என் மலர்
திருவாரூர்
- கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
- முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முத்துப்பேட்டை:
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டி பெற்றது.
இதனை கொண்டாடும் வகையில் முத்துப்பேட்டை நகர காங்கிரஸ் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பட்டாசு வெடித்தனர்.
அதேபோல் முத்துப்பே ட்டை பெரிய கடைதெரு விலும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கி பெற்றியை பகிர்ந்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மெட்ரோ மாலிக், மாவட்ட செயலாளர்கள் ஜெகபர் அலி, சுந்தரராமன், மாவட்ட அமைப்பு செயலாளர் தக்பீர் நெய்னா முகமது, இளைஞர் காங்கிரஸ் மாநில செயலாளர் ஜெகபர் பாட்சா, மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பிரிவு தலைவர் ஜேம்ஸ், நகர துணைத்தலைவர் ஹசன், நகர பொருளாளர் குலாம் ரசூல், நிர்வாகிகள் ஜிபிலி, இஜாஸ், ஷகீல், சேக்தாவூது, அப்சல், தமீம் அன்சாரி, முஜமில் உட்பட ஏராளமாேனார் கலந்துக் கொண்டனர்.
முத்துப்பேட்டை அடுத்த பாண்டி கடைதெருவில் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் வட்டார தலைவர் வடுகநாதன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு களும் வழங்கினர்.
- வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
- குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை வட்ட அளவிலான எரிவாயு சிலிண்டர் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடைப்பெற்றது.
மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா தலைமை வகித்தார்.
வட்ட வழங்கல் அலுவலர்கள் திருத்துறைப்பூண்டி அலெக்ஸாண்டர், முத்துப்பேட்டை வசுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் எரிவாயு விநியோக குறைபாடுகள் குறித்தும், புதிய சிலிண்டர்கள் பெறும் வழிமுறைகளை எளிதாக்குவது, மண்ணெண்ணை, சமையல் ஆயில், ரேஷன் பொருட்கள் விநியோகம், அங்காடி செயல்பாடு, குறித்தும் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டது,
அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதில் பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நாச்சிகுளம் நுகர்வோர் குழு தலைவர் பொன்வேம்பையன், செயலாளர் பாசில் அகமது மற்றும் எரிவாயு முகவர்கள் கலந்துக் கொண்டனர்.
வருவாய் ஆய்வாளர் சேக்தாவூது நன்றி கூறினார்.
- போலீசார் டாக்டர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- டாக்டர் பிரேம் குமார் சென்னையில் இருந்து திரும்பிய பிறகு தான் கொள்ளையடிக்கபட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு தெரிய வரும்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி எடத்தெருவை சேர்ந்தவர் மருத்துவர் பிரேம்குமார் தாமஸ்.
இவர் அதே பகுதியில் சொந்தமாக மருத்துவமனை வைத்து அதில் குழந்தைகள் நல டாக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை நிமிர்த்தமாக பிரேம்குமார் தாமஸ் சென்னை சென்றார். இந்நிலையில் இன்று காலை வீட்டை சுத்தம் செய்ய ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஊழியர் செல்வி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் டாக்டர் பிரேம்குமார் மற்றும் திருத்துறைப்பூண்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். வீட்டின் கதவு, பீரோ உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. வீட்டில் ஆள் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
கைரேகை நிபுணர்கள் வீட்டில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் நிகழ்வு இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் போலீசார் டாக்டர் வீட்டை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் . முதற்கட்ட விசாரணையில் பீரோ உடைக்கப்பட்டு 250 பவுன் நகைகள், ரூ 20 ஆயிரம் ரொக்ககத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றது தெரியவந்தது.
இருந்தாலும் டாக்டர் பிரேம் குமார் சென்னையில் இருந்து திரும்பிய பிறகு தான் கொள்ளையடிக்கபட்ட நகை, பணத்தின் மொத்த மதிப்பு தெரிய வரும். மேலும் ஏதாவது கொள்ளையடிக்கப்பட்டதா என்பது உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் தெரிய வரும். தொடர்ந்து போலீசார் மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
- சிறப்பு மருத்துவ முகாமை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடத்தியது.
- காப்பகத்தில் உள்ள 46 நபர்களுக்கும் கண் பரிசோதனை மற்றும் பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தர வின்படி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா அறிவுரையின்படி பொது சுகாதார துறை மூலம் நடமாடும் மருத்துவ வாகன வசதி மற்றும் ஆலத்தம்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் மாவட்ட காசநோய் தடுப்பு பிரிவு இணைந்து சிறப்பு மருத்துவ முகாமை திருத்துறைப்பூண்டி நம்பிக்கை மனநல காப்பகத்தில் நடத்தியது.
