என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
ஆரணி ஆற்றில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது
By
மாலை மலர்27 Jun 2023 11:01 AM GMT

- மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
- பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சங்கர், தலைமை காவலர் செல்லமுத்து ஆகியோர் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். ஆரணி ஆற்றில் மங்களம் பகுதியில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மணல் கடத்தி வந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை செய்தனர்.
அப்போது அனுமதியின்றி ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை கண்டுபிடித்து மணலுடன் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ஆரணி, புதிய தமிழ் காலனியைச் சேர்ந்த ராமராஜ்(வயது31) என்பது தெரிய வந்தது. எனவே, போலீசார் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்து பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
Next Story
×