என் மலர்
திருவாரூர்
- திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருவாரூர்:
இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு அரங்கில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சமாதான புறாக்களை பறக்க விட்டார்.
அதனைத் தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் ஏழு பேருக்கும், மாற்றுத்திறனாளிகள் இரண்டு பேருக்கும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 47 பேருக்கும், சமூக நலத்துறையின் சார்பில் 616 பேருக்கும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஐந்து பேருக்கும் என பல்வேறு துறைகளில் சார்பில் 705 பேருக்கு ரூ 2,06,09,915 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
மேலும் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், ஆசிரி யர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளர் சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
- தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
- தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.
முத்துப்பேட்டை:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தேர்தல் முத்துப்பேட்டையில் நடைபெற்றது.
தேர்தல் ஆணையராக திருத்துறைப்பூண்டி வட்டார செயலாளர் ஹரிகிருஷ்ணன், துணை ஆணையராக வேதரெத்தினம் ஆகியோர் செயல்பட்டனர்.
இதில் வட்டார தலைவராக சரவணன், வட்டார செயலாளராக செல்வசிதம்பரம், பொருளாளராக சுரேஷ், துணை தலைவர்களாக சீனிவாசன், பழனித்துரை, வாசுகி துணை செயலாளர்களாக செந்தில்குமரன், ராஜசேகரன், உஷா, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், ஆறுமுகம், பாரதி, சசிகலா, ராணி ஆகியோரும், வட்டார செயற்குழு உறுப்பினர்களாக சிங்காரவேலன், முரளி, சாமிநாதன், சீனிவாசன், இந்திரா, விஜயராணி, அன்புச்செல்வி, அறிவழகன், பன்னீர்செல்வம், சாகுல் ஹமீது, சோமசுந்தரம், மாரிமுத்து, மகாதேவன், பொதுவுடை, முருகானந்தம், பாலகிருஷ்ணன், முருகேசன், பாஸ்கரன், வீரமணி, கார்த்திகை செல்வன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்ட தலைவர் முருகேசன், மாவட்ட பொருளாளர் சுபாஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களை வாழ்த்தி பேசினார்.
இதில் ஏராளமான உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
- பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது இதன் நோக்கம்.
- பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி ஆணையர் பிரதான் பாபு தலைமையில், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பெண் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வெளியிட்டு, பிரச்சாரத்தை தொடங்கி வைத்து பேசுகையில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிப்பது, பாலின சமத்துவத்தை உறுதிபடுத்துவது, பெண்கள் மீதான வன்கொடுமைகளை தடுப்பது என பெண்களுக்கான கோட்பாடுகளை நிலைநாட்டவே இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு செல்வதே பிரசாரத்தின் நோக்கமாகும் என்றார்.
நிகழ்ச்சியில் மேலாளர் சிற்றரசு, கணக்காளர் முத்து மீனாட்சி, நகர்மன்ற தலைவர் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், கவுன்சிலர் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
- இதனால், நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நன்னிலம்:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டாரத்தில், தற்போது சம்பா சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்னதாக மேட்டூரில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடியும், அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடி பணிகள், நடைபெற்றது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை, தமிழகத்தில் வழக்கத்திற்கு அதிகமாக மழை பெய்தபோதும் நன்னிலம் வட்டார பகுதியில், மழைப்பொழிவு என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, அமைந்திருந்ததால் இந்த ஆண்டு நன்னிலம் வட்டார பகுதியில், மகசூல் சிறப்பாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியோடு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விவசாயப் பணிகளுக்கு தற்போது ஆள் பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில் எந்திரங்களின் ஆதிக்கம் தொடங்கிய நிலையில் எந்திரங்கள் விரைந்து அறுவடை பணிகளை மேற்கொள்வதால், அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள், உடனடியாக கொள்முதல் செய்து கொள்ளக் கூடிய வகையில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உரிய காலத்திற்கு முன்பாக திறக்கப்பட்டு, விவசாயிகளின் விளைப்பொருட்களை கொள்முதல் செய்யும் பணிகளை தொடங்கி உள்ளார்கள்.
விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மேட்டூர் அணை நீர் திறப்பும் விவசாயிகள் அறுவடை செய்த நெற்களை, விற்பனைக்கு காத்திருக்–காமல் விவசாயிகளின் நலன் பேணிக் காக்கக்கூடிய வகையில் உடனடியாக கொள்முதல் செய்யக்கூடிய வகையில், விவசாயிகளின் உணர்வுகளைஉணர்ந்த அரசாக, இருந்து உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணிகளை, தொடங்கியதில் நன்னிலம் வட்டார விவசாயிகள், பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக அரசின் செயல்பாடு விவசாயிகளின் நலனை பேணிக் காக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று பாராட்டையும் தெரிவித்து வருகிறார்கள்.
- போதை பொருளால் ஏற்படும் உடல்நலம், மனநலம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த கொறுக்கை அரசு பல் தொழில் நுட்ப கல்லூரியில் நேற்று போதை பொருளுக்கு எதிரான இயக்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் தொடங்ப்பட்டு மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.