முகாமில் டாக்டர்கள், சித்தா டாக்டர்கள், பல் மருத்துவர்கள், பிசியோ தெரபி , எக்ஸ்ரே எடுக்கும் நிபுணர், செவிலியர்கள் உதவியாளர்கள் என மொத்தம் 35 பேர் கொண்ட குழு மருத்துவ வசதி வாகனங்களுடன் நம்பிக்கை மனநல காப்பதற்கு வந்து காப்பகத்தில் உள்ள 46 நபர்களுக்கும் கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சுகர் பரிசோதனை, நடமாடும் வாகனத்தில் எக்ஸ்ரே எடுத்து அனைவருக்கும் கண் பரிசோதனைகளும் பல் சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் எடுக்கப்பட்டது. அனைவரையும் டாக்டர்கள் தனித்தனியே நன்கு பரிசோதித்து மருந்து மாத்திரை தேவையான வர்களுக்கு வழங்கினர்.காப்பகத்தில் உள்ள அனைவரும் பயன்பெற்றனர்.
இம்முகாமல் நம்பிக்கை மனநல காப்பக இயக்குனர் சௌந்தர்ராஜன் அனைவரும் வரவேற்று அறிமுகப்படுத்தினார். மாவட்ட மனநல மருத்துவர் டாக்டர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். டாக்டர் முகைதீன் முன்னிலை வகித்தார்.
முகாமில் காப்பக பணியாளர்கள் பிரியா, வள்ளி, சரவணன், சங்கர், மைக்கேல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் நம்பிக்கை மனநல காப்பக செவிலியர் சுதா நன்றி கூறினார்.
- பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
- விவசாயிகள் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றுக் கொண்டனர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூரில் விதைகளே பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கம் சார்பில் 3 ஆம் ஆண்டு நெல் திருவிழா நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பாலன் அனைவரையும் வரவேற்றார்.
இயற்கை விவசாயம் மற்றும் சூழலியல் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் பாண்டித்துரை உரையாற்றினார்.
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இயற்கை விவசாயிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அழிந்து போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து விவசாயிகளை சென்றடையும் நோக்கில் பாரம்பரிய நெல் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டது.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் வகைகள் வழங்கப்பட்டது .
விவசாயிகளும் இந்த ஆண்டு இயற்கை விவசாயம் செய்வதாக உறுதியேற்றுக் கொண்டனர். வேளாண் இயந்திரங்கள் மற்றும் மரபு சார்ந்த வேளாண் கண்காட்சியும் நடைபெற்றது.
முடிவில் பொருளாளர் ஜான்பால் நன்றி கூறினார்.
முன்னதாக கோட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய மாட்டு வண்டி ஊர்வலத்தை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஓட்டி வந்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
- உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் தான்.
- இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.
திருத்துறைப்பூண்டி:
உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு, திருத்துறைப்பூண்டி நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் செவிலியர்களை கவுரவப்படுத்தும் விதமாக நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.
அப்போது அவர் கூறும்போது, ஒரு உயிரை படைப்பவன் இறைவன் என்றால் உயிரை காப்பவர்கள் மருத்துவ ர்களும், செவிலியர்களும் க்தான்.
இரவு பகல் பாராமல் கடமையை செய்பவர்கள்.
இவர்களின் சேவையை மதித்து இவர்களுடன் ஒத்துழைத்து மனித உயிர்களையும், மனிதநேயத்தை காப்போம் என்றார். நிகழ்ச்சியில் மருத்துவர் ஷைமா, பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், நகராட்சி வருவாய் ஆய்வாளர் கார்த்தி, நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், மருத்துவ பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாலு, செந்தில்குமார் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
- மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
- நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நேற்று வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார் குழலியம்மன், மூலவர் குருபகவான், ஆக்ஞாகணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், நவக்கிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து மூலவர் குருபகவானுக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது.
