என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.
    • ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்க ளின் விலைவாசி உயர்வு, சட்டம் -ஒழுங்கு சீர்கேடுகள் முதலான வற்றை கட்டுப்படுத்த தவறியதாக கூறி தி.மு.க. அரசை கண்டித்தும், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக பதவி நீக்கம் செய்யக் கோரியும் இன்று நெல்லை யில் வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகே நெல்லை மாவட்ட அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமை தாங்கினார்.இதில் அமைப்புச் செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன், இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ., ஏ.கே.சீனிவாசன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் சவுந்தர்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பெரிய பெருமாள், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி ஆவரை பால்துரை, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் உவரி ராஜன் கிருபாநிதி, இணை செயலாளர் சிந்தாமணி ராமசுப்பு, பொதுக்குழு உறுப்பினர் கங்கை வசந்தி, முன்னாள் அமைப்புச் செயலாளர் நாராயண பெருமாள், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சிவந்தி மகாராஜேந்திரன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செய லாளர் முத்துப்பாண்டி, முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், திசையன் விளை பேரூ ராட்சி தலைவர் ஜான்சி ராணி, ஒன்றிய செய லாளர்கள் முத்துக்குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிர மணியன், கே.பி.கே. செல்வராஜ், அந்தோணி அமலராஜா, பகுதி செயலாளர்கள் சண்முக குமார், திருத்துச் சின்னத்துரை, காந்தி வெங்கடாசலம், வக்கீல் ஜெனி, சிந்தாமணி ராமசுப்பு, கவுன்சிலர் சந்திரசேகர், செவல் முத்துசாமி, வக்கீல்கள் ஜெயபாலன், ரமேஷ், அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவரணி செய லாளர் ஜெய்சன் புஷ்பராஜ், மேலப்பா ளையம் பகுதி பாசறை செயலாளர் சம்சு சுல்தான், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், மாவட்ட பிரதிநிதி ஈஸ்வரி கிருஷ்ணன், மணி, பாறையடி மணி, ஆபீஸ் மணி, நந்தகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது விலைவாசி உயர் வை கண்டித்து அ.தி.மு.க நிர்வாகி ஒருவர் உடலில் காய்கறிகளை மாலையாக அணிவித்து வந்திருந்தார்.

    • கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர்.
    • தப்பி ஓடியவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு சப்-இன்ஸ் பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கடம்போடு வாழ்வு குளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது களக்காடு கீழத்தெருவை சேர்ந்த சதீஸ் (வயது25), சுப்பிரமணியபுரம் வடக்குத் தெருவை சேர்ந்த பாலதுளசி (34) ஆகியோர் ஜே.சி.பி. எந்திரத்தின் மூலம் எந்தவித அனுமதியும் இன்றி மண்ணை திருடி வயல் வரப்பில் வைத்து கொண்டிருந்தனர்.

    போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடினர். அவர்களை துரத்தி பிடித்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மண்திருட்டுக்கு பயன்படுத்திய ஜே.சி.பி. எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.
    • பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர்.

    நெல்லை:

    உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.

    யோகா கலையின் மகத்துவம், அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் கடந்த சில ஆண்டுகளாக பிரம்மாண்டமான முறையில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான யோகா தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படு கிறது. இதனை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் யோகாசனம் நிகழ்ச்சி நடை பெற்றது.

    பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் விளையாட்டரங்கில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை, நேரு யுவகேந்திரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் உள்ளிட்டவர்கள் இணைந்து சர்வதேச யோகா தின நிகழ்ச்சியை நடத்தினர்.

    இந்த நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட இளையோர் அலுவலர் ஞானச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட யோகாசன சங்க தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தின ராக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, கல்வி ஆய்வாளர் ஜெபராஜ் ஆகியோர் கலந்து கொண்ட னர். சங்க செயலா ளர் அழகேசராஜா யோகாசன பயிற்சிகளை வழங்கினார். இதில் யோகாசன சங்க ஆலோசகர் மரியசூசை, விவேகா அமல்தாஸ், யோகாசன சங்க துணைத் தலைவர் சிவசங்கர், வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு வகையான ஆசனங்களை மாணவ- மாணவிகள் கூட்டாக செய்து அசத்தினர். வயது வித்தியாசமின்றி சுமார் ஆயிரம் பேர் இந்த யோகாசனத்தில் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டது.

