என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • மன்னார்குடியில் மின் விபத்துகளை தடுக்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • மின் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    திருவாரூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருவாரூர் மின் பகிர்மான வட்டம் மன்னார்குடி நகர உப கோட்டம் சார்பில் மின் வாரிய ஊழியர்களுக்கு மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

    நகர உதவி செயற் பொறியாளர் சா.சம்பத் தலைமை தாங்கினார். முகாமில் பணியின் போது மின் விபத்து ஏற்படாமல் பணியாற்ற வேண்டும்.

    மன்னார்குடியில் மின் விபத்துகளை தடுக்க பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

    கையுறை, இடுப்புக் கயிறு மற்றும் எர்த் ராடு ஆகிய மின் பாதுகாப்பு சாதனங்களை முறையாக பயன்படுத்தி விழிப்போடு பணியாற்ற வேண்டும்.

    இயற்கை இடா்பாடுகளால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ, மின் கசிவுகள் ஏற்பட்டாலோ உடனடியாக அந்த இடத்தில் மின்சாரத்தை துண்டித்து முன் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

    மேலும் மின் விபத்தில் சிக்கியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    முடிவில் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • சிலம்பரசன் கொரடாச்சேரி போலீசில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
    • பட்டப்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம், கண்கொடுத்தவணிதம் அடுத்த காவாலகுடியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 35). இவர் கட்டுமான தொழிலாளியாக உள்ளார்.

    இவர் தனது ஊருக்கு அருகில் உள்ள மேலராதாநல்லூரை சேர்ந்த ஒருவரிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1.5 லட்சம் கடன் வாங்கி உள்ளார். அதில் ரூ.1 லட்சத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், மீதம் ரூ.2 லட்சம் தர வேண்டும் என அவர் சிலம்பரசனிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து, சிலம்பரசன் கொரடாச்சேரி போலீசில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சிலம்பரசன் அதிருப்தியில் இருந்துள்ளார்.

    இந்நிலையில், மனவேதனையில் இருந்த சிலம்பரசன் இன்று காலை பட்டப்பகலில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று வாசல் முன்பு அவர் பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு அலுவலகத்திற்குள் ஓடி உள்ளார். அப்போது அருகில் இருந்தவர்கள் தடுத்து இவர் மீது துணியை போர்த்தி தீயை அணைத்தனர்.

    பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக, சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றவரை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சிலம்பரசனின் மனைவி உமாபதி போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து, திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டப்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் கந்துவட்டி கொடுமையால் தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரூ.4.88 லட்சம் மதிப்பில் டெஸ்க், கம்யூட்டர்ஸ் பிரிண்டர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.
    • ரூ.4.25 மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை பென்ஞ்ச், பீரோ போன்றவை வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    கொரடாச்சேரி ஒன்றியம், எருக்காட்டூர் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.2.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையையும் கொரடாச்சேரி ஒன்றிய துணை தலைவர் பாலசந்தர் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் ராஜா, ஆசிரியர் மன்ற மாநில தலைவர் ரவி, ஓ.என்.ஜி.சி பொது மேலாளர் சரவணன், துணை பொது மேலாளர் வேணுகோபால், சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி சந்திரசேகரன், தலைமை ஆசிரியை கீதா, ஆசிரியை புவணா, சமூக பொறுப்புணர்வு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், எருக்காட்டூர் ஊராட்சி துணை தலைவர் கீதா சங்கர் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், கே.ஆர்.டி.எஸ். நிறுவன பொறுப்பாளர் கோவிந்தராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருவாரூர் ஒன்றியம், அடியக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.4.88 லட்சம் மதிப்பில் டெஸ்க், கம்யூட்டர்ஸ் பிரிண்டர், பீரோ தொலைக்காட்சி போன்ற பொருட்கள் அர்ப்பணா என்.ஜி.ஓ. மூலம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் சத்திய நாராயணன், தலைமை ஆசிரியரும், பள்ளி மேலான்மைக்குழு தலைவருமான ஆயிஷத்துல் ஜாமியா மற்றும் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புலிவலம் தொடக்கப்ப ள்ளிக்கு ரூ.4.25 மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம், மேஜை பென்ஞ்ச், டி.வி நாற்காலி, மின்விசிறி, பீரோ போன்றவை வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் காளிமுத்து, துணைத்தலைவர் கார்த்தி, ஊராட்சி செயலாளர் தங்கதுரை, தலைமை ஆசிரியர் வடுகநாதன் மற்றும் ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அனைத்து நிகழ்ச்சியிலும் ஓ.என்.ஜி.சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

    நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் என்று சொல்லப்படும் உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை நாம் பழங்கள் உண்பதன் மூலம் பெற முடியும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 150 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

    பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் சரியான சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததால் சந்தைக்கு விற்பனைக்காக வரும்போது அவற்றின் தன்மை குறைந்துவிடுகிறது.

    மேலும் கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது. பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் வடிகட்டிய பழகூலுடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயார் செய்வதன் மூலம் பானங்களை கெடாமல் வைத்திருக்க முடியும்.

    இதற்கான பயிற்சிகள் அனைத்தும் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்று தரப்படுகின்றது.

    ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.
    • தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருவாரூர்:

    நீடாமங்கலத்தில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் திருப்பணிகள் நிறைவு பெற்று குடமுழுக்குநடைபெற்றது.

    இதையொட்டி கணபதி பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது.

    நேற்று காலை யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து குடமுழுக்கு நடந்தது.

    பின்னர் ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். .

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.
    • தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே கோட்டூர் புதுத்தெருவை சேர்ந்தவர் தமிழரசன் (வயது35).

    இவர் குடும்பத்தோடு கூரை வீட்டில் வசித்து வந்தார்.

    இவரது மனைவி நேற்று மதியம் கியாஸ் அடுப்பின் அருகே விறகு அடுப்பில் சமையல் செய்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் சிலிண்டரில் தீப்பிடித்து வெடித்து சிதறியது.

    இதில் கூரை வீ்டு முற்றிலும் எரிந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமடைந்தன.

    இது குறித்து தகவல் அறிந்த கோட்டூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

    இது குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிலிண்டரில் தீப்பிடித்த உடன் வீட்டில் உள்ள அனைவரும் ெவளியே சென்று விட்டதால் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

    • ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
    • ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    திருவாரூர்:

    ஏசு சிலுவையில் அறைந்த தினமான புனிதவெள்ளி சிறப்பு பிரார்த்தனை கடந்த 7-ந் தேதி உலகம் முழுவதும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நடந்தது.

    இதில் ஏசு இறந்ததை போன்று அவரது சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது.

    அதையடுத்து ஏசு மீண்டும் உயிர்த்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் புனித பாத்திமா அன்னை ஆலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் திருவாரூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பகுத்தறி மாணிக்கம் அந்தோணியார் ஆலயத்திலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    • சங்கடகர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடை பெற்றது
    • ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை தெற்கு தெருவில் உள்ள ராஜ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.

    இதனை முன்னிட்டு ராஜ விநாயகருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விநாயகருக்கு கொழுக்கட்டை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

    இதே போல் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஞானசக்தி விநாயகர் கோவில் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலில் உள்ள 16 விநாயகருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    இதேபோல் நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர், மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
    • ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதார ண்யம் அருகே உள்ள அகஸ்தியம்பள்ளி இடையே ரெயில் போக்குவரத்து 20 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கியது. மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரெயில் பாதையாக ரூ.480 கோடி மதிப்பீட்டில் மாற்றப்பட்ட நிலையில் நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

    அதனை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருச்சி கோட்ட ரெயில்வே பொதுமேலாளர் மணீஷ் அகர்வால், செல்வராஜ் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் பூண்டி கலைவாணன், மாரிமுத்து, ஓ.எஸ் மணியன், ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர், நகராட்சி தலைவர் கவிதா பாண்டியன், வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தில் அகஸ்தியம்பள்ளிக்கு புறப்பட்ட ரெயிலுக்கு கொடி அசைத்து வழியனுப்பி வைத்தனர். அந்த ரெயிலில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.

