என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறக்கோரி மன்னார்குடியில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்
- மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
- இதனை முன்னிட்டு அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மன்னார்குடி:
டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு நிலக்கரி எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என அறிவித்ததை அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும், நில ஒருங்கிணைப்பு சட்டம்- 2023 ஐ தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று மன்னார்குடியில் பெரியார் சிலை முன்பு பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் ஏராளமான விவசாயிகள் திரண்டனர்.
பின்னர் அவர்கள் தங்களது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தனர். இதில் பஞ்சாப் மாநில விவசாயி ராஜவேந்தர் சிங் கோல்டன், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சுவாமி இந்தர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போராட்டத்தில் நிலக்கரி எடுக்கும் திட்டம் கைவிடப்படும் என அறிவித்ததை அறிவிப்பாணையாக வெளியிட வேண்டும், நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தபட்டன. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
இதனை முன்னிட்டு அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.