    இதேபோல் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் இன்று காலை நடந்த யோகாதின நிகழ்ச்சியை மாவட்ட முதன்மை நீதிபதி சீனிவாசன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், நீதித்துறை நடுவர்கள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்ட னர். பாளை சாரதா கல்லூரி யில் என்.சி.சி. மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகா தின நிகழ்வும் நடைபெற்றது. இதில் மாணவிகள்-ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

    இதே போல பாளை தலைமை தபால் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான அஞ்சல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    • ராதாபுரம் யூனியன் பகுதிகளில் தற்போது குடிநீர் பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
    • குடிநீர் மற்றும் மின்கட்டணம் குறைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

    திசையன்விளை:

    ராதாபுரம் யூனியன் பகுதிகளில் போதிய பருவமழை பெய்யாததால் தற்போது கடுமையான வறட்சி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    எனவே அங்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம், ராதாபுரம் யூனியன் அலுவலகத்தில் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.

    ராதாபுரம் யூனியன் தலைவர் சவுமியா ஜெகதீஷ் முன்னிலை வகித்தார். நெல்லை திட்ட இயக்குனர் சுரேஷ், துணை இயக்குனர் (பஞ்சாயத்து) விமலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புளோரன்ஸ் விமலா, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மக்கள் பிரதிநிதிகளின் விளக்கங்களை கேட்டறிந்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசுகையில், ''ராதாபுரம் யூனியன் மழை மறைவு பிரதேசத்தில் இருப்பதால் மிகவும் வறட்சி நிலை ஏற்பட்டுள்ளது.

    பருவமழை குறைவு மற்றும் போதிய நீர் ஆதாரம் இல்லாததால், தற்போது குடிநீர் பிரச்சினை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கடினமான சூழலில் உள்ளனர்.

    எனவே ராதாபுரம் யூனியன் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், போர்க்கால அடிப்படையில் 50 புதிய ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் பைப்லைன் அமைக்க வேண்டும்'' என்று கூறினார்.

    திட்ட இயக்குனர் சுரேஷ் பேசுகையில், ''ராதாபுரம் யூனியன் பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அரசின் அனுமதி பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது'' என்றார். மேலும் மக்கள் பிரதிநிதிகளுக்கு குடிநீர் மற்றும் மின்கட்டணம் குறைப்பதை குறித்து ஆலோசனை வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ஊராட்சி ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், பஞ்சாயத்து தலைவர்கள் பொன் மீனாட்சி அரவிந்தன், ராதிகா சரவணகுமார் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பஞ்சாயத்து செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முத்தையா 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார்.
    • தகராறின்போது அல்லாத்தான், முத்தையாவை சரமாரியாக தாக்கினார்.

    களக்காடு:

    நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்தையா (வயது 64). இவரது முதல் மனைவி பூலம்மாளின் மகன் அல்லாத்தான். முத்தையாவின் முதல் இரு மனைவிகள் இறந்து விட்டதால், 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான 2 வீடுகளில் ஒரு வீட்டை அல்லாத்தானுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் மற்றொரு வீட்டையும் தனக்கு எழுதி தருமாறு அல்லாத்தான் தகராறு செய்து வந்துள்ளார்.

    இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அல்லாத்தான், தனது தந்தை முத்தையாவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லாத்தானை இன்று கைது செய்தனர். 

    • திருமணமான பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மிடுக்கான உடை அணிந்து வலம் வந்தனர்.
    • முதல் இடத்தை பெற்றவர்களுக்கு கிரீடம் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    அகில இந்திய சிகை அலங்காரம் மற்றும் அழகு கலை நிபுணர்கள் சங்கம் சார்பில் 2023-ம் ஆண்டுக்கான 'மிஸ் அண்ட் மிஸ்ஸஸ்-நெல்லை' பட்டத்துக்கான அழகிப்போட்டி நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

    இதில் 5 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு 3 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. மேலும் 5 வயது முதல் 12 வயது வரையிலானவர்களுக்கும், 12 முதல் 18 வயதிலானவர்களுக்கும், 3-வது பிரிவாக 50 வயது வரையான பெண்களுக்கும் போட்டி நடைபெற்றது.

    திருமணமான பெண்களுக்கான பிரிவில் நடைபெற்ற போட்டியில் 15-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மிடுக்கான உடை அணிந்து வலம் வந்தனர். தொடர்ந்து பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக மருதாணி வைத்தல், பாரம்பரிய உடை, நவநாகரிக உடை என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

    திருமணம் ஆனவர்களுக்கான போட்டியில் முதல் இடத்தை போடியை சேர்ந்த டாப்னியும், 2-வது இடத்தை அம்பாசமுத்திரத்தை சேர்ந்த தேவியும் தட்டிச்சென்றனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற திருமணமாகாத பெண்களுக்கான அழகி போட்டியில் முதல் இடத்தை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அணா பாலனும், 2-வது இடத்தை நெல்லை மாவட்டம் கே.டி.சி. நகரை சேர்ந்த அபர்ணாவும் தட்டி சென்றனர்.

