search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை முதல்-அமைச்சருக்கு தான் உண்டு- ஏ.கே.எஸ். விஜயன் பேட்டி
    X

    மன்னார்குடியில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ். விஜயன் பேட்டி அளித்தார்.

    டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை முதல்-அமைச்சருக்கு தான் உண்டு- ஏ.கே.எஸ். விஜயன் பேட்டி

    • விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் எம்.பி.யும், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியுமான ஏ.கே.எஸ். விஜயன் நேற்று நிருபர்களு க்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தினமும் செய்திகளில் இடம் பெற வேண்டும் என்பதற்காக ஏதாவது சொல்லி வருகிறார்.

    டெல்டா பகுதியை சேர்ந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் 1½ லட்சம் விவசாய பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி விவசாய உற்பத்தியை பெருக்கியுள்ளனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் உண்மையான டெல்டாகாரர். டெல்டா பகுதியில் நிலக்கரி எடுக்கும் திட்டம் ரத்தான பெருமை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தான் உண்டு என்பதை விவசாயிகளும், நாட்டு மக்களும் அறிந்துள்ளனர்.

    விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட்டு இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செய்யாததை தமிழக அரசு செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நகர்மன்ற தலைவர் மன்னை. சோழராஜன், மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் கார்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா. கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×