search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Corn"

    • அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது.
    • நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டு வந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும். நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.

    சந்தை தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை.

    இன்றைக்கு நம் கண்ணெதிரில் விளையாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப்பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டு விட்டன. இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட்டோம்?

    ஆற்றுப்பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்து வந்தார்கள். நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    'பசுமை புரட்சி' என்ற பெயரில் அன்றாட பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாக பணப்பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும், மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்புமிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.

    குறுகிய காலப்பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்க தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக்கலாசாரம் சிதைந்து போனது.

    இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது. பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்கு பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானிய சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.

    அரிசியும், உளுந்தும் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாக சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்கு பிரிஜ்ஜில் வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது.

    இதை பலர் உணர்வதில்லை. சிறுதானியங்கள் நெருப்புச்சத்து கொண்டவை என்பதால், உடலுக்கு பல நன்மை அளிப்பவை.

    • அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.
    • நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர்.

    மேட்டூர்:

    மேட்டூர் அணையின் மொத்த நீர்ட்டம் 120 அடி ஆகும். அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் அணையின் நீர்த்தேக்க பரப்பு மற்றும் நீர்த்தேக்கம் பரப்பை ஒட்டி அமைந்துள்ள நிலப்பரப்புகளில் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம், எள், நிலக்கடலை ஆகிய பயிர்களை பயிர் செய்வது வழக்கம் .

    இதன் அடிப்படையில் தற்போது அணை நீர்மட்டம் 102 அடியாக குறைந்துள்ள நிலையில் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அருகே உள்ள சென்றாய பெருமாள் கோவில் எதிரே தண்ணீர் தேங்கி நின்ற நிலப்பரப்புகள் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காட்சியளிக்கிறது.

    இந்த நீர்த்தேக்க பகுதியை ஒட்டி உள்ள நிலப்பரப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் சோளம் பயிரிட்டனர். தற்போது இந்த சோளம் பயிர் அறுவடைக்கு தயாராகி உள்ளது.

    • சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது.
    • 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது.

    காங்கயம் :

    மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய உயர்தர உள்ளூர் ரகங்கள் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் சர்வதேச சிறுதானிய ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. நத்தக்காடையூர் பி.இ.டி., கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியை அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் துவக்கி வைத்தனர். அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசுகையில், தமிழகத்தில், சோளம் உற்பத்தியில் திருப்பூர் மாவட்டம் 14வது இடத்தில் உள்ளது. 6,397 மெட்ரிக் டன் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பு உற்பத்தியில், 148 மெட்ரிக் டன் சாகுபடி செய்து, 26வது இடத்தில் உள்ளது.மாவட்டத்தில் 90 ஏக்கர் பரப்பளவில் சிறுதானிய சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த2011 -12ம் ஆண்டை ஒப்பிடுகையில் சோளம் சாகுபடி மட்டும் 3 மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.

    தொடர்ந்து வேளாண் பொறியியல் துறை சார்பில், கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 3 விவசாயிகளுக்கு 4.55 லட்சம் ரூபாய் மதிப்பில் வேளாண் உபகரணங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு 41 ஆயிரத்து 267 ரூபாய் மானிய தொகையில் வேளாண் இடுபொருட்கள், பட்டு வளர்ச்சித்துறை சார்பில் மாவட்ட அளவில் சிறந்த பட்டு விவசாயிகளுக்கு 60 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ரொக்கப்பரிசு ஆகியவற்றை அமைச்சர்கயல்விழி செல்வராஜ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டல தலைவர் பத்மநாபன், காங்கயம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மகேஷ்வரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி, திட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, வேளாண் துறை இணை இயக்குனர் மாரியப்பன், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ்ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

    • விவசாயிகள் மக்காச்சோளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனியாகவும் பயிரிட்டு வருகின்றனர்.
    • இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது.

     கரூர் :

    கரூர் நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மக்காச்சோளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனியாகவும் பயிரிட்டு வருகின்றனர்.

    மக்காச்சோளம் கதிர் நன்றாக விளைந்ததும் கூலியாட்கள் மூலம் சோளக்கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர். பின்னர் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், சாலைப்புதூரில் செயல்பட்டு வரும் வேளாண்ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் கடந்த வாரங்களில் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.20-க்கு விற்பனையானது. இந்த வாரம் வரத்து குறைவால் ஒரு கிலோ மக்காச்சோளம் ரூ.22 வரை விற்பனையானது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது
    • துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் வட்டாரம் கொங்கல்நகரம் கிராமத்தில் விவசாயி சுந்தரராஜன், கோட்டமங்கலம் விவசாயி ராமசாமி தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சோளம் கோ 32 ஆதார நிலை விதைப்பண்ணைகளை, திருப்பூர் விதைச்சான்று மற்றும் அங்ககசான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

    அதன் பின் அவர் கூறியதாவது:-

    உணவே மருந்து என்ற அடிப்படையில், நமது முன்னோர்களால் பல 100 ஆண்டுகளாக, சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு பிரதான உணவாக உட்கொள்ளப்பட்டது. உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு முதன்மையானதாக இருந்தது.துரித உணவுகள், சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களால் சிறு தானியங்களின் சாகுபடி பெருமளவு குறைந்தது. தற்போது உணவு முறைகள் குறித்த விழிப்புணர்வு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய பொருட்கள் மீதான ஆர்வம் எளிதாக கிடைத்தல் உள்ளிட்ட காரணங்களால் சிறுதானிய சாகுபடி அதிகரித்து வருகிறது.