விழாவில் கல்லூரி எந்திரவியல் துறை தலைவர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார்.
கல்லூரி முதல்வர் காசி தலைமை தாங்கினார்.
போதை பொருளுக்கு எதிரான இயக்கத்தை ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல் நிறுவன தலைவர் துரை ராயப்பன் தொடங்கி வைத்து, போதை பொருளால் ஏற்படும் உடல்நலம், மனநலம், சமூக, பொருளாதார இழப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தினார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தை இல்லம் தேடி கல்வி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முரளி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
விழாவில் மாணவர்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம் குறித்து ராமதேவர் சித்தர் அறக்கட்டளை மாநில தலைவர் ரவிச்சந்திரன் உரையாற்றினார்.
விழாவில் முதலாம் ஆண்டு விரிவுரையா ளர்களும், கட்டிட பொறியியல் துறை விரிவுரையாளர்களும், 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நூலகர் புண்ணியமூர்த்தி நன்றி கூறினார்.
- அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம்.
- அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் சசிகலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தலைவர் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், அனைவரின் ஒப்புதலோடு எதையும் செய்ய வேண்டும். தொண்டர்கள் எப்போதுமே கீழ்ப்படியில் நிற்பார்கள்.
அவர்களால் தான் நாம் மேடையில் நிற்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். அது மாதிரியான ஒரு சூழ்நிலை அ.தி.மு.க.வில் தற்போது இல்லை. இது அனைத்திற்கும் கீழ்ப்படியில் நின்று கொண்டிருக்கும் தொண்டர்கள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஆதரவு கேட்டு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பா.ஜ.க. அலுவலக வாசலில் காத்திருந்தது குறித்து கேட்கிறீர்கள். அ.தி.மு.க. எப்போதும் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்களின் ஆதரவு பெற்றவர்களுக்கு இது போன்ற நிலை ஏற்படாது.
அ.தி.மு.க.வில் எப்போதும் தொண்டர்கள் எண்ணப்படிதான் முடிவு எடுக்கப்படும். எப்போதுமே 2, 3 பேர் சேர்ந்து முடிவெடுக்க முடியாது. அதுபோன்று முடிவெடுக்கக் கூடிய கட்சி தி.மு.க.தான். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்வாறு முடிவு எடுக்க முடியும்.
அ.தி.மு.க. குடும்பம் என்பது மிகப்பெரியது. அ.தி.மு.க. குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தொண்டர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதுதான் என்னுடைய முடிவு.
நான் உயிருடன் இருக்கும் வரை இரட்டை இலை சின்னத்தை முடக்க விட மாட்டேன். நான் ஒரு சிலரை எடை போட்டுக் கொண்டு இருக்கிறேன். அ.தி.மு.க.வை மீண்டும் எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உறுதியாக உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்குள் அ.தி.மு.க. ஒன்றிணையும்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு குறித்து நான் எதுவும் கூற முடியாது. மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும்.
அ.தி.மு.க. சிதறுண்டு இருப்பதற்கு காரணம் பா.ஜ.க.வா என்று கேட்கிறீர்கள். நாம் அடுத்தவரை பற்றி குறை கூற தேவையில்லை. நாம் சரியாக இருந்தால் போதும். என்னை யாராலும் ஏதாவது செய்ய முடியுமா? என் நிழலிடம் கூட யாரும் வர முடியாது.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நடவடிக்கைகள் அனைத்தும் தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது. ஆகவே ஒருவரை ஒருவர் திட்டுவதை விட்டு விட்டு இருவரும் ஒன்றிணைந்து தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க. தொண்டர்களின் வேண்டுகோள். தேர்தல் சமயத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று பெட்டியை பூட்டி சாவியை வைத்துக்கொண்ட ஸ்டாலின் அந்த சாவியை தற்போது தொலைத்து விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
- எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என விசாரணை.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மேல ராஜ வீதியில் நேற்று இரவு துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ ஆரோக்கியராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தேவதாஸ் முருகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வீரையன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக வந்து கொண்டிருந்த ஒரு மினிலாரியை மறிக்க முயன்றனர். ஆனால் சற்று முன்னதாகவே லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடி விட்டார்.
இதையடுத்து மினி லாரியை சோதனை யிட்டனர். அதில் 2Ñ டன் ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து லாரி மற்றும் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவர் யார் ? எங்கிருந்து அரிசி மூட்டைகளை கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
திருவாரூர்:
திருத்துறைப்பூண்டியில் இருந்து ராயநல்லூர் புழுதிக்குடி வழியாக விக்கிரபாண்டியம் வரை தனியார் மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று இந்த மினி பஸ்சை டிரைவர் சுந்தரம் (வயது 50) ஓட்டினார்.
கண்டக்டர் வருண்குமார் (25) பணியில் இருந்தார். மினி பஸ் விக்கிரபாண்டியம் வந்து விட்டு திருத்துறைப்பூண்டி செல்லும் வழியில் விக்கிரபாண்டியம் கீழத்தெரு அருகே பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி அருகிலிருந்த குட்டையில் இறங்கியது.
இதில் பயணம் செய்த மஞ்சவாடி கிராமத்தை சேர்ந்த கவுசல்யா (22), டிரைவர் சுந்தரம், கண்டக்டர் வருண்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.
இவர்கள் மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் மின்கம்பம் முறிந்து மின்கம்பிகள் அறுந்தன.
இதனால் அங்கு மின்தடை ஏற்பட்டது. மின் கம்பம் முறிந்தபோது அங்கு மக்கள் நடமாட்டம் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதுகுறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
- பொதுமக்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம், திருத்துறைப்பூண்டி ராய் டிரஸ்ட் இன்டர்நேஷனல், தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் ஆகியவை இணைந்து இலவச இருதய, சர்க்கரை மற்றும் பொது மருத்துவ முகாம் திருத்துறைப்பூண்டி எஸ்.வி.எஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்க தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன் தலைமை தாங்கினார்.
ராய் டிரஸ்ட் நிறுவன தலைவர் லயன் துரை ராயப்பன் முகாமை தொடங்கி வைத்தார். அரிமா சங்க சாசன தலைவர் லயன் மருத்துவர் முகம்மது ஆரிப், மண்டல தலைவர் லயன் ஸ்ரீநாத், வட்டார தலைவர் லயன் கண்ணன், பொருளாளர் லயன் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நூற்றாண்டு அரிமா சங்க முன்னாள் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டரின் மூத்த ஆலோசகர் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 850-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரத்த பரிசோதனை, இ.சி.ஜி., எக்கோ மற்றும் அதிநவீன கருவிகளை கொண்டு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
மேலும், 85- க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவை சிகிச்சை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இதில் சங்க உறுப்பினர்கள் லயன் நிஜாம் முகமது, லயன் கார்த்திகேயன், லயன் மாதவன், பொறியாளர் லயன் ரகு, லயன் மகேஷ், லயன் அகல்யா மணி , லயன் பார்த்திபன், லயன் ராஜ்மோகன், லயன் மாரியப்பன், கீழையூர் லயன் மோகன், லயன் செந்தில் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரிமா சங்க செயலாளர் தங்கமணி நன்றி கூறினார்.
- கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய்.
- நகர்மன்ற தலைவர் தார்பாய் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி பாலம் தொண்டு நிறுவனம் சார்பில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட பெரியநாயகிபுரம், விசுவகொத்தமங்கலம், வீரன் நகர் பகுதியை சேர்ந்த 376 கூரை வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பில் தார்பாய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் மக்களுக்கு தார்பாய் வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் கவுன்சிலர் கோமதி செந்தில்குமார், பாலசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.
- உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.
திருவாரூர்:
கொரடாச்சேரி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் உமாப்பிரியா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் துணைத்தலைவர் பாலச்சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஸ்வநாதன், முத்துக்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தீர்மானங்களை உதவியாளர் மகேந்திரன் வாசித்தார்.
கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியதாவது. நாகூரான் (அதிமுக): மேல மற்றும் கீழ உத்தரங்குடி மயானத்தில் சாலை மற்றும் மயாண கொட்கை அமைத்து தர வேண்டும்.
சத்தியேந்திரன் (திமுக): எண்கண் ஊராட்சியில் ஈமகிரியை கட்டிடம் வேண்டும்.
ஏசுராஜ் (அதிமுக): தியாகராஜபுரம் ஆதி திராவிடர் தெரு சாலை, நீலக்குடி சுடுகாடு மயான கொட்டகை, மயானம் செல்லும் சாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.
உமாமகேஸ்வரி (திமுக): தியாகராஜபுரம் ஊராட்சி சிராய்குடி மயான சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள குடிநீர் தொட்டிக்கு மூடி இல்லாமல் உள்ளது உடனே சீரமைக்க வேண்டும்.
ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் பாலச்சந்திரன்: உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி ஆதாரத்தை வைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. மேலும் மற்ற பணிகளும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இதைத்தொடர்ந்து தலைவர் உமாப்பிரியா உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில், கோடை காலம் வருவதால் மக்களின் அடிப்படையாக குடி நீர், மின்சாரம், தட்டுப்பாடு இன்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். படித்துறை மற்றும் வாய்க்கால் மதகுகளை ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதத்தில் முடித்து விட வேண்டும்.
மேலும் படித்துறை, கல்வெட்டு, தேவைப்படும் உறுப்பினர்கள் உடனே தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். முடிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தன் நன்றி கூறினார்.
- 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
- மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் ஸ்கில் இந்தியன் டெல்டாகலை திருவிழா நடைபெற்றது. ஸ்கில் இந்தியன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் போஸ் தலைமை வசித்தார். முதல்வர் நாகராஜன், ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவிகளுக்கு திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோலப் போட்டி, நடனம் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளை நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு செல்வராஜ் எம்.பி, நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன், ஒன்றிய குழுத்தலைவர் பாஸ்கர், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் ஆகியோர் பரிசுகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் அரசு பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
முடிவில் டெல்டா கலைத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் நன்றி கூறினார்.






