என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது.
    • கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 லட்சம் மதிப்பில் உபகரணங்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    ஓ.என்.ஜி.சி சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் அதிக அளவில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக 7 பள்ளிகளுக்கு ரூ. 26 லட்சத்தில் டேபிள், நாற்காலி, கம்யூட்டர், பிரிண்டர், ஸ்மார்ட் கிளாஸ் புரஜக்டர் மேஜை, மின்விசிறி மற்றும் சிறுவர்கள் அமரும் டெஸ்க் உள்ளிடட உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    கவுரிசாமி நகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட வட்டாரக்கல்வி அலுவலர் இளங்கோவன் பேசுகையில், அறம் செய் என்பதை ஓ.என்.ஜி.சி சரியாக பின்பற்றுகிறது.

    வட்டார பள்ளிகளில் பெரும்பான்மை பள்ளிகளின் மேம்பாட்டிற்கு ஓ.என்.ஜி.சி அதிக அளவில செலவு செய்து வருகிறது என்றார்.

    மோசஸ் அரசு உதவிபெறும் பள்ளியில் நடந்த விழாவில் கலந்து கொண்ட நகர்மன்ற உறுப்பினர் வாரை பிரகாஷ் பேசுகையில், மக்களின் தேவையறிந்து நேரிடையாக பிரதிநிதிகளை அனுப்பி ஓ.என்.ஜி.சி சேவையாற்றி வருவது பாராட்டத்தக்கது என்றார்.

    நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் ரஜினி சின்னா, உமா மகேஷ்வரி சிவக்குமார், ரோட்டரி சங்க நிர்வாகிகள் ராஜ் கருனாநிதி, சொக்கலிங்கம், பள்ளி நிர்வாகி முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கொடிக்கால் பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ஸ்ரீ வைஷ்ணவி தேவி, 4-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பெனாசிர் ஜாஸ்மின், 3-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி மணிராவ், மருந்தாளுனர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தியானபுரம் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் முருகேசன், குளிக்கரை நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் மதிவாணன் கூறுகையில், ஓ.என்.ஜி.சி, சி.எஸ்.ஆர். நிதியை சரியாக பயன்படுத்தி பள்ளிகளை மேம்படுத்துவதோடு எங்கள் ஊராட்சிகளுக்கான தேவையையும் பூர்த்தி செய்கிறது என்றனர்.

    கொடிக்கால்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ. 4.38 லட்சம் மதிப்பிலும், கவுரிசாமி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலும், மோசஸ் அரசு உதவிபெறும் பள்ளிக்கு ரூ. 5.2 லட்சம் மதிப்பிலும், கானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ. 1.2 லட்சம் மதிப்பிலும், குளிக்கரை மேற்கு நடுநிலைப் பள்ளிக்கு ரூ. 2.9 லட்சம் மதிப்பிலும், தியானபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 6 லட்சம் மதிப்பிலும், சேமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 3.4 லட்சம் மதிப்பிலும் உபகரணங்களை நாகை சுவீட் தொண்டு நிறுவனம் மூலம் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஓ.என்.ஜி.சி துணை பொது மேலாளர்கள் வேணுகோபால், பிரபாகரன், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரிகள்விஜய்கண்ணன், சந்திரசேகர், ஒருங்கி ணைப்பாளர் முருகானந்தம், தலைமை ஆசிரியர்கள் ராஜரெத்தினம், பிரபாவதி, ஆனந்தி, மாலதி, லதா, விநாயகராஜன், சுகந்திபாலா, சேமங்கலம் ஊராட்சி தலைவர் முருகானந்தம், சுவீட் என்.ஜி.ஓ. ராஜேந்திரன் அந்தந்த பள்ளி மேம்பாட்டு குழு தலைவிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.
    • போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தி மாடர்ன் நர்சரி, பிரைமரி பள்ளியின் 17-வது ஆண்டு விழா மற்றும் 10-வது ஆண்டு பட்டமளிப்பு விழா திருத்துறைப்பூண்டியில் நடைபெற்றது.

    பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர்பாஸ்கர், வட்டார கல்வி அலு வலர்கள் அறிவழகன், பாலசுப்ர மணியன், டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன், யூ.கே.ஜி. மாணவர்களுக்கு பட்டம ளித்து சிறப்புரையாற்றினார். விழாவின் சிறப்பு நிகழ்வாக காமெடி நடிகர் போண்டா மணி குழந்தைகளுடன் நடனமாடி, பெற்றோர்களை உற்சாகப்படுத்தி பேசினார்.

    விழாவில் திருவாரூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைக்குழு உறுப்பினர் செல்வகணபதி போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் உஷா சண்முகசுந்தர், மின்னல் கொடி பாலகிருஷ்ணன், பாரதமாதா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் எடையூர் மணிமாறன், டெல்டா ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் காளி தாஸ், நேஷனல் பள்ளியின் தாளாளர் விவேகானந்தன், மேஜிக் புகழ் அகிலன், கராத்தே முத்துக்குமார், அங்கை ராஜேந்திரன், ஆசிரியர்கள் அருளரசு, வேதரத்தினம், சித்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக பள்ளி தாளாளர் அபூர்வநிலா அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர் தீபா ராணி ஆண்டறிக்கை வாசித்தார். முடிவில் ஆனந்தம் அறக்கட்ட ளையின் நிறுவனர் முருகானந்தம் நன்றி கூறினார்.

