என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
    • சொக்கப்பனை முக்கு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இதனையொட்டி டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த ரத வீதிகளில் பந்தல் போடும் நிகழ்வுக்காக சொக்கப் பனை முக்கு பகுதியில் இருந்து பேரிகார்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரதவீதி களில் சிறப்பு கவனம் செலுத்தி தூய்மை பணி களை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சாக்கடை கால்வாய் அடைப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக டவுன் போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள அறிஞர் அண்ணா தெருவில் சிறப்பு துப்புரவு பணி இன்று நடைபெற்றது. அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த தூய்மை பணியில் சாக்கடை கழிவுகள் அப்புறப் படுத்தப்பட்டு தெரு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.

    • கவிதா திருமணமாகி கணவர் பிரவீன்குமாருடன் சென்னையில் வசித்து வருகிறார்.
    • பல்வேறு இடங்களில் தேடியும் கவிதா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கீழஉப்பூரணி மேலத்தெருவை சேர்ந்தவர் அந்தோணி சாமி. இவரது மகள் கவிதா (வயது 21) திருமணமாகி தனது கணவர் பிரவீன்குமாருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவர் கடந்த 25-ந் தேதி கீழ உப்பூரணியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.

    அதன் பின் கடந்த 25-ந் தேதி களக்காட்டிற்கு செல்வதாக கூறி விட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனல் அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சீதை (60) பல்வேறு இடங்களில் தேடியும் கவிதா பற்றி எந்த தகவலும் கிடைக்காததால் களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்திட்டார்.

    நெல்லை:

    இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக கூறி அவரை அப்பொறுப்பில் இருந்து உடனடியாக அகற்ற குடியரசு தலைவரை வலியுறுத்தி நெல்லை டவுன் காந்தி சிலை முன்பு இன்று நெல்லை மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் கவர்னருக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் நிஜாம் ஆகியோர் தலைமை தாங்கினர். நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்துகொண்டு முதல் கையெழுத்தை போட்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன், ஐ.யூ.எம்.எல். நெல்லை மாவட்ட செயலாளர் பாட்டபத்து முகமது அலி, ம.தி.மு.க. நிர்வாகிகள் மணப்படை மணி, கல்லத்தியான், கோல்டன் கான் மற்றும் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர். இதில் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்கள் பொது மக்களிடம் கையெழுத்து பெற்றனர். முன்னதாக காந்தி சிலைக்கு மேயர் சரவணன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம் மாலை அணிவித்தனர்.

    • மாரியம்மாள் நேற்றிரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 5 ஆண்டுகளாக மாரியம்மாள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி பாரதியார் நகரை சேர்ந்தவர் நயினார். இவரது மகள் மாரியம்மாள்(வயது 27).

    இவர் நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுத்தமல்லி போலீ சார், மாரியம்மாள் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், கடந்த 5 ஆண்டுகளாக மாரி யம்மாள் மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததாக வும், அதன் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    எனினும் வேறு ஏதேனும் காரணம் இருக்கலாமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.
    • நமது மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள் விற்பதற்கு அனுமதி கொடுத்தால் டாஸ்மாக் வியாபாரம் சரிந்து விடும் என்பதற்காக அரசு அதற்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது.

    மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. இரண்டு அரசுகளுமே கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக தான் செயல்படுகிறது.

    பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் அறிவித்து வருகிறார்கள். எல்லா தலைவர்களும் பேசுவார்கள். ஆனால் அதன் பின்னர் அவர்களுடனே போய் கூட்டணி வைத்திருப்பார்கள்.

    மதுக்கடைகளை மூடினால் தான் கூட்டணி வைப்பேன் என்று கூறுவதற்கு தலைவர் இருக்கிறார்களா?. டாக்டர் ராமதாஸ் தான் அது போல் போராடினார். ஆனால் மறுபடியும் அவரும் கூட்டணி வைக்கும்போது மதுக்கடை பற்றி வாய் திறக்கவில்லை. இதனால் தான் நான் தனியாகவே போட்டியிடுகிறேன்.

    கம்யூனிஸ்டு எங்கு இருக்கிறது? அது திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளைக்களமாக மாறி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.வை விட பெரிய கட்சி நான் தான். இங்கு அவர்கள் கட்சி தனித்து நின்று என் கட்சியை விட அதிக ஓட்டு வாங்குமா?.

