ரம்ஜான் பண்டிகை எதிரொலி: திருத்துறைபூண்டி சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை

சந்தையில் வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.ஆடுகள் அதிக அளவில் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரம்ஜான் பண்டிகை எதிரொலி: திருத்துறைபூண்டி சந்தையில் ரூ.25 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
Published on

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேலை சாலையில் ஆட்டு சந்தையில் நடைபெற்றது. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இங்கு வழக்கத்தை விட ஆடுகள் அதிகளவில் விற்பனைக்கு வந்தன.

குறிப்பாக ஆயக்கரம்பலம், வேதாரண்யம், கட்டிமேடு ஆலத்தம்பாடி, துளசிப்பட்டணம் வடபாதி ஆதிரங்கம் கச்சனம் மணலி வேலூர் முத்துப்பேட்டை ஆலங்காடு மருதவனம் கலப்பால் பல்லாங் கோயில் மேட்டுப்பாளையம் விளக்குடி கோட்டூர் போன்ற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் சுமார் ரூ. 25 லட்சத்துக்கு மேல் ஆடுகள் வியாபாரம் ஆனது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com