    விழா ஏற்பாடுகளை பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் விஜயராஜ் மற்றும் ஆசிரியர்கள் வீரலட்சுமி, திரிபுரசுந்தரி, திவ்யா, அபிராமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருவாரூரில் நாளை பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடை பெற உள்ளது.
    • இதில் பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோகத் திட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    திருவாரூர் தாலுகா தீபங்குடி கிராமத்தில் திருவாரூர் வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா வேலங்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், குடவாசல் தாலுகா கூந்தலூர் கிராமத்தில் திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா புலவர் நத்தம் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் தலைமையில் நடக்கிறது.

    மேலும் நீடாமங்கலம் தாலுகா பத்தூர் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைபதிவாளர் தலைமையிலும், மன்னார்குடி நல்லூர் கிராமத்தில் மன்னார்குடி வருவாய்கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா பழையங்குடி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பாலகுறிச்சி கிராமத்தில் திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடக்கிறது.

    எனவே, அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள் மற்றும் கைபேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம்.

    அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்த கோரிக்கை மனுக்களை அலுவலர்களிடம் மனு அளிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பணப்பயிர்களை பயிரிட அரசு உதவி செய்து வருகிறது.
    • இதனால் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்பட்டு விவசாயத்தில் இழப்பு ஏற்படுகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவனம் சார்பில் கூட்டு பொறுப்பு குழுவை சேர்ந்த பெண்களுக்கு இயற்கை இடுபொருள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

    இயற்கை இடுபொருள் மற்றும் இயற்கை வேளாண் பயிற்சியாளர் பாலம் செந்தில்குமார் செயல்விளக்கம் அளித்தார்.

    இதுகுறித்து அவர் பேசுகையில்:-

    இயற்கை இடுபொருள்க ளான பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், மண்புழு உரம், மீன் அமிலம் உள்பட 12 வகையான இடுபொருட்கள் தயாரிக்கும் முறைகள் வேளாண் பயிர்களான நெல், உளுந்து, துவரை, தானியங்கள் உள்பட அனைத்து பயிர்களுக்கும் பயன்படுத்தும் முறைகள் அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தார்.

    டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடிக்கு பிறகு பணப்பயிர்களை பயிரிட அரசு உதவி செய்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்க ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளால் நன்மை செய்யகூடிய மீன், நண்டு, நத்தைகள், சிலந்தி, குளவிகள் அழிந்து விடுகின்றன.

    இதனால் பூச்சி தாக்குதல் அதிகம் ஏற்பட்டு விவசாயத்தில் இழப்பு ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் தொழில்முனைவோராக மாற வேண்டும். ஒருங்கிணைந்த வேளாண் பண்ணையை ஏற்படுத்தி நெல், தீவனம், மாடு, ஆடு, கோழி, மீன் வளர்ப்பு, காய்கறி, பழத்தோட்டம், தென்னை, வாழை, மூலிகை, மலர் செடிகள் போன்ற பயிர்களை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம்.

    இதற்கு அரசு, வங்கிகள் உதவி செய்து வருகிறது என்றார்.

    பயிற்சியில் 50 பெண்கள் கலந்து கொண்டனர்முன்னதாக மகளிர் ஒருங்கிணைப்பாளர் நதியா அனைவரையும் வரவேற்றார்.

    முடிவில் சுந்தரி நன்றி கூறினார். 

    • நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
    • பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார்குடியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக விவசாயிகளும், பொதுமக்களும் தீவிரமாக போராடி பேரழிவிருந்து தூத்துக்குடி மாவட்டத்தை பாதுகாத்தனர். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிக்கும் விதத்தில் தமிழக மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக கவர்னர் பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மேலும் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ள போது, மாநில அரசின் கருத்தை கேட்காமலேயே ஒப்புதலை பெறாமலே கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நிலக்கரி திட்டத்தை மத்திய அரசு தீவிரமாக செயல்படுத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    அதற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு, முதலமைச்சர் எழுத்துப் பூர்வமாக பிரதமருக்கும் கடிதம் எழுதி இரண்டு தினங்கள் கடந்துவிட்டது. இதுவரையிலும் பிரதமர் அலுவலகம் கடிதம் குறித்தும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் சட்டமன்ற தீர்மானத்திற்கும் மதிப்பளித்து தனது நிலையை தெளிவுபடுத்த முன்வரவில்லை.

    இந்த நிலையில் சென்னையில் நாளை பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்பது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உருவாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் கவர்னருக்கு கண்டனம் தெரிவித்தும், நிலக்கரி திட்டம் குறித்து பதில் அளிக்க மறுக்கும் பிரதமருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கிற வகையில் விழாவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும்.
    • நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் தென்கிழக்கு முனையாகவும் பணப்பயிர்கள் செழித்தோங்கும் வேளாண்மைப் பகுதியாகவும் மற்றும் கடல் சார் பகுதியாகவும் விளங்குகின்ற வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு வருகின்ற 8-ந் தேதி ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    20 ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் இந்த ரெயில் சேவையால் பலரும் பயன்பெறுவர்.

