என் மலர்
திருநெல்வேலி
- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது.
- கனமழையால் நெல்லை, கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
இந்நிலையில், நெல்லை மாவட்டத்தில்கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வி வகுப்புகளுக்கு இன்று நடக்க இருந்த பருவ தேர்வு மற்றொரு நாளில் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதேபோல், கனமழை எதிரொலியாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கொலை பற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
- முன்விரோதம் காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கும்பலாக வந்து இசக்கி பாண்டியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 52). விவசாயி. இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது வீட்டின் அருகே அவரது தாயார் உச்சிமாகாளி டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த ஊரில் மின்சாரம் தடைபட்டது. அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்களில் இசக்கிபாண்டி வீட்டின் அருகே வந்தனர். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.
அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த இசக்கிப்பாண்டியை அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனால் அலறித்துடித்த இசக்கி பாண்டியனின் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் எழுந்து அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த இசக்கிப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
கொலை பற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதில், முன்விரோதம் காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கும்பலாக வந்து இசக்கி பாண்டியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மேலகாடுவெட்டியில் வழக்கமாக தினசரி காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி திட்டமிட்டு மர்மநபர்கள் இசக்கி பாண்டியை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய கும்பல் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
- கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
- புதிய பாதையில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
நெல்லை:
நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோட்டில் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஊருடை யார்புரம் வழியாக தச்ச நல்லூர் செல்லும் சாலை யின் தொடக்கத்தில் ஸ்ரீபுரம் சந்திப்பு பகுதியில் அச்சாலையின் குறுக்காக கழிவுநீர் செல்வதற்கு ஏதுவாக வாறுகால் அமைக்கும் பணி இன்று முதல் தொடங்கியது.
தடுப்பு அமைப்பு
இந்த பணியை ஒட்டி சாலையில் குறுக்காக பேரி கார்டுகள் வைத்து தடுப்பு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சாலை வழியாக ஊருடையார்புரம் செல்வதற்கும் இருபுறமும் உள்ள வணிக நிறுவனங்க ளுக்கு செல்லவும், பெட்ரோல், டீசல் ஏற்றி செல்வதற்கும் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகிறது. தற்போது வாறு கால் பணிகள் தொடங்கி உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மாற்று பாதையில் செல்வ தற்கு நெல்லை மாநகர போலீசார் சார்பில் ஏற்பாடு கள் செய்யப்பட்டு இருந்தது. அந்த புதிய நடைமுறை யானது இன்று முதல் அமலுக்கு வந்தது.
போக்குவரத்து மாற்றம்
அதன்படி ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் தச்சநல்லூர் வரை செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு வழியாக தச்ச நல்லூர் சென்றன.
இரண்டாவதாக ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் ஊருடையான் குடியிருப்பு வரை சென்ற இருசக்கர வாகனங்கள் மற்றும் இலகுரக வாக னங்கள் ஈரடுக்கு மேம்பா லம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு, தச்சநல்லூர் சிவன் கோவில் தெரு வழியாக ஊருடையான் குடியிருப்புக்கு சென்றன.
இதேபோல் ஸ்ரீபுரம் சந்திப்பு முதல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வரை செல்லும் கனரக வாகனங்கள் ஸ்ரீபுரம் சந்திப்பில் இருந்து ஈரடுக்கு மேம்பாலம், சந்திப்பு பஸ் நிலையம், மதுரை ரோடு, முத்துராம் தியேட்டர் சந்திப்பு, தச்சநல்லூர் சிவன் கோவில் தெரு வழியாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் நிறுவனத்திற்கு சென்றன.
இதன் காரணமாக இந்த புதிய பாதையில் போக்கு வரத்து நெரிசல் காணப் பட்டது. அதனை ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று சரி செய்தனர்.
- பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.
- மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்களுக்கு சென்று கமிஷனர் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.
