இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலருக்கு சான்றிதழ் வழங்கல்

தனது வீட்டில் தினமும் மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார். மாணவர்களுக்கு உணவு மற்றும் தானிய வகைகளை வழங்கி வருகிறார்.
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலருக்கு சான்றிதள், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலருக்கு சான்றிதள், ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
Published on

திருத்துறைப்பூண்டி:

முத்துப்பேட்டை அருகே உள்ள அடஞ்ச விளாகம் பகுதியைச் சேர்ந்தவர்பூங்கொடி. இவர் இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் மையத்தில் பயிலும் குழந்தைகளுக்கு பிப்ரவரி 2020 முதல் ஏப்ரல்2023 வரை பல்வேறு விதமான கற்றல் மேம்பாடு அடைய பயிற்சிகளை தனது இல்லத்தில் தினசரி மாலை நேரங்களில் வகுப்பு எடுத்து வருகிறார்.

முக்கிய நாட்களில் மாணவர்களுக்கு உணவு, மற்றும், தானிய வகைகளை வழங்கி வருகிறார்.அதற்கான குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன், கல்வித்துறை சார்பாக ரூ.2 ஆயிரத்தை காசோலை யாக தன்னார்வலர் பூங்கொடிக்கு வழங்கினார்.

இதில் இல்லந்தேடி கல்விமாவட்ட ஒருங்கிணைப்பாளரும் அரிச்சந்திரபுரம் பள்ளியின் பட்டதாரி ஆசிரியருமான முரளி கலந்து கொண்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com