    முதல் இடத்தை பெற்றவர்களுக்கு கிரீடம் மற்றும் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மெகந்தி போட்டி, ஆடை அலங்கார போட்டி, சிறுவர்களுக்கான மாறுவேட போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    பெண்களின் தன்னம்பிக்கையை ஊக்குவிக்கவும், தனியாக தொழில் செய்ய மன தைரியத்தை உருவாக்கவும், கிராமப்புற பெண்களுக்கான வேலைவாய்ப்பு உறுதிப்படுத்தவும் இதுபோன்ற போட்டிகள் நடத்தி வருவதாக விழா ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.

    • ஆலையில் இருந்த சிலிண்டரில் தீப்பற்றியதால், திடீரென அந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துச்சிதறியது.
    • சுதந்திர ஸ்டீபனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே ஓமநல்லூர் கிராமம் உள்ளது. இங்கு பாளையை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் மரக்கூழ் ஆலை நடத்தி வருகிறார். அங்கிருந்து தினமும் மரத்தூள்கள் கட்டிகளாக மாற்றப்பட்டு பின்னர் லாரிகளில் ஏற்றி வியாபாரத்திற்கு அனுப்பப்படுவது வழக்கம்.

    இன்று அதிகாலை வழக்கம்போல் ஆலையில் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மரப்பொடி அடங்கிய கட்டு மீது மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த லாரி டிரைவரான பாளையை சேர்ந்த சுதந்திர ஸ்டீபன்(வயது 35) என்பவர், பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றுள்ளார்.

    அப்போது ஆலையில் இருந்த சிலிண்டரில் தீப்பற்றியதால், திடீரென அந்த கியாஸ் சிலிண்டர் வெடித்துச்சிதறியது. இந்த விபத்தில் சுதந்திர ஸ்டீபன் பலத்த தீக்காயம் அடைந்தார். உடனே அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் முன்னீர்பள்ளம் போலீசார் மற்றும் பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஸ்டீபனை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து ஆலையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே சுதந்திர ஸ்டீபனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • பக்ரீத் பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம்.

    நெல்லை:

    தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகப்பெரிய கால்நடை சந்தையாக விளங்கும் எட்டயபுரம் ஆட்டுச்சந்தைக்கு அடுத்தப்படியாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் கால்நடை சந்தை புகழ்பெற்றது.

    செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்த சந்தைக்கு தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம். அன்றைய தினம் சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும். இங்கு ஆடுகள் மட்டுமின்றி மாடுகள், கோழிகள், மீன், கருவாடு உள்ளிட்ட பொருட்கள் விற்பனையும் தனித்தனி இடங்களில் நடைபெறும்.

    வழக்கமாக சுமார் ரூ.2 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறும் நிலையில் ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் சுமார் ரூ.5 கோடி வரை ஆடுகள் விற்பனை நடக்கும்.

    இந்நிலையில் பக்ரீத் பண்டிகை வருகிற 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் ஆடுகளை குர்பானி கொடுப்பது வழக்கம். இதையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தைக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேல் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகளவில் செம்மறி ஆடுகள் வந்திருந்தது. இதேபோல் வெள்ளாடுகளும் வந்தன.

    அவற்றை வாங்குவதற்காக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, விருதுநகர், அருப்புக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களை சேர்ந்த வியாபாரிகள் குவிந்தனர். அவர்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பிற்பகலில் செம்மறி ஆடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன. ஆடுகள் தரத்திற்கேற்ப ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரை விற்கப்பட்டது.

    அதிகபட்சமாக பொட்டு வகை ஆடுகள் ரூ. 35 ஆயிரத்திற்கு விற்பனையானது. இதனால் இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தை களைக்கட்டி காணப்பட்டது. இது தொடர்பாக வியாபாரிகள் கூறும்போது, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு செம்மறி, வெள்ளாடு என ஆயிரக்கணக்கான ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தோம். இதில் செம்மறி ஆடுகள் விற்றுத்தீர்ந்த நிலையில் வெள்ளாடுகள் மட்டும் குறைந்த அளவில் உள்ளன. இன்று சுமார் 3 ஆயிரம் ஆடுகள் விற்பனையானது. இதனால் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடந்துள்ளது.

    ஆயிரக்கணக்கான பொது மக்களும், நூற்றுக்கணக்கான வியாபாரிகளும் திரளும் மேலப்பாளையம் கால்நடை சந்தையில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் அனைவரும் வெயில், மழையில் நிற்கும் நிலை உள்ளது. எனவே ஷெட்டுகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • நயினார்குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொன்டர் சன்னதி கோவிலில் இருந்து ஆர்ச் பகுதியை இணைக்கும் சாலையில் நயினார்குளம் உள்ளது. டவுன் பகுதியில் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தச்சநல்லூர் மண்ட லத்திற்குட்பட்ட நயினார்கு ளமானது 2007-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமாரிப்பு இல்லாததால் டவுன் நயினார்குளம், குப்பைகளின் கூடாரமாகவே இருந்தது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.14.68 கோடி செலவில் நயினார்குளம் கரைப்பகுதிகளை, மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

    அதன்பின்னர் பணிகள் தொடங்கி தற்போது குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்பு சுவர் அமைத்தும், நடுவில் அழகிய நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் சாலையில் ஓரளவு பணிகள் முடிந்த நிலையில், நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இந்த நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. முறையான பராமரிப்பின்மையால் 12 அடி வரை ஆழம் இருந்த இந்த குளம் தூர்வாராததால் 4 அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட குட்டையாக மாறிவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாகவே நயினார்குளத்தில் படகு குழாம் அமைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இருக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுத்தமல்லி அணைக்கட்டு சென்றடைந்து, அங்கிருந்து கால்வாய் மூலம் நயினார் குளத்திற்கு தண்ணீர் வரும். ஆனால் தூர்வாரப்படாததால் தேவையான அளவு தண்ணீரை சேமிக்கும் திறனை குளம் இழந்துள்ளது. இதனால் இந்த குளத்தில் மூலம் பாசனம் பெறும் விவசாய நிலங்களும் வெகுவாக குறைந்துள்ளன.

    குளத்தின் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் மது வாங்கும் பலரும் நயினார் குளத்தை பார் ஆக மாற்றி வருகின்றனர். அங்கு வைத்து குடித்துவிட்டு மதுபாட்டில்களை குளத்திற்குள் வீசிவதோடு, சாலைகளிலும் போதையில் தடுமாறி வருகின்றனர். சில நேரங்களில் போதையில் நயினார்குளம் சாலையில் சிலர் படுத்துவிடு கின்றனர் என்றும் அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். எனவே நயினார் குளம் சாலையில் குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குளத்தை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.

    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.


     


    • தற்காலிகமாக பஸ் நிலையத்தை திறந்தாலும் அதில் தார்சாலை அமைக்காததால் புழுதி பறக்கிறது.
    • சாலையில் வேகத்தடைகள் அமைத்து தனியார் பஸ்களை மெதுவாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை இன்று நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் திடீரென ஆய்வு செய்தனர். அதன் பின்னர் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    சந்திப்பு பஸ் நிலையத்தை திறப்பதாக நேற்று நாடகம் நடத்தியுள்ளனர். தற்காலிகமாக பஸ் நிலையத்தை திறந்தாலும் அதில் தார்சாலை அமைக்காததால் புழுதி பறக்கிறது. இதனால் பொதுமக்களும், கடை வைத்திருப்பவர்களும் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    பஸ் நிலையம் கட்டுமான பணிக்காக தகர ஷெட்டுகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் தார் சாலை அமைத்து அதில் நிறுத்தங்கள் அமைத்திருக்க வேண்டும். ஆனால் அதனை தவிர்த்து ராஜா பில்டிங் பகுதிகளில் 5 நிறுத்தங்கள் அமைத்துள்ளனர்.

    இதனால் அந்த பகுதியில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஏற்கனவே 5 ஆண்டுகளாக பஸ் நிலையம் திறக்கப்படாததால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ள நிலையில் தற்போது பஸ் நிறுத்தத்தையும் அந்த இடத்தில் அமைத்ததோடு அங்கு பணியில் இருக்கும் போலீசார், பொது மக்கள் மட்டும் தான் அந்த இடத்தில் நிற்க வேண்டும். கடைகளுக்கு வரும் பொது மக்கள், வியாபாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட யாரும் தங்களது மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட எந்த வாகனத்தையும் நிறுத்தக்கூடாது என்று கூறி வருகின்றனர்.