பின்னர் உற்சவர் குருபகவானுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமையையொட்டி குருதட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதேபோல் நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
- நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
- இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், மத்திய பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவோம், நாட்டையும் மக்களையும் காப்போம் என்ற மாற்றத்தை நோக்கி நடை பயண பிரசார இயக்கம் இந்திய கம்யூனிஸ்ட சார்பில் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி வேதை சாலையில் உள்ள அம்பேத்கார் சிலையிலிருந்து தொடங்கிய நடை பயண இயக்கத்தில் முன்னால் எம்.எல்.ஏ. பழனிச்சாமி தலைமையில் மாரிமுத்து எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், ஒன்றிய தலைவர் பாஸ்கர், நகரச் செயலாளர் சுந்தர், நிர்வாகிகள் சாமிநாதன், கோபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நடை பயணமானது பி.எஸ். ஆர். மணிமண்டபம் வரை நடைபெற்றது.
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும்.
திருவாரூர்:
தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி துறை மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட ஊராட்சி செயலாளருக்கு பணி விதிகளை மேலும் காலதாமதம் இன்றி வெளியிடுதல் மற்றும் விடுபட்ட உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்களின் பணி வரன்முறை ஆணையை வெளியிட வேண்டும், இணை இயக்குனர் உதவி இயக்குனர் உதவி பொறியாளர் உதவி பொறியாளர் மற்றும் இளநிலை பொறியாளர் நிலையிலான அனைத்து பதவி உயர்வு ஆணைகளையும் உடனடியாக வெளியிட வேண்டும்.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அரசு ஊழியர்களின் போராட்ட காலங்கள் வேலை நாட்களாக கருதி ஆணையிடப்படும் என அளித்த வாக்குறுதியின் படி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் போராட்ட காலங்களில் வரன்முறை செய்து ஆணை வெளியிட வேண்டும் ஊராட்சி செயலர்களுக்கு மாத மாதம் ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது
அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் தமிழக அரசு மாநில நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையின் போது ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 900-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு அரசு ஊழக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் மாவட்டம் முழுவதும் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
- வயல்களில் நீர் தேங்காமல் வடிய வைத்திட விவசாயி களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
- கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் எள் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.
நீடாமங்கலம்:
திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் மற்றும் வலங்கை மான் வட்டாரங்களில் எதிர்பாராமல் பெய்த கோடை மழையினால் பல்வேறு கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த பருத்தி மற்றும் எள் வயல்கள் மழை நீரால் சூழப்பட்டு காணப்படுகிறது.
இந்த வயல்களை திருவாரூர் வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய திட்டம்) விஜயலட்சுமி பார்வையிட்டு பயிர் நிலவரங்களை ஆய்வு செய்தார்.
வயல்களில் நீர் தேங்காமல் வடிய வைத்திடவும், வாடல் நோய் தாக்கத்தினை குறைத்திடவும், விவசாயி களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது குடவாசல் மற்றும் வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன், வேளாண்மை அலுவலர்கள் வெங்கடேஸ்வரன், சூரியமூர்த்தி மற்றும் துணை வேளாண்மை அலுவலர் ரவி மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியைச் சார்ந்த உதவி வேளாண்மை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- விளையாட்டு வீரர்கள் சிறப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்.
- புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை திட்டம், தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டங்களில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் சேர்ந்து உதவித்தொகை பெற விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 20-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
மேற்காணும் 3 திட்டங்களுக்கு கடந்த 30.11.2022 முதல் 22.12.2022 வரை ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் கடந்த 4 மாதங்களில் பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி விவரங்களை ஏற்கனவே உள்ள தங்களுடைய பதிவெண் மூலம் புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கப்பட்டது.
- கணித செயல்பாடுகள் உள்பட பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அடுத்த பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி இணைந்து நடத்திய ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா பயிற்சி தொடங்கப்பட்டது.
பயிற்சியில் திருத்து றைப்பூண்டி வட்டார வள மைய ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி முன்னிலையில் பள்ளி தலைமை ஆசிரியர் கிரிஜா தலைமை தாங்கினார்.
பயிற்சியில் ஆசிரியர் பாஸ்கர் மற்றும் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் காகித மடிப்புகள், கணித செயல்பாடுகள் உள்பட பல்வேறு அறிவியல் செயல்பாடுகள் குறித்து செய்து காண்பிக்கப்பட்டது.
விழாவில் கருத்தாளர்களாக வானவில் மன்றத்தை சேர்ந்த நித்யா, தமிழ் மொழி ஆகியோர் செயல்பட்டனர். இதில் இல்லம் தேடி தன்னார்வலர்கள் தேசிங்கு ராஜபுரம் ரேவதி, பாமணி பாலசுந்தரி, குணசீலி அருள்மணி ஆகியோர் விழாவை ஒருங்கி ணைத்தனர்.






