என் மலர்
திருவாரூர்
- பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
- சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாரூர்:
நீடாமங்கலம் பகுதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி நீடாமங்கலம் மேலராஜவீதி சித்தி விநாயகர் கோவிலில் உள்ள சித்திவிநாயகர், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் உள்ள கலங்காமற்காத்த விநாயகர், ஆக்ஞாகணபதி, நீடாமங்கலம் சதுர்வேத விநாயகர் மகாமாரியம்மன் கோவிலில் உள்ள சதுர்வேத விநாயகர், சந்தானராமர் கோவிலில் உள்ள தும்பிக்கையாழ்வார், காசிவிசுவநாதர் கோவிலில் உள்ள விநாயகர், நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் உள்ள விநாயகர், பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோவிலில் உள்ள விநாயகர் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என விழிப்புணர்வு.
- அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விழிப்புணர்வு.
முத்துப்பேட்டை:
முத்துப்பேட்டை அடுத்த மருதங்காவெளி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கூடுதலாக மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது.
பிரச்சாரத்தை பேரூராட்சி கவுன்சிலர் செந்தில்குமார் தொடங்கி வைத்தார்.
பள்ளி அருகிலிருந்து புறப்பட்ட பிரசார பயணம் சுற்றுப்பகுதியில் உள்ள வீடு, வீடாக சென்று அப்பகுதி மக்களிடம் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் நேரடியாகவும், துண்டு பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
- இதனை முன்னிட்டு அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மன்னார்குடி:
டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என அறிவித்ததை அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும், நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் பஞ்சாப் மாநில விவசாயி ராஜவேந்தர் சிங் கோல்டன், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி இந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என அறிவித்ததை அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தபட்டன. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இதனை முன்னிட்டு அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
- திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம்.
- சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் நேற்று கேது பகவானுக்கு பால்,பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர்,மஞ்சள்,சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ராகுதோஷம், கேதுதோஷம், நாகதோஷம், திருமணதடை உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிலில் வழங்கப்படும் வெள்ளியிலான நாகத்திற்கு அபிஷேகம் செய்து பரிகார பூஜை செய்தனர். இதற்கனா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ராஜராஜேஸ்வரன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
- நீடாமங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது.
- நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
திருவாரூர்:
நீடாமங்கலம் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதையொட்டி இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான நீடாமங்கலம், சித்தமல்லி, ரிஷியூர், ஒளிமதி, பச்சக்குளம், பெரம்பூர், கானூர், பருத்திக்கோட்டை, சர்வமான்யம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் பாலநேத்திரம் தெரிவித்துள்ளார்.
- 2 ஆயிரம் ஏக்கர் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
- பருத்தி சாகுபடியை பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக்கூடாது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் சில தினங்களாக பெய்து வரும் கோடை மழையால் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நன்னிலம், மன்னார்குடி, வலங்கைமான், கோட்டூர், குடவாசல், கொரடாச்சேரி உள்ளிட்ட இடங்களில் 42 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பருத்தி பஞ்சு அதிகமான விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டதால் இந்த ஆண்டும் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஆர்வம் காட்டினார். அதனால் கடந்த ஆண்டைவிட 2000 ஏக்கர் கூடுதல் பரப்பளவில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
தற்போது இந்த பருத்தி செடிகள் பூ பூத்தும், காய்கள் விட்டும் நன்கு வளர்ந்துள்ளது. இந்த நேரத்தில் திருவாரூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக பரவலாக பெய்து வரும் கோடை மழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பருத்தி சாகுபடி பொறுத்தவரை வேர் பகுதிகளில் தண்ணீர் இருக்கக் கூடாது. அதனால் தான் காவிரி டெல்டா பகுதிகளில் கோடையில் பருத்தி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போதைய மழையால் தேங்கிய தண்ணீரை வடிய வைக்க சிரமமான சூழல் நிலவுகிறது.
வடிகால் வசதிகள் முறையாக தூர்வாரப்படாததால் பருத்தி வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற முடியவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். பருத்தி சாகுபடிக்கு ரூ 25 ஆயிரம் வரையசெலவு செய்வதுண்டு. இதுவரை ரூபாய் 15 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 20 ஆயிரம் வரை சாகுபடி செலவு செய்யப்பட்டுள்ளது. இப்போது கொரடாச்சேரி, குடவாசல், வடபாதிமங்கலம், கோட்டூர், வலங்கைமான் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் பருத்தி செடிகள் தண்ணீரில் தேங்கி உள்ளன. இது பருத்தி சாகுபடிகள் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
எனவே உடனடியாக தண்ணீரை வடிவமைப்பதற்கான உதவிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும் மகசூல் இழப்பு ஏற்படும் பருத்திப் பயிர்களுக்குரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை எடுத்துள்ளனர்.