நெல்லை:
நெல்லை மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாக செய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இவற்றை வெளியேற்றி சுகாதார சீர்கேடு ஏற்படா மல் தடுக்கும் விதமாக மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மாநகர பகுதியில் உள்ள 4 மண்ட லங்களிலும் பெரும்பாலான தெருக்களில் சமீபத்தில் அமைக்கப்பட்ட புதிய தார்ச்சாலைகள் 2 நாட்கள் பெய்த கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் சேதமடைந்து விட்டதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர். தரமற்ற முறையில் சாலைகள் அமைக்கப்பட்டதன் காரணமாகவே புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு மழை நீர் தேங்கி கிடப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு புகார்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இதையடுத்து கமிஷனர் அவ்வப்போது மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான தெருக்க ளுக்கு சென்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். இதைத்தொடர்ந்து தரமற்ற சாலைகள் அமைத்த ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
- 3 பேர் கும்பல் சக்தியின் 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது.
- இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் முருகனின் கையை வெட்டினர்.
நெல்லை:
நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் சக்தி(வயது 32). ரியல் எஸ்டேட் அதிபரான இவர் நேற்று அதேபகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது 2 குழந்தைகளையும் விட்டுவிட்டு மொபட்டில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
சரமாரி வெட்டு
அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் சக்தியின் மொபட்டில் மோதவிட்டு அவரை கீழே தள்ளி அவரது 2 கைகளையும் சரமாரி வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் படுகாயம் அடைந்த சக்திக்கு சந்திப்பில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அறிந்த டவுன் போலீசார் அங்கு விரைந்த சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் 3 பேர் இருந்ததும், மெயின் சாலையில் நின்று 2 பேர் நோட்டமிட்டதும் அங்கு பொருத்தப்பட்டிருந்த காமிராக்களில் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சக்தி கட்டியுள்ள வீட்டின் இடம் மீது அவரது தூரத்து உறவினரான மடத்தான் என்பவர் தனக்கும் உரிமை உள்ளதாக கூறி அடிக்கடி சக்தியின் தந்தை முருகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இடப்பிரச்சினை முற்றியதில் மடத்தானின் மகன்கள் சக்தியின் தந்தை முருகனின் கையை வெட்டினர்.
இந்நிலையில் அந்த பிரச்சினை அவர்களுக்குள் தொடர்ந்து புகைந்து வரும் நிலையில் நேற்று மடத்தான் மற்றும் அவரது மனைவி பாப்பா ஆகியோரின் தூண்டுதலின்பேரில் அவரது மகன்கள் சிவா, முத்துப்பாண்டி மற்றும் 3 பேர் இந்த அரிவாள் வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சிவா, முத்துப்பாண்டி ஆகியோரின் பெயர்கள் ரவுடிகள் பட்டியலில் இருப்பதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
- நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி பாளையங்கோட்டை புனித இன்னாசியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
- பாயில் அணி போட்டியில் சந்தோஷ் குமார், சுகுல், அசுகவி முகேந்திரவாசு ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
நெல்லை:
நெல்லை வருவாய் மாவட்ட அளவிலான வாள் சண்டை போட்டி பாளையங்கோட்டை புனித இன்னாசியார் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 300-க்கும் மேட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட னர்.
இதில் வண்ணார்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் பாயில் அணி போட்டியில் சஞ்சய், லெஷ்மன் பரணி, தரண், ஸ்ரீ மகா தேவன் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றனர்.
17 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் சேபர் தனிநபர் போட்டியில் கௌது வருசை முகம்மது தங்க பதக்கம் வென்றார். சேபர் அணி போட்டியில் ஸ்ரீ ஹரிஹரன், செல்வ ராகுல், கௌது வருசை முகம்மது, முகமது நதீம் ஆகியோர் தங்க பதக்கம் வென்றனர். பாயில் அணி போட்டியில் சந்தோஷ் குமார், சுகுல், அசுகவி முகேந்திரவாசு ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
எப்பி அணி போட்டியில் சஞ்சய், இசக்கி சரவண குரு, சிவ சண்முகம் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். 19 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் எப்பி தனிநபர் போட்டியில் ஆகாஷ் கிருஷ்ணா தங்க பதக்கம் வென்றார். எப்பி அணி போட்டியில் சாம்சன் டேவிட், ஆகாஷ் கிருஷ்ணா, சஞ்சய் குமார், ராஜா சிவசுப்பிர மணியன் ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர்.
14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் பாயில் தனிநபர் போட்டியில் கண்மணி, ஹரீஷ்மா வெங்கலப்பதக்கம் வென்றனர். பாயில் அணி போட்டியில் கண்மணி, ஹரீஷ்மா, நித்திய ஸ்ரீ ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியின் சேர்மன் சிவ சேதுராமன், தாளாளர் முனைவர் திருமாறன், முதல்வர் முருக வேள், ஒருங்கிணைப்பாளர் சண்முகராணி, உடற்கல்வி இயக்குநர் உமாநாத், உடற்கல்வி ஆசிரியர்கள் மோகன்குமார், பூச்சியம்மாள் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
- முத்து கிருஷ்ணசுவாமி குரு பூஜையையொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடைபெற்றது.
- 26-ந்தேதி மாலை சூட்டுப்பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வள்ளியூர்:
வள்ளியூர் சூட்டுப் பொத்தை அடிவாரத்தில் ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமி கோவில் உள்ளது. ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமியின் 110-வது கிரிவல தேரோட்டத்திருவிழா இன்று காலை 5 மணிக்கு தொடங்கியது.
தேரோட்டம்
முன்னதாக சூட்டுப் பொத்தை அடிவாரத்தில் உள்ள வனவிநாயகருக்கு சிறப்பு பூஜையுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மேருமண்ட பத்தில் உள்ள ஸ்ரீ முத்து கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடைபெற்றது.
ஸ்ரீமுத்து கிருஷ்ண சுவாமி குரு பூஜையை யொட்டி முக்கிய நிகழ்வாக இன்று காலை 5 மணிக்கு கிரிவல தேரோட்டம் நடை பெற்றது. தேரோட்டத்தை பூஜ்ஜிய ஸ்ரீ மாதாஜி வித்தம்மா தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மேளவாத்தி யங்கள் முழங்க லலிதகலா மந்திர் கலைஞர்களின் பரத நாட்டியம், கோலாட்டங்க ளுடன் தேரோட்டம் நடை பெற்றது.
வெளிநாடுகளில் இருந்து பக்தர்கள்
சூட்டுப்பொத்தையை சுற்றி திரளான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்து வந்தனர். இத்தேரோட் டத்தில் சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடு களில் இருந்தும் டெல்லி, பெங்களூர், கோவை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்தும் ஸ்ரீ முத்துகிருஷ்ணா சுவாமி பக்தர்கள் பங்கேற்றனர். தேர் நிலைக்கு வந்து சேர்ந்ததும் சிறப்பு அன்ன தானம் வழங்கப்பட்டது. நாளை (வியாழக்கிழமை) காலை 10.15 மணிக்கு ஸ்ரீ மஹாமேரு தியான மண்ட பத்தில் ஸ்ரீமுத்துகிருஷ்ண சுவாமி குருபூஜை நடைபெறு கிறது.
26-ந்தேதி மாலை சூட்டுப் பொத்தை மீது கார்த்திகை தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், 27-ந்தேதி காலை 5 மணிக்கு கிரிவல வழிபாடும் நடை பெறுகிறது.
பின்னர் குரு ஜெயந்தி ஆராதனாவும், அபிஷேக திருவிளக்கு பூஜையும் நடை பெறுகிறது. விழா ஏற்பாடு களை பூஜித குரு மாதாஜி வித்தம்மா தலைமையில் ஸ்ரீ முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
- அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நெல்லை மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் தலைமையில் நடக்கி றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நட வடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- போட்டிகளை தெற்குகள்ளிகுளம் உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் தொடங்கிவைத்தார்.
- மாணவ, மாணவிகளுக்கிடையே மாறுவேடப்போட்டி, கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
வள்ளியூர்:
தெற்குகள்ளிகுளம் சமாரியன்அறக்கட்டளை, ஜி.எம்.கல்வி அறக்கட்டளை மற்றும் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 13-வது ஆண்டு கலைத்திறன் போட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு தெற்கு கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் முன்னிலை வகித்தார். வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரிகளின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், ரோஸ்மேரி, ஜெயந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.
பின்னர் போட்டிகளை தெற்குகள்ளிகுளம் உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் தொடங்கிவைத்தார்.
மாணவ, மாணவி களுக்கிடையே மாறுவேடப் போட்டி, பாட்டு போட்டி, பேச்சுப் போட்டி, நடனம், மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.
தொடர்ந்து அறிவியல் திறன் போட்டிகளும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு டி.டி.என்.கல்விக்குழுமத்தின் தலைவர் டி.லாரன்ஸ் மற்றும் மருத்துவர் கிங்ஸ்டன் ஆகியோர் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினர்.
ஆங்கில வழி கல்வி பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் வள்ளியூர் கெயின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் முதலிட த்தையும், கெயின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் இடத்தை யும், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றனர். 4-ம் இடத்தை வள்ளியூர் ஜோனத்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5-ம் இடத்தையும் பெற்றன.
தமிழ்வழிக்கல்வி பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் வள்ளியூர் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 2-ம் இடத்தை தெற்குகள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப் பள்ளியும், 3-ம் இடத்தை ராதாபுரம் அரசு தொடக்கப்பள்ளியும் பெற்றன.
விழாவில் தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, சார்லஸ் பெஸ்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தெற்குகள்ளி குளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் நன்றி கூறினார்.
- இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
- மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
களக்காடு:
கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஒரு நிதி நிறுவனத்தின் கிளை நெல்லை மாவட்டம் களக்காடு அண்ணா சாலையில் உள்ளது. இங்கு மேலாளர் மற்றும் நிதி நிறுவன ஊழியர்களாக களக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அதிகாரிகள், களக்காடு கிளையில் கணக்கு விபரங்கள் மற்றும் நகை இருப்பு குறித்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அங்கு வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை லாக்கரில் இருந்து எடுத்து அதே போல் போலியாக நகைகளை தயாரித்து உள்ளே வைத்துவிட்டு ஒரிஜினல் தங்க நகைகளை நிதிநிறுவன ஊழியர்கள் எடுத்து கொண்டதும், அதனை வேறு ஒரு அடகு கடை நடத்திவரும் நபரின் மூலமாக விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இவ்வாறாக சுமார் ரூ.7 1/4 கோடி வரையில் முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தலைமை அலுவலக அதிகாரிகள், நெல்லை சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அவரது உத்தரவின்பேரில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தனுசியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான போலீசார் நேற்று களக்காட்டில் உள்ள நிதி நிறுவனத்தில் நேரடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் அந்த நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 2 ஊழியர்கள் சிக்கியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த மற்றொரு அடகு கடை நடத்தி வரும் கணவன்-மனைவி உள்பட மேலும் 3 பேரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் தொடர்புடைய 5 பேரையும் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நேற்று நள்ளிரவு வரையிலும் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்றும் 2-வது நாளாக அவர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அவர்கள் தெரிவித்த தகவலின்பேரில் முக்கிய நபர் ஒருவரை போலீசார் பிடித்து வந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்கு அழைத்து சென்றபோது அந்த நபர் தப்பி ஓடி விட்டதாகவும், அவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் பலரும் தங்கள் புகார்களை தெரிவிப்பதற்காக கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.
- போராட்டத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறும் என்று மாநகராட்சி சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதிக்கான புகார் களை தெரிவிப்பதற்காக மனுக்களுடன் மாநகராட்சி குறைதீர் கூட்ட அரங்கிற்கு வந்திருந்தனர்.
ஆனால் மனுக்களை பெற்றுக் கொள்வதற்கு மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் என யாரும் அங்கு வரவில்லை. இதனால் சில மணி நேரங்கள் அங்கே பொது மக்கள் காத்திருந்த நிலையில் தி.மு.க. கவுன்சி லர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்களும் மனு அளிக்க வந்தபோது அவர்களும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மேயர் சரவணன் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
- டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது.
நெல்லை:
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நிலவேம்பு கசாயம்
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.
டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைக ளுக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் அந்தோணி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது. தொடர்ந்து மாநகரப் பகுதி முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நில வேம்பு கசாயம் வழங்குவ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.