    தேர்தலை நோக்கி தான் வேலை செய்கிறேன். தற்போது ஒரு பயணம் செல்கிறேன். 3 மாதம் கழித்து மீண்டும் சுற்றுவேன். மாற்றத்தை நிகழ்த்த வேண்டும். அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கிறோம்.

    நமது மாநிலத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். 403 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரபிரதேசத்தை பிரிக்க மறுக்கிறார்கள். ஏனெனில் மத்திய அரசின் ஓட்டுகள் பிரிந்து விடும் என்று நினைக்கிறார்கள்.

    பா.ஜ.க. மீண்டும் மீண்டும் வரும். நாம் மாண்டு மாண்டு போக வேண்டியது தான். பா.ஜனதா இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் நாடு சுடுகாடாகிவிடும். நாட்டு நலன் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும். காங்கிரஸ் தலைமையில் மற்ற தலைவர்கள் சேர்வதற்கு நம்பிக்கை இல்லாமல் உள்ளனர். அந்தந்த மாநில கட்சிகள் வலுப்பெற்றால் தான் இந்தியாவை யார் ஆள்வது என்று ஒன்று கூடி கூட்டாட்சியை கொண்டு வர வேண்டும்.

    நான் பணத்தை நம்பவில்லை. நான் பிறந்த இனத்தை நம்பி தேர்தலில் நிற்கிறேன். எனது கோட்பாடுகளை ஏற்பவர்களுடன் கூட்டணி வைப்பேன். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது என்ற என்னுடைய கருத்தை தான் நடிகர் விஜய் வலியுறுத்துகிறார்.

    வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர் தேர்தலில் நிற்பதற்கு 10 ஆண்டுகள் தடை என்ற உத்தரவை தேர்தல் ஆணையம் பிறப்பித்தால் அனைவரும் பயப்படுவார்கள். அப்போது தான் ஓட்டுக்கு பணம் கொடுப்பது நிற்கும்.

    தமிழகத்திலேயே நடிகர் விஜய் தான் முதன்மையான நடிகர் அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகர். தமிழர்களுக்கு கோடிக்கணக்கான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு போராடுவதற்கு ஏராளமான தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்.

    நடிகர் விஜய் வரட்டும் வரவேற்போம். எனக்கு யாருடைய துணையும் தேவையில்லை. நடிகர் விஜய் தான் என்னுடன் சேர்வது பற்றி முடிவு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள இடிந்தகரை பகுதியில் மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று இரவு இடிந்தகரை ஊருக்கு சற்று தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் சிலர் சென்றபோது அங்கு மர்ம பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூடங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், கூடங்குளம் இன்ஸ்பெக்டர் ஜான் பிரிட்டோ ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அவர்கள் நடத்திய ஆய்வில் அது நாட்டு வெடிகுண்டு என்பதும், வெடிக்காமல் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்களை வெளியேற செய்தனர். பின்னர் நெல்லை மாவட்ட வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை இடிந்தகரைக்கு விரைந்து சென்று வெடிக்காமல் இருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக கைப்பற்றினர்.

    தொடர்ந்து அதனை செயலிழக்க செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பகுதியில் யாரேனும் நாட்டு வெடிகுண்டை வீசி பயிற்சி எடுத்திருக்கலாம், அப்போது அது வெடிக்காமல் இருந்திருக்கும்.

    இதனால் அதை மீண்டும் எடுத்துச்செல்லாமல் அப்படியே விட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    எனினும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு இன்று காலை அந்த காட்டுப்பகுதி முழுவதும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டது.
    • 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி இதுவரை முழுமையாக நிறைவடையாமல் உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகரின் இதயப்பகுதியாக விளங்கும் சந்திப்பு பஸ் நிலையம் பஸ்கள் போக்குவரத்து, பயணிகள் நடமாட்டம் என்று எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதுப்பிப்பு

    நெல்லை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.965 கோடி செலவில் பல்வேறு பணிகள் தொடங்கப் பட்டது. இதில் நெல்லை 4.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட சந்திப்பு பஸ் நிலைய த்தையும் முழுமை யாக இடித்துவிட்டு புதிதாக கட்டுவதற்கு ரூ.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டது.

    அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் சுமார் 5 ஆண்டுகளை தொட்ட பிறகும் இதுவரை முழுமையாக நிறைவடை யாமல் நிற்கிறது. இதனால் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்த முடியாமல் பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    பயணிகள் கோரிக்கை

    எனவே இந்த பஸ் நிலைய பணிகள் முழுமை யாக முடிவடையும் வரை காத்தி ருக்காமல் வியா பாரிகள், பொது மக்கள், ரெயில் நிலை யத்திற்கு வரும் பயணிகள் ஆகியோ ரின் நலன் கருதி தற்காலி கமாக பஸ் நிலையத்தை சுற்றியாவது பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து கடந்த 10 நாட்களாகவே மாநக ராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் பஸ் நிலைய பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டு கட்டுமான பணிக்காக சுற்றிலும் அடைக்கப் பட்டிருந்த தகரங்களை உள்ளே தள்ளி வைத்து விட்டு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர்.

    மாநகர பஸ்கள் இயக்கம் தொடங்கியது

    அதேநேரத்தில் முதல்கட்டமாக மாநகர பகுதிக்குள் இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் விரிவாக்க பகுதிகள், புதிய பஸ் நிலையங்களுக்கு இயக்கப்படும் பஸ்களை மட்டுமே சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி ராஜா பில்டிங் சாலையில் பயணிகள் வசதிக்காக 5 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கப்பட்டது. தற்காலிகமாக பஸ்களை இயக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்த நிலையில் இன்று காலை 6 மணி முதல் அந்த வழியாக பஸ்கள் இயக்கப்பட்டன.

    இதனை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் மண்டல சேர்மன் தச்சை சுப்பிர மணியன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நெல்லை வடக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ், கவுன்சிலர்கள் உலகநாதன், கிட்டு, கந்தன், பவுல்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பஸ் நிலையத்தை திறக்க நடவடிக்கை

    பின்னர் கலெக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறும்போது, நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இன்னும் 60 நாட்களில் திறக்கப்படும். சந்திப்பு பஸ் நிலையத்தை சுற்றிய சாலைகளும் விரைவில் அமைக்கப்படும் என்றார்.

    பொதுமக்கள் மகிழ்ச்சி

    சந்திப்பு பஸ் நிலையம் வழியாக பஸ்கள் இயக்கப்பட்டதால் பொது மக்களும், வியாபாரிகளும், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகளும், பணிக்கு செல்லும் பெண்களும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்பட்டதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் பொதுமக்கள் பஸ்களில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

    இதுகுறித்து நெல்லை அருகே உள்ள தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்த மீனா கூறும்போது, நான் கொங்கந்தான் பாறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். சந்திப்பு பஸ் நிலையம் திறக்கப்படாததால் தினமும் தாழையூத்தில் இருந்து வரும் பஸ்சை எதிர்பார்த்து அதில் ஏறி அங்கிருந்து வண்ணார் பேட்டை செல்கிறேன். பின்னர் அங்கிருந்து மற்றொரு பஸ்சை எதிர்பார்த்து காத்திருந்து தினமும் சென்று வந்தேன்.

    இந்நிலையில் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்கப்படுவதால் பஸ் பயணம் சிரமம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இங்கு வந்து இறங்கினால், சுற்றிலும் அனைத்து விதமான கடைகளும் இருக்கிறது. இதில் நமக்கு தேவையான பொருட்கள் எதுவானாலும் எளிதாக வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் வண்ணார் பேட்டையில் அப்படி இல்லை என்றார்.

    தென்காசி- பாபநாசம் பஸ்கள்

    சந்திப்பு பகுதியில் ஒரு ஸ்டூடியோ வில் வேலை பார்க்கும் ஆலங் குளத்தை சேர்ந்த ரமேஷ் கூறு கை யில், 5 ஆண்டுகளுக்கு பிறகு பஸ்களை இயக்கு வது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    தற்போது டவுன் பஸ்களை இயக்கியது போல், பாப நாசம், சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களையும் சந்திப்பு பஸ் நிலையம் வழியாக இயக்க வேண்டும். ஏனெனில் அந்த இடங்களில் இருந்து சந்திப்பில் உள்ள கடைகள், நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்கள் தனியார் கண் ஆஸ்பத்திரி, தேவர் சிலை பகுதிகளில் இருந்து நடந்து தான் வரவேண்டி உள்ளது. எனவே விரைவில் அதனையும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கழிப்பறை வசதி