    இப்படி கட்டுப்பாடுகள் விதித்தால் அந்த பகுதியில் உள்ள வியாபார தளங்களில் வியாபாரம் எப்படி நடக்கும்?. ஏற்கனவே அவர்கள் வங்கி கடன் உள்ளிட்டவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் குடிநீர், கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்தவிதமான வசதிகளும் இந்த பகுதியில் ஏற்படுத்தப்படவில்லை. இதனால் பயணிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    இந்த சாலையில் வேகத்தடைகள் அமைத்து தனியார் பஸ்களை மெதுவாக செல்ல அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். பஸ் நிலையத்தின் மீதான வழக்கை விரைவில் முடித்து உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகராட்சியில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேரை நீக்க சிறப்பு வக்கீல் மூலம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து நீக்க முயற்சிக்கும் மாநகராட்சி நிர்வாகம், பஸ் நிலையம் மீது போடப்பட்டுள்ள வழக்கை சிறப்பு வக்கீல் நியமித்து சீக்கிரமாக முடிக்க மறுப்பது ஏன்?.

    வ.உ.சி. மைதானம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்ட சில மாதங்களிலேயே மேற்கூரை சரிந்து விழுந்து உள்ளது. அதை கட்டிய அதே ஒப்பந்ததாரர் தான் பாளை மார்க்கெட், நேருஜி கலையரங்கம் பணிகளை மேற்கொண்டுள்ளார். எனவே அதனையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்திருந்தோம். ஆனால் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றே தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், மாவட்ட அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் துணை மேயர் ஜெகநாதன் என்ற கணேசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர்கள் திருத்துச் சின்னத்துரை, சிந்து முருகன், மேகை சக்திகுமார், ஒன்றிய செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பாளை பகுதி மாணவரணி செயலாளர் ஜெய்சன் புஷ்பராஜ், மேலப்பாளையம் பகுதி பாசறை சம்சு சுல்தான், ஐ.டி. விங் விக்னேஷ், வாஸ்து தளவாய், தங்க பிச்சையா, சுப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.
    • குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கப்பட்டது.

    நெல்லை:

    நாங்குநேரி ஓசன்னா அன்பு இல்லம், மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி ஆர்.மனோகரன் எம்.எல்.ஏ. தலைமையில் நேற்று ராகுல் காந்தி பிறந்த நாள் விழா நிகழ்ச்சி நடை பெற்றது.

    தொடர்ந்து, மறுவாழ்வு மையத்தில் இருக்கும் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அனைவருக்கும் உணவு பரிமாறினார். அதைப்பார்த்ததும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

    அதனைத்தொடர்ந்து நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாங்குநேரி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தங்க மோதிரம் அணிவித்தார். குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கினார்.

    மேலும் அதே மருத்துவ மனைகளில் அதற்கு முன் தேதிகளில் பிறந்த குழந்தை களுக்கும் பரிசு வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஓட்டுனர் பயிற்சியை செம்மைப்படுத்த புதிதாக சிமு லேட்டர் முறை கடந்த 6-ந்தேதி நெல்லையில் அறிமுகமானது.
    • சிமுலேட்டர் பயிற்சி ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, வண்ணார் பேட்டை, பை பாஸ் சாலை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு சாலை போக்கு வரத்து நிறுவனம்(ஐ.ஆர்.டி.) சார்பில் 12 வார கால கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எழுத்து மற்றும் செய்முறை மூலம் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் ஓட்டுனர் பயிற்சியை செம்மைப்படுத்த புதிதாக சிமு லேட்டர் முறை கடந்த 6-ந்தேதி நெல்லையில் அறிமுகமானது. இதனை சாபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இந்த சிமுலேட்டர் பயிற்சியில் பஸ்சை இயக்குவது, கட்டுப்ப டுத்துவது உள்ளிட்டவை களை டிஜிட்டலில், மெய்நிகர் தொழில் நுட்பத்தில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிமுலேட்டர் பயிற்சி ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    பயிற்சியானது தினசரி காலையில் பஸ்சில் நேரடியாக ஓட்டி பழகுவது, மதியத்திற்கு மேல் தியரி, அதனுடன் சேர்ந்து சிமுலேட்டர் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது என ஐ.ஆர்.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து ஐ.ஆர்.டி. அதிகாரிகள் கூறிய தாவது:-

    குறைந்த கட்டணத்தில் அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. 12 வார பயிற்சிக்குப் பின் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தரப்படும். இதனால் அரசு மற்றும் தனியாரில் வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். சிமுலேட்டர் மூலம் பயிற்சி பெற முதல் பேட்ஜூக்கான சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×