் சுமார் 30 ஆண்டுகளாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தனர்.

    ஆக்கிரமிப்பு செய்து கட்டி உள்ள வீடுகளை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் 2017-ம் ஆண்டு நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார்.

    அதன்பின்னர் இப்பகுதியில் வசித்து வந்த இருவர் நீதிமன்றத்தை நாடியதாக கூறப்படுகிறது. ஆறு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள உத்தரவுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ராதேவிக்கு இணை ஆணையர் உத்தரவிட்டாராம்.

    இந்நிலையில், இன்று பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புடன் வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஏழு வீடுகளுக்கும் பூட்டி சீல் வைத்தார்.இதனால் அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், எதிர்ப்பையும் மீறி ஏழு வீடுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

    இதன் பின்னர், புறப்பட்ட அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் தாக்கினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அதிகாரிகளுக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆக்கிரமடைந்த கிராம மக்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அரசியல் குழுவின் தலைமை நிலைய செயலாளர் நீலவானத்துநிலவன் தலைமையில் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஐந்து பெண்கள் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர்.இதன் பின்னர், அதிகாரிகளின் வாகனங்களை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விடுவித்தனர். இப்பிரச்சினையால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    • மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர் ஆரணியை சேர்ந்த ராமராஜ் என்பது தெரிந்தது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் நேற்று ஆரணி ஆற்றின் அருகே மங்களம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மணல் கடத்தி வந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் மணல் கடத்தியவர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ் (வயது 31) என்பது தெரிந்தது.

    போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பெர்னார்ட் தாமஸ் கண்டித்தார். இதனால் அவருக்கும் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட பெர்னார்ட் தாமசின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மற்றும் வாகனங்களை உடைத்து சூறையாடினர்.

    பூந்தமல்லி அடுத்த நேமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெர்னார்ட் தாமஸ் (78). இவரது வீட்டின் முன்பு குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் ஆட்டம் போட்டபடி தங்களது செல்போனில் ரீல்ஸ் வீடியோ எடுத்தனர்.

    இதனை பெர்னார்ட் தாமஸ் கண்டித்தார். இதனால் அவருக்கும் ரீல்ஸ் வீடியோ எடுத்த வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட பெர்னார்ட் தாமசின் வீட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மற்றும் வாகனங்களை உடைத்து சூறையாடினர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கவுதம், ரவிச்சந்திரன், மணிகண்டன், கார்த்திக் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

    • விஜய லட்சுமியின் கணவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
    • கள்ளக்காதல் தகராறில் வீடுபுகுந்து டிைரவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த பொத்தூர் செல்வகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது29). கார் டிரைவர். இவருக்கும் கணவரை பிரிந்து வாழ்ந்த உறவினரான நசரத் பட்டையை சேர்ந்த விஜய லட்சுமி என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    பின்னர் இருவரும் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை 10 மணியளவில் வேலைக்காக வெளியே செல்ல சுரேஷ் குமார் புறப்பட்டு கொண்டு இருந்தார்.

    அப்போது வீட்டுக்குள் திடீரென கத்தி, அரிவாளுடன் மர்ம நபர்கள் திடீரென புகுந்தனர். அவர்கள் சுரேஷ் குமாரை சுற்றி வளைத்து வெட்ட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் சுற்றி வளைத்த கும்பல் வீட்டுக்குள்ளேயே சுரேஷ்குமாரை சரமாரியாக வெட்டினர்.

    காதலன் சுரேஷ்குமாரை மர்ம கும்பல் வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி அவர்களை தடுக்க முயன்றார். இதில் அவரது கையிலும் பலத்த வெட்டு விழுந்தது.

    பின்னர் கொலை வெறி கும்பல் சுரேஷ்குமாரை கள்ளக்காதலி கண்முன்னேயே வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்த போது சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் விரைந்து வந்து சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கையில் வெட்டுக்காயம் அடைந்த விஜயலட்சுமிக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    போலீசார் நடத்திய விசாரணையில் விஜய லட்சுமியுடன் ஏற்பட்ட கள்ளகாதல் விவகாரத்தில் சுரேஷ்குமார் வெட்டி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.

    சுரேஷ்குமாரும், விஜய லட்சுமியும் உறவினர்கள் ஆவர். விஜயலட்சுமி கணவரை பிரிந்த பின்னர் சுரேஷ்குமாருடன் கள்ளக்காதல் ஏற்பட்டு அவருடன் குடும்பம் நடத்தி வந்து உள்ளார்.

    இதனால் விஜயலட்சுமியின் கணவர், மகனுடன் தனியாக வசித்து வந்தார். இதனால் அவர் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. மேலும் தங்களது பிரிவுக்கு சுரேஷ்குமார் தான் காரணம் என்று கூறி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் இன்று காலை சுரஷே்குமார் வீடு புகுந்து கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளார். எனவே விஜய லட்சுமியின் கணவரின் தூண்டுதலின் பேரில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    கள்ளக்காதல் தகராறில் வீடுபுகுந்து டிைரவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.
    • பாம்பு கடித்து இளம் பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு ஊராட்சி, மேட்டு தெருவில் வசித்து வருபவர் வாசுதேவன் விவசாயி ஆவார். இவரது மகள் பார்கவி (வயது23) நர்சிங் கோர்ஸ் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு சாப்பிட்டுவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். விடியற்காலை 2 மணி அளவில் பாம்பு ஒன்று அவரை கடித்து விட்டது. இதனால் அலறி துடித்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

    பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வழியிலேயே பார்கவி இறந்து விட்டதாக கூறினர்.

    இந்தச் சம்பவம் குறித்து வாசுதேவன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்தச் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
    • பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர், தலைமை காவலர் செல்லமுத்து ஆகியோர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். ஆரணி ஆற்றில் மங்களம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.

    அப்போது அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்து மணலுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ்(வயது31) என்பது தெரிய வந்தது. எனவே, போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.

    • ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த கவுண்டர்பாளையம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலை சமேத ஸ்ரீ அருஞ்சுனை காத்த அய்யனார் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

    இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சிறுணியம் பலராமன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ×