என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தெற்குகள்ளிகுளம் ஜி.எம்.கல்வி அறக்கட்டளை சார்பில் கலைத்திறன் போட்டி
    X

    தெற்குகள்ளிகுளம் ஜி.எம்.கல்வி அறக்கட்டளை சார்பில் கலைத்திறன் போட்டி

    • போட்டிகளை தெற்குகள்ளிகுளம் உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் தொடங்கிவைத்தார்.
    • மாணவ, மாணவிகளுக்கிடையே மாறுவேடப்போட்டி, கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.

    வள்ளியூர்:

    தெற்குகள்ளிகுளம் சமாரியன்அறக்கட்டளை, ஜி.எம்.கல்வி அறக்கட்டளை மற்றும் புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் பள்ளிகளுக்கிடையிலான 13-வது ஆண்டு கலைத்திறன் போட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவுக்கு தெற்கு கள்ளிகுளம் பங்கு தந்தை ஜெரால்டு எஸ்.ரவி தலைமை தாங்கினார். தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் முன்னிலை வகித்தார். வள்ளியூர் நேரு நர்ஸிங் கல்லூரிகளின் தாளாளர் ஹெலன் லாரன்ஸ், ரோஸ்மேரி, ஜெயந்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

    பின்னர் போட்டிகளை தெற்குகள்ளிகுளம் உதவி பங்கு தந்தை ஜாண் ரோஸ் தொடங்கிவைத்தார்.

    மாணவ, மாணவி களுக்கிடையே மாறுவேடப் போட்டி, பாட்டு போட்டி, பேச்சுப் போட்டி, நடனம், மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து அறிவியல் திறன் போட்டிகளும் நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு டி.டி.என்.கல்விக்குழுமத்தின் தலைவர் டி.லாரன்ஸ் மற்றும் மருத்துவர் கிங்ஸ்டன் ஆகியோர் தலைமை தாங்கி பரிசுகளை வழங்கினர்.

    ஆங்கில வழி கல்வி பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் வள்ளியூர் கெயின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாண வர்கள் முதலிட த்தையும், கெயின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 2-ம் இடத்தை யும், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றனர். 4-ம் இடத்தை வள்ளியூர் ஜோனத்தான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும், தெற்கு கள்ளிகுளம் ஓ.எல்.எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 5-ம் இடத்தையும் பெற்றன.

    தமிழ்வழிக்கல்வி பள்ளிகளுக்கிடையிலான போட்டிகளில் வள்ளியூர் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 2-ம் இடத்தை தெற்குகள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப் பள்ளியும், 3-ம் இடத்தை ராதாபுரம் அரசு தொடக்கப்பள்ளியும் பெற்றன.

    விழாவில் தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, சார்லஸ் பெஸ்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தெற்குகள்ளி குளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தர்மகர்த்தா மருத்துவர் ஜெபஸ்டின் ஆனந்த் நன்றி கூறினார்.

    Next Story
    ×