என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினமும் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஏதாவது சொல்லி வருகிறார்.

    டெல்டா பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் 1½ லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர். டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தான் உண்டு என்பதை விவசாயிகளும், நாட்டு மக்களும் அறிந்துள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாததை தமிழக அரசு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நகர்மன்ற தலைவர் மன்னை. சோழராஜன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா. கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அருகே பைங்காட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தேசிகா என்ற மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இவர் தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியையும், பயிற்றுவித்த தலைமை யாசிரியர் மற்றும் ஆசிரியர்களை பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர்.

    • உரம் மற்றும் பூச்சி மருந்துகளை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.
    • பருத்தி சாகுபடி பயிர்கள் 20 முதல் 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் வருடம் தோறும் பருத்தி சாகுபடி பரப்பளவு அதிகரித்து வருகிறது.

    கடந்த சில ஆண்டுகளாக பருத்தி பஞ்சு கொள்முதல் விலை அதிகரித்து வருவதால் விவசாயிகள் ஆர்வமுடன் பருத்தி சாகுபடி செய்ய தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருத்தி சாகுபடி பரப்பு அதிகரித்து வருகிறது.

    திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 16,261 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டது.

    பருத்தி சாகுபடிக்கு சாதகமான சீதோசன நிலை நிலவியதால் விளைச்சல் அதிகரித்தது.

    அதற்கு ஏற்ற வகையில் பருத்தி பஞ்சின் கொள்முதல் விளையும் அதிகரித்தது.

    இதனால் இந்த ஆண்டும் பருத்தி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 16,500 ஹெக்டேர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் 500 ஹெக்டேர் வரை பருத்தி சாகுபடி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பருத்தி சாகுபடியினை பெரும்பாலும் சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தடையின்றி சொட்டு நீர் பாசனம் நடைபெறும் வகையில் 24 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் பருத்தி சாகுபடி பயிர்கள் 20 நாட்களில் இருந்து 90 நாட்கள் வரையிலான இளம் பயிர்களாக உள்ளது. இப்பயிர் நன்கு வளர உரம் தேவைப்படுகிறது.

    பருத்தி செடிகளில் மாவு பூச்சி, அந்து பூச்சிகள் உள்ளிட்ட பூச்சிகள் தாக்குவதற்கு வாய்ப்பு உள்ளது.

    அதனால் பூச்சிகளிடமிருந்து பருத்தி பயிர்களை காப்பாற்றும் வகையில் விவசாயிகளுக்கு உரம் மற்றும் பூச்சி மருந்துகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் அல்லது வேளாண் அலுவலகங்கள் மூலம் 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் பருத்தி பஞ்சுகளை கொள்முதல் செய்ய இந்திய பருத்தி கழகத்திலிருந்து முகவர்களை, மாவட்டங்களுக்கு நேரடியாக வரவழைத்து கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.
    • வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

    திருவாரூர்:

    எட்டாம் வகுப்பு மாணவ ர்களுக்கு ஆண்டு தோறும் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது.

    தமிழ்நாடு தேர்வு இயக்கத்தால் நடத்தப்படும் இத்தேர்வில் வெற்றி பெறுபவருக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இதற்கான தேர்வு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது.

    தமிழகத்தில் உள்ள 55 கல்வி மாவட்டங்களிலும் 6695 மாணவர்கள் இத்தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இதில் திருவாரூர் மாவட்ட த்தில் மட்டும் 86 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

    இது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் 28 வது இடமாகும்.

    இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாதம் ரூ. 1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.

    அந்த வகையில் 48 மாதங்களுக்கு தலா ரூபாய் ஆயிரம் வீதம் 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

    இந்தத் தொகை மாணவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தேசிய திறனறிவு தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவி களுக்கு கல்வித்துறை அதிகாரிகளும், ஆசிரிய ர்களும், பெற்றோர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • 4 வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.
    • நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வேளுர் கண்ணந்தங்குடியில் நான்கு வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதமடைந்தது.

    இதில் பணம், நகை, மாணவர்களின் சான்றிதழ், நோட்டு புத்தகம், பாத்திரங்கள், மளிகை பொருட்கள், துணிகள் சாம்பலானது.

    இதையடுத்து தீ விபத்தில் வீடு இழந்தவர்களுக்கு பாலம் தொண்டு நிறுவனம் மூலம் செயலாளர் செந்தில்குமார், நிவாரணமாக தார்பாய் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் பன்னீர்செல்வம், பிரைட் பீப்புள்ஸ் நிறுவனர் பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • கூட்டமானது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் நடத்தப்பட்டது.
    • ரெயில்வே ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கி, புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி நகர புகைப்பட கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    இதில் திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் பொதுமக்கள் அனைவரும் சென்று பயன்பெறவேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சங்க கூட்டமானது திருத்துறைப்பூண்டி முதல் அகஸ்தியம்பள்ளி வரை செல்லும் ரெயிலில் நடத்தப்பட்டது.

    மேலும் ரெயில்வே நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சங்கத்தின் சார்பாக இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் புகைப்பட கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சசிசுந்தர் மற்றும் நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

    • அம்பேத்கார் உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    • டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைந்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    திருவாரூர்:

    சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132 வது பிறந்த நாளைமுன்னிட்டு கலெக்டர் அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் சமத்துவ நாள் உறுதிமொழியி னையும் எடுத்துக் கொண்டார்.

    அப்போது அவர் பேசுகையில், டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் சாதி வேறுபாடுகள் இல்லாத சமத்துவ சமுதாயம் அமைந்திட நாம் அனைவரும் பாடுபடுவோம்.