    நெல்லை தச்ச நல்லூரை சேர்ந்த வாடகை கார் டிரை வர் முருகன் கூறுகை யில், பஸ்கள் ஓட தொடங்கி உள்ளதால் பள்ளி செல்ப வர்கள், பெண்கள் நிம்மதி அடைந்து ள்ளனர். இங்கு வெவ்வேறு வழித்தட ங்களுக்கு செல்லும் பஸ்களு க்காக 5 நிறுத்த ங்கள் அமைக்க ப்பட்டு ள்ளது. ஆனால் அதனை முறையாக எடுத்து கூற போக்குவரத்து அதிகாரிகள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

    எங்கு நமது ஊருக்கான பஸ் நிற்கும் என்று தெரியாமல் வயதானவர்கள் சற்று சிரமப்படுகின்றனர். அதேபோல் கழிப்பறை வசதிகள் தற்காலிகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை உள்ளிட்டவை முக்கியம். எனவே ஓரிரு நாட்களில் அதனையும் நடை முறைப்படுத்த வேண்டும். மழை பெய்துவிட்டால் இந்த பகுதியில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறிவிடும். எனவே அதற்கு முன்பாக சாலை அமைக்க வேண்டும் என்றார்.

    • ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
    • பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடை பெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

    குண்டர் சட்டத்தில் நடவடிக்கை

    புதிய மக்கள் தமிழ் தேசம் மாநில தலைவர் செந்தூர் மகாராஜன் தலைமையில் கட்சியினர் திரண்டு வந்து அளித்த மனுவில், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ராஜ கண்ணப்பனை ஒருமையில் பேசி மிரட்டும் வகையில் ராமநாதபுரத்தில் நடந்து கொண்ட நவாஸ்கனி எம்.பி., மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நபரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    இந்து மக்கள் கட்சி மாநில துணைத்தலைவர் உடையார் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனுவில், மேலப்பாளையம் கருங்குளம் பகுதியில் சுமார் 1½ ஏக்கர் நிலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு சொந்தமான தாக உள்ளது. இதனை குறிப்பிட்ட நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தின் மீதான அனைத்து பயன்பாட்டையும் உடனே ரத்து செய்ய வேண்டும். கோவிலுக்கு சொந்தமான இடத்தை போர்க்கால அடிப்படையில் மீட்க நடவடிக்கை எடுத்து மீட்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    ஆட்டோ நிறுத்தம்

    இந்து ஆட்டோ தொழிலாளர் முன்னணி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், சந்திப்பு பஸ் நிலையத்தில் கடந்த 35 ஆண்டு களாக அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் 25 உறுப்பி னர்களுடன் செயல்பட்டு வருகிறது.

    பஸ் நிலையம் பணியால் கடந்த 5 ஆண்டுகளாக அங்கு ஆட்டோக்கள் நிறுத்த இடமில்லை. எனவே ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

    எனவே பஸ் நிலைய பணி முடிவடைந்ததும் பஸ் நிலையம் அருகிலேயே அம்பேத்கர் ஆட்டோ நிறுத்தத்தை மீண்டும் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர். ராதாபுரம் தாலுகா சங்கனாபுரம் ஊர் பொதுமக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், தங்கள் பகுதியில் இயங்கி வரும் தார் பிளான்டி னால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதனை இயங்க தடை விதிக்க வேண்டும் என்று கூறி யிருந்தனர்.

    • கோரிக்கை குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாளை மனக்கவலம் பிள்ளை நகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.

    இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என கூறி அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 7-வது வார்டு கவுன்சிலர் இந்திரா மற்றும் 7-வது வார்டு தி.மு.க நிர்வாகி சுண்ணாம்பு மணி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பாளை-திருச்செந்தூர் சாலையில்திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பாளை உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • முருகன் இன்று காலை தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
    • நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சென்ற ரெயிலில் முருகன் அடிபட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே உள்ள பட்டன் கல்லூர் வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் இன்று காலை பட்டன் கல்லூருக்கு சற்று தொலைவில் நெல்லை - செங்கோட்டை ரெயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக தகவல் அறிந்த சுத்தமல்லி போலீசார் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சந்திப்பு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யதாஸ், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் இன்று காலை தாம்பரத்தில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சென்ற ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

    மேலும் அவர் தற்கொலை செய்வதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்ததும், ரெயில் மோதியதில் தலை துண்டிக்கப்பட்டு இறந்ததும் தெரிய வந்தது.

