search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "grain"

    • தனது வீட்டில் தினமும் மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.
    • மாணவர்களுக்கு உணவு மற்றும் தானிய வகைகளை வழங்கி வருகிறார்.

    திருத்துறைப்பூண்டி:

    முத்துப்பேட்டை அருகே உள்ள அடஞ்ச விளாகம் பகுதியைச் சேர்ந்தவர்பூங்கொடி. இவர் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல்2023 வரை பல்வேறு விதமான கற்றல் மேம்பாடு அடைய பயிற்சிகளை தனது இல்லத்தில் தினசரி மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.

    முக்கிய நாட்களில் மாணவர்களுக்கு உணவு, மற்றும், தானிய வகைகளை வழங்கி வருகிறார்.அதற்கான குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

    நேற்று நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன், கல்வித்துறை சார்பாக ரூ.2 ஆயிரத்தை காசோலை யாக தன்னார்வலர் பூங்கொடிக்கு வழங்கினார்.

    இதில் இல்லந்தேடி கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளரும் அரிச்சந்திரபுரம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான முரளி கலந்து கொண்டார்.

    • ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டது.
    • சிறுதானிய உணவின் சிறப்பை அனைவரும் அறிய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரிலுள்ள தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூட்டமை ப்பு இணைந்து உலக உணவு தினம்-2022 நிகழ்ச்சியை இதில் சிறுதானிய உணவுகள், வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் புலன் சார் உணவு மதிப்பீடு என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் மற்றும் சிறுதானிய தொழில் முனைவோர் கண்காட்சி ஆகியவை நடத்தப்பட்டது.

    மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில் துறை அமைச்சகத்தின் செயலாளர் அனிதா பிரவீன் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து வளாகத்தில் புதிய விளையாட்டு அரங்கத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    உயா்தர சத்துள்ள உணவுகளை அனைத்து பொதுமக்களுக்கும் சரியான விகிதத்தில் வழங்குவதில் சவால்கள் உள்ளன. எனவே, வளா்ந்து வரும் உலக உணவு சந்தையின் தேவைக்கேற்ப தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் உணவு தொழில்நுட்ப மாணவா்களுக்கு பொறுப்பு உள்ளது.

    அதிக சா்க்கரை மற்றும் கொழுப்பு கொண்ட துரித உணவுகளை இத்தலைமுறையினா் விரும்பி உண்டு வருகின்றனா்.

    இச்சூழ்நிலையில், சிறுதானிய உணவுகளின் சிறப்புகளை அனைவரும் அறியுமாறு செய்ய வேண்டும். மேலும், சிறுதானிய உணவை இளைய தலைமுறையினருக்கு சுவையாக மாற்றுவதற்கும், தினசரி உணவில் தினையை மீண்டும் கொண்டு வருவதற்கும் பொருத்தமான தொழில்நுட்பங்களைக் கண்டுபிடிக்க உணவு அறிவியல் துறை மாணவா்கள் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத் துணை வேந்தா் சுகுமாா், இந்திய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லு நா்களின் கூட்டமைப்புத் தலைவா் அலோக்குமாா் ஸ்ரீவஸ்தவா, தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் ஆகியோா் சிறப்புரையாற்றியனர்.

    முன்னதாக, நிறுவனத்தின் ஆய்வு, ஆலோசனை மற்றும் சா்வதேச தொடா்புகள் துறைத் தலைவா் (பொ) வெங்கடாசலபதி வரவேற்றாா். முடிவில் பதிவாளா் (பொ) சண்முகசுந்தரம் நன்றி கூறினாா்.

    • நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது
    • துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரம் கொங்கல்நகரம் கிராமத்தில் விவசாயி சுந்தரராஜன், கோட்டமங்கலம் விவசாயி ராமசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ 32 ஆதார நிலை விதைப்பண்ணைகளை, திருப்பூர் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அதன் பின் அவர் கூறியதாவது:-

    உணவே மருந்து என்ற அடிப்படையில், நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது.துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது. தற்போது உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் மீதான ஆர்வம் எளிதாக கிடைத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.

    இதில்சோளம் பிரதான சிறுதானிய சாகுபடி பயிராக உள்ளது. பிற சிறுதானியங்களை ஒப்பிடும்போது, அதிகளவு புரதசத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் செரிமானத்திற்கு உகந்தது.குடிமங்கலம் வட்டாரத்தில் சோளப்பயிர் சராசரியாக 400 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோ 32 ரகம் 105 முதல் 110 நாட்களில், 220 முதல் 300 செ.மீ., வரை வளரும்.மானாவாரி, இறவை என இரண்டு பருவத்திற்கும் ஏற்றது. தீவனம், தானியம் என இரண்டிற்கும் ஏற்ற ரகமாகும். இலைகள் நன்கு வளைந்து கதிர்கள் சமச்சீராகவும், தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

    இதன் ஆயிரம் தானிய எடை 16.25 கிராமாக இருப்பதால் ெஹக்டேருக்கு சராசரியாக 2,445 கிலோ, தானிய மகசூலும், 6,490 கிலோ தீவனமும் தரும் ரகமாகும். தானியம் அதிக புரதசத்தும் (11.31 சதவீதம் முதல் 14.66 சதவீதம்) நார்ச்சத்தும் (4.95 முதல் 5.8 சதவீதம்) கொண்டது. எனவே இந்த சோள ரகத்தினை விவசாயிகள் பயிரிட்டு தானியம், தீவனம் என இரண்டிலும் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்கலாம். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    மேலும் சிறுதானிய சோளம் சாகுபடிக்கு விதை பண்ணைகளை உரிய நேரத்தில் வயல் ஆய்வுகள் மேற்கொண்டு கலவன்கள் அகற்றி உரிய தொழில் நுட்ப தகவல்கள் வழங்கி தரமான விதைகளாக உற்பத்தி செய்ய வேண்டும் என விதை சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா பானு, உதவி விதை அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    ×