என் மலர்tooltip icon

    திருவாரூர்

    • கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் கோடை வெயில் தாக்கம் குறித்து அனைத்து தரப்பினர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    கோடைவெயில் வெப்பம் 21.4.23 முதல் 24-ந்தேதி வரை 4 நாட்களுக்கு கூடுதலாக 4 சதவீதம் அதிகரிக்க கூடும் என்பதால் பொதுமக்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    வெப்பம் மற்றும் வெப்ப அலை பாதிப்புக்களை தடுக்க செய்ய வேண்டியவை, வெயிலில் இருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகளாக உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும் தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும் வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும்.

    ஒ.ஆர்.எஸ். எலுமிச்சை ஜீஸ், மோர் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.

    பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.

    முடிந்தவரை குழந்தைகள், முதியோர்கள் வெயில் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும், வெளியில் செல்லும் போது காலணிகளை கட்டாயம் அணிய வேண்டும்.

    கால்நடைகளுக்கு தீவனங்களை வெட்ட வெளியில் போடவேண்டும். அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட வேண்டாம், பறவைகளுக்கு போதுமான நிழற்கூரைகள் அமைத்துக் கொடுத்து போதுமான நீர் கொடுக்க வேண்டும்.

    மேலும், பருவநிலை மாற்றங்களினால் இந்தாண்டு கோடை வெயில் துவக்கத்திலேயே வெப்பம் அதிகமாக உள்ளதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட்சர்க்யூட் ஏற்பட்டு அதில் ஏற்படும் தீப்பொறியினால் கூரை வீடுகள் எளிதில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது.

    மேலும், மாடி வீடுகளில் மேல் கூரையில் ஏற்படும் அதிக வெப்பத்தினால் வீட்டின் உள்ளே மேல்புறம் உள்ள இரும்புகள் சூடாகி மின்விசிறி, டியூப்லைட் கழன்று கீழே விழும் தன்மையை பெறுகின்றன.

    எனவே, கோடை முடியும் வரை எச்சரிக்கையாக இருப்பதுடன் கூரை வீடுகளில் வசிப்பவர்கள் தண்ணீரை வைத்து கொள்ளலாம். விலை உயர்ந்த பொருட்கள், நில ஆவணங்கள் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.

    கேஸ் சிலிண்டர்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது.

    விறகு அடுப்புகளை பயன்படுத்திய பிறகு தண்ணீர் ஊற்றி அனைத்து விட வேண்டும்.

    மண்ணெண்ணை விளக்குகளை கவனமாக கையாள வேண்டும். கோடை வெயிலின் தாக்கத்தினை குறைந்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பணியினை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொள்ளவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம், வருவாய் கோட்டாட்சியர்கள் திருவாரூர் சங்கீதா, மன்னார்குடி.கீர்த்தனா மணி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கீர்த்தனா மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவர் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    முத்துப்பேட்டை:

    தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை தேர்வில் முத்துப்பேட்டை அடுத்த தொண்டியக்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் கீர்த்தனா, பிரியதர்ஷினி, தரணிகா, ஜீவகன், தேஷிகா, சாந்தினி, விக்னேஷ், கண்ணன் ஆகிய 8 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் கீர்த்தனா 122 மதிப்பெண்களும், பிரியதர்ஷினி 121 மதிப்பெண்களும் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.

    இந்நிலையில், வெற்றிபெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களையும் பள்ளி தலைமையாசிரியர் மனோகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் துரை உத்திராபதி, கூட்டுறவு சங்க தலைவர் உலகநாதன், ஊராட்சி தலைவர் கமலா பூவாணம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் பாராட்டினர்.

    • குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டிடம் ரூ.13.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.
    • சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிறைய சேவைகள் செய்து வருகிறோம்.

    திருத்துறைப்பூண்டி:

    ஓ.என்.ஜி.சி. சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் திருவாரூர் புலிவலத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான சிறப்பு பள்ளி கட்டிடம் சுமார் 13.7 லட்சம் மதிப்பீல், திருவாரூர் புலிவலம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த புதிய பள்ளி கட்டிடத்தை திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து, சிறப்பு குழந்தைகளின் பயிற்சி பற்றியும் அவர்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இங்கு பயிற்சி பெற்ற பள்ளிக்குழந்தைகளை மற்ற பள்ளிகளில் சேர்ந்து படிக்கும் அளவுக்கு மேம்படுத்திட ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா தலைமை வகித்தார்.

    திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதாஓ.என்.ஜி.சி.குழுமபொது மேலாளர் மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பேசிய ஓ.என்.ஜி.சி.குழும பொது மேலாளர் மாறன் இது மாதிரி பள்ளிகள் கட்டியதில் எங்கள் நிறுவனம் உண்மை யில் பெருமை கொள்கிறது.

    இந்த வாய்ப்பை அளித்த உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.சமுக பொறுப்புணர்வு திட்டத்தில் நிறைய சேவைகள் செய்து வருகிறோம்.