    கரியாப்பட்டினம், குரவப்புலம், தோப்புத்துறை, வேதாரண்யம், அகஸ்தியம்பள்ளி ஆகிய ரெயில் நிலையங்களில் ரெயிலுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அந்தந்த ரெயில் நிலையங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.இந்த ரெயிலானது, தினசரி காலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து புறப்பட்டு 6.45 மணிக்கு அகஸ்த்தியம் பள்ளியையும், மீண்டும் காலை 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்து புறப்பட்டு திருத்துறைப்பூண்டியை காலை 7.45 மணிக்கும் வந்தடையும். அதேபோல், மாலை 6 மணிக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்தும், மீண்டும் 7 மணிக்கு அகஸ்தியம்பள்ளியில் இருந்தும் இந்த இயக்கப்படுகிறது.

    • சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு போலியாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்ததார்.
    • குறைந்த படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபடி அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக முத்துப்பேட்டை மற்றும் எடையூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் நாச்சிகுளம் பகுதியில் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம்(வயது 62) என்பவர் சித்த மருத்துவம் கற்றுக்கொண்டு போலியாக பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் கல்யாணசுந்தரத்தை கைது செய்தனர். அதேபோல் முத்துப்பேட்டை அடுத்த அடைஞ்சவிளாகம் பகுதியில் போலீசார் சோதனை செய்தபோது அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்(56) என்பவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்தது தெரியவந்தது .இதனையடுத்து ராஜேநதிரனை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் முத்துப்பே ட்டை அடுத்த எடையூர் போலீசார் அம்மலூர் மாரியம்மன் கோவில் தெரு வில் சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன்(65) என்பவர் குறைந்த படிப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தபடி அப்பகுதி மக்களுக்கு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து சிவசுப்பிரமணியனை கைது செய்தனர்.

    • நில உடமை விபரம் சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    • உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் மற்றும் குடவாசல் விவசாயிகளுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஒரு தகவல் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய , மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக "வேளாண் அடுக்கு" என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை, தோட்டக்கலை. கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு ,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு , சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிக ளுடைய விபரங்கள் குறிப்பாக நில உடமை விபரம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் அந்தந்த கிராமங்களினங கிராம நிர்வாக அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் அனைத்து விவசாய நல திட்டங்களும் GRAINS மூலம் விவசாய பெருமக்களை சென்றடை உள்ளது. இதனால் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம்ஆகியவற்றுடன் உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்ததாக பேரளம் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.
    • மருத்துவம் படிக்காமல் தனது மருந்தகத்தில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 52.) இவர் ஹோமியோ பதி மருத்துவம் படித்து விட்டு அப்பகுதியில் உள்ள நோயாளிகளுக்கு தனது வீட்டிலேயே அலோபதி மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததாக தொடர்ந்து வந்த புகாரையடுத்து பேரளம் போலீசார் மாரியப்பனை அதிரடியாக கைது செய்தனர்.

    மேலும் கொல்லுமாங்குடி அருகில் உள்ள சிறுபுலியூர் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 52) என்பவர் ஹோமியோபதி மருத்துவம் படித்துவிட்டு தனது மருந்தகத்தில் நோயாளிகளுக்கு அலோபதி முறையில் சிகிச்சை அளித்ததாக பேரளம் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.

    அதே போன்று நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் பகுதியில் மருந்தாளுநர் படிப்பு முடித்துவிட்டு மருந்தகம் நடத்தி வந்த செந்தில் என்பவர் மருத்துவம் படிக்காமல் தனது மருந்தகத்தில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததாக செந்திலை நன்னிலம் போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதேபோன்று மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததாக கூறி நாச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், இடும்பாவனம் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன், பெருகவளந்தான் பகுதியை சேர்ந்த சிவகுருநாதன், அம்மனூர் பகுதியைச் சேர்ந்த சிவசுப்பிரமணியன், திருப்பத்துறை பகுதியைச் சேர்ந்த துரைராஜ், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த குமார், சேகரை பகுதியைச் சேர்ந்த சவுரிராஜ், உள்ளிட்ட பத்து போலி மருத்துவர்கள் காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ×