என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
- திருத்துறைப்பூண்டி அருகே காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி அருகே மேட்டுப்பாளையம் நாலாநல்லூர் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் கடந்த 5 நாட்களாக குடிநீர் முறையாக வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சு வார்த்தையில் தண்ணீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் திருத்துறைப்பூண்டி -மன்னார்குடி சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது






