என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை
    X

    உடைக்கப்பட்ட பீரோ

    பட்டப்பகலில் விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

    • ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • பணம் இருந்ததை அறிந்த யாரோ ஒருவர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், ஆத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைகண்ணு (வயது57). விவசாயி. இவரது வீட்டின் அருகே தர்மராஜா கோவில் உள்ளது. இக்கோவிலை புனரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் இக்கோவிலில் பணியாற்றுபவர்களுக்கு மதிய உணவு வாங்கி வர வீட்டை பூட்டிக் கொண்டு துரைக்கண்ணு தனது மோட்டார் சைக்கிளில் பெரியபாளையம் சென்றார். பணியாளர்களுக்கு தேவையான சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்டவர்களை வாங்கிக் கொண்டு வந்து பணியாளர்களுக்கு வழங்கினார்.

    பின்னர், தனது வீட்டிற்கு வந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. வீட்டினுள் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்து 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து பணத்தை கொள்ளையடித்துச் சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

    இச்சம்பவம் குறித்து உடனடியாக பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ்குமார் தலைமையில் பெரியபாளையம் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.

    துரைக்கண்ணு நிலம் வாங்க பணத்தை சேகரித்து வந்து பீரோவில் வைத்துள்ளார் என்பதை அறிந்த யாரோ ஒருவர்தான் இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பட்டப் பகலில் விவசாயி வீட்டின் பீரோவை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×