    இன்னும் சமுக பணியை செய்யவிருக்கிறோம் என்பதை தெரிவிப்பதோடு மாவட்டஒன்றிய நிர்வாகத்திற்கும்பள்ளி கல்வித்துறைக்கும்நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தரராஜன், வட்டாட்சியர் நக்கீரன்,வட்டா ரவளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்ரமனியன் ஓ.என்.ஜி.சிபொதுமேலாளர் சரவணன், பிரபாகரன்சமூக பொறுப்புணர்வு திட்ட அதிகாரி விஜய்கண்ணன் முதன்மை பொறியாளர் மாரிநலநாதன், சி.எஸ். ஆர். திட்ட ஒருங்கிணை ப்பாளர் முருகானந்தம்புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் காளிமுத்து, ஒன்றிய கவுன்சிலர் தவுலத் இக்பால், ஊராட்சி துணைத்தலைவர் மக்கள் கார்த்தி கல்வி அலுவலர்கள் இளங்கோவன், செல்வம் மேற்பார்வையாளர் சாந்தி,மாவட்ட மாற்று திறனாளிகள் நல அலுவலர் புவனாபயிற்சி ஆசிரியர்கள் சாந்தி ,மது மற்றும் பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.
    • ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது.

    அதேபோல், தண்டலச்சேரி அருகே கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.

    இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன், செயலாளர் தங்கமணி, மாதவன், செல்வ முத்துக்குமரன், துரை ராயப்பன், சீனிவாச பாபு, ராஜ் மோகன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

    இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது.

    திருவாரூர்:

    திருவாரூர் வலங்கைமான் பகுதியில் ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

    ஊர்வலத்தை நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு இலக்கியா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இ்ந்த ஊர்வலம் வலங்கைமான் கடைத்தெரு, கும்பகோணம் ரோடு, மகா மாரியம்மன் கோவில், வடக்கு அக்ரஹாரம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று போலீஸ் நிலையம் முன்பு முடிவடைந்தது.

    இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது,

    சாலை விதிகளை மதிப்பது குறித்து ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை டிரைவர்கள், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு போலீசார் வழங்கினர்.

    இதில் வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்- இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் மற்றும் வலங்கைமான், குடவாசல் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.
    • ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேலை சாலையில் ஆட்டு சந்தையில் நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

    குறிப்பாக ஆயக்கரம்பலம், வேதாரண்யம், கட்டிமேடு ஆலத்தம்பாடி, துளசிப்பட்டணம் வடபாதி ஆதிரங்கம் கச்சனம் மணலி வேலூர் முத்துப்பேட்டை ஆலங்காடு மருதவனம் கலப்பால் பல்லாங் கோயில் மேட்டுப்பாளையம் விளக்குடி கோட்டூர் போன்ற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமார் ரூ. 25 லட்சத்துக்கு மேல் ஆடுகள் வியாபாரம் ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார்.
    • அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகில் உள்ள மருதூரை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 24). இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக அங்கு வீடு எடுத்து தங்கி வசித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து புறப்பட்டு தோழியுடன் அலுவலகத்திற்கு சென்றார்.

    மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்னதாகவே தனக்கு வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவரது தோழி வீட்டிற்கு சென்று பார்த்த போது அங்கு அர்ச்சனா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே நன்னிலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்து கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் அவரது செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் அர்ச்சனா கடைசியான பேசிய வீடியோகாலை பார்த்தனர். அதில் அவர் நாகை மாவட்டம் பஞ்சநதிகுளம் வடகாட்டை சேர்ந்த சத்யராஜ் (வயது 26) என்பவருடன் பேசியது தெரிய வந்தது. இதையடுத்து சத்யராஜை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அர்ச்சனாவும் சத்யராசும் காதலித்து வந்துள்ளனர்.

    ஆனால் அர்ச்சனாவை விட்டு விட்டு சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியுள்ளார். இதனால் அர்ச்சனா சத்யராஜ் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த மனவேதனையில் அர்ச்சனா தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். அர்ச்சனா வீடியோ காலில் சத்யராஜ் உடன் பேசிய படியே தற்கொலை செய்தார்.

    அந்த காட்சியை அவரது காதலன் பார்த்து ரசித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அர்ச்சனாவை தற்கொலைக்கு தூண்டியதாக சத்யராஜ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும்.
    • காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    திருவாரூர்:

    உதயமார்த்தாண்டபுரம் நாச்சிகுளம் அங்காடிகளில் கோதுமை வழங்கப்பட வில்லை என்பதை சுட்டிக்காட்டி உடன் கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து முத்துப்பேட்டை வட்ட வழங்கல் அலுவலர் வசுமதி தலைமையில் காங்கிரசா ருடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஹிர் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில், வரும் மாதங்களில் மக்களுக்கு தேவையான அளவு கோது மைகளை வழங்கு வதாக வட்ட வழங்கல் அலுவலர் உறுதியளித்தார்.

