தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கல்

கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி அருகே கள்ளிக்குடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஒரு வீடு தீப்பிடித்து எரிந்தது.

அதேபோல், தண்டலச்சேரி அருகே கண்ணந்தகுடியில் அடுத்தடுத்து 3 வீடுகள் தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில், திருத்துறைப்பூண்டி நூற்றாண்டு அரிமா சங்கம் சார்பில் சங்கத்தின் தலைவர் லயன் முகம்மது இக்பால்தீன், செயலாளர் தங்கமணி, மாதவன், செல்வ முத்துக்குமரன், துரை ராயப்பன், சீனிவாச பாபு, ராஜ் மோகன் மற்றும் உறுப்பினர்கள் நேரில் சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் சமையலுக்கு தேவையான பாத்திரங்களும் வழங்கினர்.

இதில் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com