    இதில்சோளம் பிரதான சிறுதானிய சாகுபடி பயிராக உள்ளது. பிற சிறுதானியங்களை ஒப்பிடும்போது, அதிகளவு புரதசத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் ஏராளமான நார்ச்சத்துகளும் உள்ளன. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் செரிமானத்திற்கு உகந்தது.குடிமங்கலம் வட்டாரத்தில் சோளப்பயிர் சராசரியாக 400 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

    2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட கோ 32 ரகம் 105 முதல் 110 நாட்களில், 220 முதல் 300 செ.மீ., வரை வளரும்.மானாவாரி, இறவை என இரண்டு பருவத்திற்கும் ஏற்றது. தீவனம், தானியம் என இரண்டிற்கும் ஏற்ற ரகமாகும். இலைகள் நன்கு வளைந்து கதிர்கள் சமச்சீராகவும், தானியங்கள் மஞ்சளுடன் கூடிய வெள்ளை நிறத்திலும் காணப்படும்.

    இதன் ஆயிரம் தானிய எடை 16.25 கிராமாக இருப்பதால் ெஹக்டேருக்கு சராசரியாக 2,445 கிலோ, தானிய மகசூலும், 6,490 கிலோ தீவனமும் தரும் ரகமாகும். தானியம் அதிக புரதசத்தும் (11.31 சதவீதம் முதல் 14.66 சதவீதம்) நார்ச்சத்தும் (4.95 முதல் 5.8 சதவீதம்) கொண்டது. எனவே இந்த சோள ரகத்தினை விவசாயிகள் பயிரிட்டு தானியம், தீவனம் என இரண்டிலும் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்கலாம். இவ்வாறு உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    மேலும் சிறுதானிய சோளம் சாகுபடிக்கு விதை பண்ணைகளை உரிய நேரத்தில் வயல் ஆய்வுகள் மேற்கொண்டு கலவன்கள் அகற்றி உரிய தொழில் நுட்ப தகவல்கள் வழங்கி தரமான விதைகளாக உற்பத்தி செய்ய வேண்டும் என விதை சான்று அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

    ஆய்வின் போது குடிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா, விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ஷர்மிளா பானு, உதவி விதை அலுவலர்கள் ஸ்ரீனிவாசன், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

    நெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள். மக்காச்சோளம் சாப்பிட்ட பிறகு சில பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
    நெருப்பில் வேகவைத்த மக்காச்சோள முத்துக்களை சுடச்சுட சாப்பிடுவதற்கு பலரும் விரும்புவார்கள். அதை சாப்பிட்டவுடன் தண்ணீர் பருகுவதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்று வலி, இரைப்பை பிரச்சினை போன்ற வயிற்று உபாதைகள் ஏற்படக்கூடும். ‘‘மக்காச்சோளம் சாப்பிட்டதும் தண்ணீர் பருகும்போது செரிமானத்தில் தொய்வு ஏற்பட்டுவிடும். மக்காச்சோளத்தில் இருக்கும் ஸ்டார்ச், பருகும் தண்ணீருடன் சேர்ந்து வாயு பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். வயிறு வீக்கம், வயிற்றுவலி போன்ற பிரச்சினைகளும் உருவாகும்’’ என்கிறார், டாக்டர் அஷுதோஷ்.

    மக்காச்சோளம் சாப்பிட்டு 30 நிமிடங்கள் கழித்தே தண்ணீர் பருக வேண்டும். மேலும் தண்ணீருக்கு பதில் எலுமிச்சை சாறு பருகுவது நல்லது. எலுமிச்சை சாறுக்கு செரிமானத்தை எளிமைப்படுத்தும் தன்மை இருக்கிறது.

    மக்காச்சோளத்தில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும். எனினும் மக்காச்சோளத்தை அவித்த உடன் சூடாக சாப்பிடுவதே நல்லது. சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் மக்காச்சோளங்கள் சூடாக இருந்தாலும் அவை எப்போது வேகவைக்கப்பட்டது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நீண்ட நேரத்துக்கு முன்பு வேகவைத்தவற்றை திரும்பவும் வேக வைத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதில் தீங்குவிளைவிக்கும் பாக்டீரியாக்கள் கலந்திருக்கும். அதனால் வயிறுக்கு பாதிப்பு ஏற்படும்.
    ×