    கோதுமை கேட்பவர்களுக்கு சுத்தமான கோதுமை வழங்க வேண்டும்அதனை ஏற்று ஆர்ப்பாட்டத்தை காங்கிரசார் ஒத்தி வைத்தனர்.

    இந்த சமரச கூட்டத்தில் காங்கிரஸ் இலக்கிய அணி மாவட்ட தலைவர் தங்கராஜன், பஞ்சாயத்ராஜ் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஆனந்த் ரெட்டி, சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் சயீத் முபாரக் ஆலிம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வள்ளுவர் அரசு பள்ளியில் முப்பெரும விழா நடை பெற்றது.
    • விழாவில் 10 முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    திருவாரூர்:

    திருத்துறைப்பூண்டி அருகே விட்டுக்கட்டி வள்ளுவர் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆண்டு விழா, விளையாட்டு விழா, பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கியோருக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழா ஊராட்சி தலைவர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது .

    ஊராட்சி துணைத்தலைவர் சாந்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆரோக்கிய மேரி, லயன்ஸ் தலைவர் வேதமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் முருகானந்தம் வரவேற்றார். ஆசிரியை மணிமலர் ஆண்டறிக்கை வாசித்தார்.

    வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்ரமணியன், வட்டார மேற்பார்வையாளர் அனுப்பிரியா மாணவர்களுக்கு பரிசளித்தனர். ஆசிரியர் பயிற்றுனர் கங்கா, பாலம் தொண்டு நிறுவன செந்தில்குமார், தலைமையாசிரியர்கள் விவேகானந்தம், பாலகுமார், அருளரசு, அருண்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பள்ளிக்கு கழிவறை அமைக்க ரூ. 3லட்சம் நிதி வழங்கிய எக்ஸெல் வின்ட் நிறுவன இயக்குனர் ராஜ்குமார் வாட்டர் டேங்க் வழங்கிய பாலம் தொண்டு நிறுவன செயலர் செந்தில்குமார் ஆகியோர் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். 10 முன்னாள் ராணுவத்தினர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    இந்த ஆண்டு முதல் வகுப்பில் சேர்ந்த நான்கு மாணவ மாணவர்களுக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.1000- ஐ அனுசுயா ராமமூர்த்தி வழங்கினார்.

    மேலும் இவ்வாண்டு சேரும் அனைத்து மாணவர்களுக்கும் ரூ. ஆயிரம் வீதம் ஊக்கத்தை வழங்கப்படும் என்று பள்ளியின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

    மாணவர்க ளுக்கு பரிசு பொருட்களை சரவணன், சுவாதி சக்திவேல் வழங்கினார்கள்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியை அமுதா கனகதுர்கா செய்தனர். வி.ஐ.ஏ.ஷிப் கேட்டரிங் காலேஜ் அகிலன் மே மேஜிக் ஷோ நடத்தினார். கர்ணன் நன்றி கூறினார்.

    • திருவாரூரில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் செந்தமிழ்ச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் துர்காலயா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வருகிற 21-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் திருவாரூர் நகரம், புறநகர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், திருவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பூந்தோட்டம், பேரளம், வேலங்குடி மற்றும் அதம்பார் பகுதிகளுக்கு உட்பட்ட மின்நுகர்வோர் கலந்து கொண்டு மின் வினியோகம் தொடர்பான தங்களுடைய குறைகளை விண்ணப்பம் மூலம் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர்.
    • மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி, நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சவுந்தர்ராஜன் தலைமையில் காப்பக மீட்பு குழுவினர் விஜயா, சுபா, சரவணன், சங்கர், மைக்கேல் ஆகியோர் துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ், பேரூராட்சி தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், துணை தலைவர் சிவக்குமார், முத்துப்பேட்டை வர்த்தக சங்க கழக தலைவர் கண்ணன், முன்னாள் தலைவர் மெட்ரோ மாலிக், பத்திரிக்கையாளர் முகைதீன் பிச்சை, வக்கீல் தீன் மற்றும் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஆகியோர் இணைந்து முத்துப்பேட்டை பஸ் நிலையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேரை மீட்டு சிகிச்சை அளிப்பதற்காக நம்பிக்கை மனநல காப்பகத்தில் சேர்த்தனர்.

    இதனை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
    • ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்ட த்தில், பொது மக்கள் பட்டாமாறுதல், புதியகுடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 163 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.

    பொதுமக்க ளிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்தினாளிகளுக்கு சுயதொழில் வங்கி கடன் மானியம் ரூ.178334 மற்றும் காதொலி கருவி வேண்டி மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு ரூ.2780 மதிப்பிலான காதொலி கருவி என மொத்தம் ரூ. 1 லட்சத்து 81 ஆயிரத்து 114 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், சமூக பாதுகாப்புத் திட்டம் தனிதுணை ஆட்சியர் லதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×