- தில்லைவிளாகம், பட்டுக்கோட்டை, மானாமதுரை வழியாக ஒரு நேரடி ரெயில் இயக்க வேண்டும்.
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும், தில்லைவிளாகம் ராமர், நடராஜர் கோவிலுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு.
திருத்துறைப்பூண்டி:
மத்திய ரயில்வே அமைச்சருக்கு, தில்லைவிளாகம் ரயில் பயணிகள் நல சங்க தலைவர் நாச்சிகுளம் தாஹிர் அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :-
மயிலாடுதுறை - மதுரை இடையே திருவாரூர், தில்லை விளாகம், பட்டுக்கோட்டை, மானாமதுரை வழியாக ஒரு நேரடி ரயில் இயக்க வேண்டும்.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகள் நம் மாநிலத்தின் பொக்கிஷம். நம் குழந்தைகள் இந்தப் பகுதிகளை எல்லாம் இது வரை பார்த்ததே இல்லை. காரணம், மதுரையிலிருந்து நேரடி ரயில் வசதி இல்லை என்பதே.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் திருவாரூருக்கும் இடையே தில்லைவிளாகம் ராமர், நடராஜர் கோயிலுக்கும் உள்ள ஆன்மிக தொடர்பு, பக்தர்களுக்கு இந்த ரயில் மூலம் இன்னும் வலுப்படும்.
டெல்டா, சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற எல்லைக்குள் வரும் இந்த பகுதி மக்கள், நீதிமன்ற அலுவலர்களுக்கு வந்து செல்ல வசதியாக இருக்கும்.
இதேப்போல் பல்வேறு கல்வி நிலைய மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும். எனவே இக்கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறையில் இருந்து தில்லைவிளாகம் , முத்துப்பேட்டை வழியாக மதுரைக்கு ரெயில் இயக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தனது வீட்டில் தினமும் மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.
- மாணவர்களுக்கு உணவு மற்றும் தானிய வகைகளை வழங்கி வருகிறார்.
திருத்துறைப்பூண்டி:
முத்துப்பேட்டை அருகே உள்ள அடஞ்ச விளாகம் பகுதியைச் சேர்ந்தவர்பூங்கொடி. இவர் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல்2023 வரை பல்வேறு விதமான கற்றல் மேம்பாடு அடைய பயிற்சிகளை தனது இல்லத்தில் தினசரி மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.
முக்கிய நாட்களில் மாணவர்களுக்கு உணவு, மற்றும், தானிய வகைகளை வழங்கி வருகிறார்.அதற்கான குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன், கல்வித்துறை சார்பாக ரூ.2 ஆயிரத்தை காசோலை யாக தன்னார்வலர் பூங்கொடிக்கு வழங்கினார்.
இதில் இல்லந்தேடி கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளரும் அரிச்சந்திரபுரம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான முரளி கலந்து கொண்டார்.
- கோடை மழையால் எள் வயல்களில் பாதிப்பு ஏற்பட்டது.
- எள் வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண் அதிகாரி ஆய்வு செய்தார்.
திருவாரூர்:
திருவாரூர் திருத்துறைப்பூண்டியில் கோடை மழையால் எள் வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்டாரங்களில் கோடை மழை அதிக அளவு பெய்துள்ளது. இதனால் இந்த பகுதியில் சாகுபடி செய்து பூத்து காய்க்கும் தருணத்தில் இருந்த எள் பயிர்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எள் வயலில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
நடப்பு மே மாதத்தில் இதுவரை 178 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 4-ந் தேதி மட்டும் 74 மில்லி மீட்டர் மழை பெய்தது. மானாவாரி இறவைப் பயிரான எள் சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் அதிக அளவு நீர் தேங்கி இருப்பதால், பயிர் வாட ஆரம்பித்து விட்டது.
மழை நின்று விட்டாலும் தேங்கியுள்ள தண்ணீர் வடிவதற்குள் அனைத்து எள் பயிரும் வதங்கி பட்டுப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் 2,800 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிரானது மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் சூழலில் திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை வட்டாரங்களில் எள் வயல்களில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார்.
சேகல், பின்னத்தூர், கொருக்கை, பாமணி, தேசிங்குராஜபுரம், கொக்கலாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு நடந்தது. ஆய்வின் போது வேளாண் துணை அலுவலர் ரவி, வேளாண்மை உதவி அலுவலர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கோடை மழையால் எள் வயல்களில் பாதிப்பு ஏற்பட்டது.கோடை மழையால் எள் வயல்களில் பாதிப்பு ஏற்பட்டது.
- திருவாரூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 13-ந் தேதி நடக்கிறது.
- சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம்
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோகத் திட்டத்தினை மேம்படுத்திடும் வகையில் பொது வினியோக திட்ட சிறப்பு பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 13-ந் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.
திருவாரூர் தாலுகா பழையவலம் கிராமத்தில் திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், நன்னிலம் தாலுகா மகிழஞ்சேரி கிராமத்தில், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை துணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் தலைமையிலும் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதேபோல் குடவாசல் தாலுகா நெய்க்குப்பை கிராமத்தில், திருவாரூர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் முதுநிலை மண்டல மேலாளர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகா, அன்னுக்குடி கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகா, அனுமந்தபுரம் கிராமத்தில், திருவாரூர் இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் தலைமையிலும் நடக்கிறது.
மன்னார்குடி தாலுகா, கீழநத்தம் கிராமத்தில், மன்னார்குடி வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகா குரும்பல் கிராமத்தில் மன்னார்குடி சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், கூத்தாநல்லூர் தாலுகா பருத்தியூர் கிராமத்தில், திருவாரூர் சரக துணைப்பதிவாளர் தலைமையிலும், முத்துப்பேட்டை தாலுகா, பின்னத்தூர் கிராமத்தில் பொதுவினியோகத்திட்ட துணைப்பதிவாளர் தலைமையிலும் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே, தொடர்புடைய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய மற்றும் நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்கள், கைப்பேசி எண் மாற்றம் செய்ய மனு அளித்து பயன்பெறலாம். மேலும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்கள் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள், சேவை குறைபாடுகள் குறித்த புகார்கள் போன்றவை குறித்தும் மனுக்களை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
- விபத்தில் மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே வடபாதியை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் (வயது 55). விவசாயி. இவரது உறவினர் ஒருவருக்கு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக மீனாட்சி சுந்தரம், தனது மகள் மதுமதி (29), மீனாட்சி சுந்தரத்தின் பேத்திகள் 2 பேர் ஆகிய 4 பேருடன் திருவாரூருக்கு புறப்பட்டார்.
திருவாரூர்-மன்னார்குடி சாலையில் சவளக்காரன் என்ற இடத்தில் சென்றபோது திருவாரூரில் இருந்து மன்னார்குடி நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மீனாட்சி சுந்தரமும் அவரது மகள் மதுமதியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேத்திகள் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மன்னார்குடி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளை மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் இறந்த மீனாட்சிசுந்தரம் மற்றும் அவரது மகள் மதுமதி உடலை பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மன்னார்குடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றலாம்.
- பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் உள்ள மாடி வீடுகளில் இயற்கை முறையில் காய்கறி தோட்டம் அமைப்பது குறித்த ஆலோ சனை கூட்டம் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் தலைமையில், ஆணையர் பிரதான் பாபு, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார் முன்னிலை யில் நடைபெற்றது.
இயற்கை காய்கறி தோட்ட வல்லுனர் திருச்சி விதை யோகநாதன், தோட்டக லைத்துறை உதவி இயக்குனர் இளவரசன் ஆகியோர் மாடித்தோட்டம் அமைப்பது குறித்து எடுத்துரைத்தனர்.
நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் பேசுகையில்:-
தற்போது காலநிலை மாற்றத்தால் வெப்பம் அதிகரித்து வருகிறது.
இதனால் வீட்டின் மேல்பகு தியை குளிரவைக்க பல்வேற வழிகள் இருந்தாலும், பசுமைகுடில் அமைப்பது சிறந்தது. வீட்டின் மாடி பகுதிகளை குறைந்த செலவில் தோட்டமாக மாற்றி இயற்கை உரங்களை பயன்படுத்தி பாரம்பரிய நாட்டு காய்கறிகள், பழங்கள், கீரைகள், கிழங்குகளை உற்பத்தி செய்யலாம்.
இதனால் மன அமைதி, நஞ்சில்லாத உணவு, நோயற்ற வாழ்வு, பொருளாதார சேமிப்பு போன்ற நன்மைகள் கிடைக்கிறது.
இதற்காக நகராட்சி நிர்வாகத்துடன் பாலம் சேவை நிறுவனம், பசுமை சிகரம் அமைப்பு ஆகியவை இணைந்து உரிய தொழில்நுட்பங்கள் குறித்து ஆர்வமுள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மேலும், காய்கறி, விதைகள் வழங்கப்படும். ஓராண்டு க்குள் அனைத்து மாடி வீடுகளிலும் மாடித்தோட்டம் அமைப்பதே இலக்கு என்றார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டார்.