    புகழ் பெற்ற வேதாரண்யம், அகத்தியன் பள்ளி, திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் ரெயில் சேவை தொடங்க இருப்பது பாராட்டுக்குரியதாகும். இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராட்டுக்கள்.

    கன்னியாகுமரி போன்று வேதாரண்யமும் இந்திய நாட்டின் கடைசி எல்லையாக குறிப்பாக தென்கிழக்கு முனையாக, எல்லைப்பகுதியாக சிறப்பிடம் பெற்று இருப்பதால் வட இந்தியாவை யும் தென்னிந்தியாவையும் இணைக்கக்கூடிய வகையில் வேதாரண்யம் அகத்தியன்பள்ளியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயிலை இயக்குவதற்கும், வேதாரணியம் உப்பு சத்தியாகிரகத்தின் நினைவாக தியாகி சர்தார் வேதரத்தனம் பெயரில் வாரம் இருமுறை வேதாரண்யத்தில் இருந்து புதுடெல்லிக்கு திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், சென்னை வழியாக வருகின்ற ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தை முன்னிட்டு விரைவு ரயிலை இயக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கல்லூரி சார்பில் தூய்மை பணி செய்யப்பட்டது.
    • வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு 1 சார்பில் மணலியில் நடைப்பெற்று வரும் முகாமின் மூன்றாம் நாள் சிவன் கோயில் தூய்மை பணி செய்யப்பட்டது.

    அப்போது பேரிடரை எதிர் கொள்வோம் என்ற தலைப்பில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் பேசும்போது, எதிர்காலங்களில் காலநிலை மாறுபாடுகளால் பேரிடர் என்பது தவிர்க்க முடியாதததாகிவிட்டது.

    அனைவரும் பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.

    வெள்ளம், புயல், தீ விபத்து, போன்ற காலங்களில் இழப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

    நம்மை மட்டுமல்ல மற்றவர்களையும் காப்பாற்ற வேண்டும்.

    அனைவரும் பேரிடர், முதலுதவி பயிற்சிகளை பெற வேண்டும்.

    பாதிப்பு ஏற்படும் நேரங்களில் அரசு துறைகளுக்கும், காவல், தீயணைப்பு துறை, மருத்துவ துறைக்கும் தகவல் தெரிவிக்கவேண்டும்.

    ஒவ்வொருவரும் முன்கள மீட்பாளர்களாக தயாராக வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் சுபத்ரா ரவி தலைமை வகித்தார்.

    வர்த்தக சங்க தலைவர் ரவி, மகளிர் குழு செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியை என். எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பன்னீர்செ ல்வம், பேராசிரியர் லோகநாதன் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் தண்ணீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

    இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

    • கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பொதக்குடி, சித்தாம்பூர், அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் போலீசார் கூத்தாநல்லூர், கோரையாறு, பொதக்குடி, சித்தாம்பூர், வாழச்சேரி, லெட்சுமாங்குடி, அதங்குடி உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அதங்குடி பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் இருவரும் அதங்குடி, சறுக்கக்கரை தெருவைச் சேர்ந்த விஜய், தமிழரசன் என்பதும், அவர்கள் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விஜய், தமிழரசன் 2 பேரையும் கைது செய்தனர்.

    • சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    • பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலை அருகே நிறைவுபெற்றது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அடுத்த தண்டலைச்சேரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நேற்று தொடங்கி வருகிற 9-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    தொடக்க நிகழ்ச்சியாக நேற்று சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் அங்கம்மாள் தலைமை தாங்கினார்.

    நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன், துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்து பேரணியை தொடங்கி வைத்தனர்.

    பேராசிரியர் திலகர், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் மற்றும் பேராசிரியர்கள், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பலர் பேரணியில் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பன்னீர்செல்வம் செய்திருந்தார்.

    பேரணியானது பிரதான சாலை வழியாக சென்று அண்ணா சிலையில் நிறைவுபெற்றது.

    • ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    முத்துப்பேட்டை:

    தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார தலைவர் முருகையன், செயலாளர் எலிசபெத் ராணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவக்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் மத்திய அரசு 11 இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூரில் இன்று தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பொற்கிழி வழங்கினார்.

    பின்னர் அவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற துறை சார்ந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டத்தில் விளையாட்டு கட்டமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பல்வேறு நல்ல திட்டங்களை திருவாரூர் மாவட்டத்தில் செயல்படுத்தி உள்ளது. இன்னும் பல்வேறு திட்டங்கள் வர உள்ளன.

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் மத்திய அரசு 11 இடங்களில் நிலக்கரி எடுக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக டெல்டா மாவட்டம் விளங்குகிறது. இதனால் ஒருபோதும் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்காது. இதனை உறுதியாக கூறுகிறேன்.

    எனவே விவசாயிகள் அச்சமடைய வேண்டாம். இது தொடர்பாக நாளை சட்டபேரவையில் பேச உள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×