    அவரது உடலை மீட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
    • பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியின் பிறந்தநாள் இன்று நாங்குநேரி சட்டமன்ற தொகுதி முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி, பாளை காமராஜ் நகரில் அமைந்துள்ள உதவும் கரங்கள், வள்ளலார் குழந்தைகள் இல்லத்தில் நடந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு, முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் குழந்தைகளுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் காமராஜ், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத் தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோ பால், பாளை. வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோ ரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணைச்செயலாளர் கமலா, நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வினோத் போத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

    சிறப்பு பூஜை

    தொடர்ந்து, மகாராஜா நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் காங்கிரஸ் கொடியை ஏற்றிய நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ., பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதையடுத்து, நாங்குநேரி பெரும்பத்து விலக்கு பகுதியிலும் காங்கிரஸ் கொடி ஏற்றிவைத்து, அங்கு வந்த அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

    தொடர்ந்து, பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி அழகிய நம்பிராயார் கோவிலில் ராகுல்காந்தி பிரதமராக வேண்டி நடைபெற்ற சிறப்பு பூஜை மற்றும் வழிபாட்டில் நாங்குனேரி ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அதில் கலந்து கொண்ட அனை வருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் தமிழ்செல்வன், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாநில செயலாளர் ஜோதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் காமராஜ், மாவட்ட துணை தலைவர்கள் செல்லப்பாண்டி, ராஜகோபால், சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பிதுரை, கக்கன், மாவட்ட கவுன்சிலர் தனிதங்கம், நாங்குநேரி, களக்காடு, பாளை வட்டார தலைவர்கள் கனகராஜ், கணேசன், நளன், சங்கரபாண்டி, அலெக்ஸ், காளப்பெருமாள், வாகை துரை, ராமஜெயம், வட்டார பொறுப்பாளர் பால்பாண்டி, பானு, காங்கிரஸ் நகரத் தலைவர்கள் ராசாத்தி அம்மாள், ஜார்ஜ் வில்சன், முத்துகிருஷ்ணன், ரீமாபைசல், மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மகிளா காங்கிரஸ் மாநில இணை செயலாளர் கமலா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டேனியல், முன்னாள் நெல்லை பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் வினோத் போத்திராஜ், ஏர்வாடி நகர செயலாளர் ஆபிரகாம், நாங்குநேரி சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராஜ்குமார், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சித்திரைவேல், பிலியன்ஸ், வின்சென்ட், அன்வர், வெள்ளைசாமி, ஆனந்தராஜன், ராமநாதன், முத்துராமலிங்கம், ஜெயசீலன், இளங்கோ, தங்கம், சதாசிவம், அருண், லட்சுமண், ராஜன், சுயம்பு, கவுன்சிலர் வனிதா காமராஜ், மீகா, மரியசாந்தி, மகளிர் அணி தலைவிகள் வசந்தா லதா, பாலம்மாள், ஸ்ரீதேவி, பிரியா, விமலா, தங்கலெட்சுமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வேல்பாண்டியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் தோட்டத்தில் தேங்காய்கள் பறித்து கொண்டிருந்தனர்.
    • மாடசாமி, மகாராஜன் ஆகியோர் சேர்ந்து வேல் பாண்டியை கம்பால் சரமாரியாக தாக்கினர்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள கல்மாணிக்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வேல்பாண்டி (வயது38). விவசாயி.

    தகராறு

    இவருக்கும், இவரது தந்தை மாடசாமி (80), அண்ணன் மகாராஜன் (42) ஆகியோர்களுக்கும் பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வருகிறது. நேற்று வேல்பாண்டியும், அவரது மனைவி பரமேஸ்வரியும் (33) தங்களது குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்தில் தேங்காய்கள் பறித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மாடசாமி, மகாராஜன் ஆகியோர் வேல்பாண்டியிடம் உங்களுக்கு இங்கு பங்கு கிடையாது என்று கூறி உள்ளனர். இதில் அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த மாடசாமி, மகாராஜன் ஆகியோர் சேர்ந்து வேல் பாண்டியை கம்பால் சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் வெட்டினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுபற்றி விஜயநாரா யணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மாடசாமி மற்றும் அவரது மகன் மகாராஜனையும் தேடி வருகின்றனர்.

    ×