    சக மனிதர்களை ஜாதியின் பெயரால் ஒருபோதும் அடையாளம் காண மாட்டோம் என்றும் உளமாற உறுதி ஏற்று கொள்வோம். இவ்வாறு கலெக்டர் சாரு ஸ்ரீ தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ. சிதம்பரம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப்பெருவிழா 55 நாட்கள் நடைபெற்றது.
    • திருவிழாவை முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட கொடி இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருவாரூர்:

    திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் பங்குனி உத்திரப்பெருவிழா 55 நாட்கள் நடைபெற்றது.

    இதில் முக்கிய நிகழ்வாக ஏப்ரல் 1-ம் தேதி திருவாரூர் ஆழி தேரோட்டமும் நடைபெற்றது. இதன் நிறைவாக நேற்று பங்குனி உத்திர பெருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிறைவு நாளை முன்னிட்டு கொடி இறக்கம் மற்றும் கோயில் ஆச்சாரியர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு ஏற்றி வைக்கப்பட்ட கொடி இறக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை முன்னிட்டு சந்திரசேகரர் மற்றும் ஆதி சண்டிகேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது.

    அதன் பின்னர் கொடி இறக்கம் எனப்படும் துவஜாஅவரோகணம் நடைபெற்றது.

    கொடியினை இறக்கிய ஆச்சாரியார்கள் அதனை பயபக்தியுடன் தோலில் சுமந்து சென்று கோவில் மண்டபத்தில் வைத்தனர். அதனை தொடர்ந்து தேரோட்டம் உள்ளிட்ட பங்குனி திருவிழா நிகழ்ச்சி சிறப்புடன் நடைபெற உதவியாக இருந்த கோயில் ஆச்சாரியார்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    ஆச்சார்ய உற்சவத்துடன் திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா நிறைவுற்றது.

    • திருவாரூரில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.

    திருவாரூர்:

    தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் வடிவேலு மற்றும் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் தீ தொண்டு நாளை முன்னிட்டு ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தப் பிரச்சாரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    • ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர்
    • அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும், சம்பா மற்றும் குறுவை, தாளடி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் பிறகு உளுந்து பயறு மற்றும் வரப்பு உளுந்து சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

    இத்தகைய சாகுபடி பணிகளுக்கு பிறகு, மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    என்றாலும், ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு முதல் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

    அதேபோல, நடப்பு ஆண்டில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள், வயல்களில் பருத்தி பயிர்கள் இட்டனர்.

    அப்போது, சிறு பயிர்களாக பருத்தி பயிர்கள் இருந்த போது, பருவம் தவறிய மழையால், அவைகள் சேதமாயின.

    அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    தற்போது, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் எந்திரம் மூலம் பாத்திகட்டும் பணிகள் மற்றும் களைகள் அகற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது.
    • மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டத்தில் அதிகாலை கடும் பனிப்பொழிவு இருந்தது. பகலில் வெயில் சுட்டெரித்ததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது.

    தமிழகத்தை பொறுத்தவரை தை மாதத்தில் இருந்து மாசி மாதத்திற்குள் பனியின் தாக்கம் மெல்ல மெல்ல குறையும். ஆனால் பங்குனி மாதம் நிறைவு பெற்ற நிலையிலும் பனியின் தாக்கம் குறைந்தபாடில்லை. திருவாரூரில் அடிக்கடி இரவு முதல் அதிகாலை வரை கடுங்குளிர் நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு நேரங்களில் பனிப்பொழிவு இருந்தாலும் மதியம் அடிக்கக்கூடிய வெயில் கடுமையாக இருக்கிறது

    திருவாரூரில் நேற்று அதிகாலை வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வயல் வெளிகளில் புகைமூட்டம் போல் காட்சி அளித்தது. திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு வந்த ரெயில்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டப்படி வந்தன.

    மேலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டப்படியும், குறைந்த வேகத்திலும் சென்றதையும் காண முடிந்தது.

    பனியின் தாக்கத்தால் காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள சுவெட்டர், குல்லா, மப்ளர் உள்ளிட்டவற்றை அணிந்து சென்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் நேற்று சிரமப்பட்டனர்.

    இதேபோல் நேற்று காலை மன்னார்குடி பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. காலை 8 மணி வரை இந்த பனிப்பொழிவு நீடித்தது. இதனால் சாலையில் சென்ற வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக சென்றனர்.

    இதே போல் திருமக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் முழுவதும் கடும் வெயில் சுட்டெரித்த நிலையில், நேற்று காலை கடும் குளிருடன் பனிப்பொழிவு ஏற்பட்டது.

    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா என ஆய்வு.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர்நலத்துறை மூலம் செயல்படுத்தப்பட்ட திட்ட செயல்விளக்கங்களைகள ஆய்வு செய்து உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியை வேளாண்மை துணை இயக்குநர் விஜயலட்சுமி மற்றும் உதவி இயக்குநர் ஜெயசீலன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    ஏரி வேலூர் கிராமத்தில் பருத்தியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு, ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செயல்விளக்கம் திடல் ஆகியவற்றை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட விவசாயியிடம் திட்டம் பற்றி விளக்கி ஆலோசனை வழங்கினர்.

    அரித்துவாரமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    மேலும் ஆலங்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் இடுபொருட்கள் பதிவேடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    மேலும் ஆலங்குடி, நார்தாங்குடி, ஆகிய பகுதிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தென்னங்கன்று மற்றும் வேளாண் கருவிகள் ஆகியவை உரிய நபர்களிடம் சேர்ந்துள்ளதா ஆய்வு செய்யப்பட்டது.

    ஆய்வின் போது வலங்கைமான் வட்டார வேளாண்மை அலுவலர் சூர்யமூர்த்தி, உதவி வேளாண்மை அலுவலர்கள் சிவலிங்கம், சரவணன், சிரஞ்சீவி, சப்தகிரிவசன் உடன் இருந்தனர்.

    ×