நாங்குநேரி அருகே தந்தையை தாக்கிய மகன் கைது

முத்தையா 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார். தகராறின்போது அல்லாத்தான், முத்தையாவை சரமாரியாக தாக்கினார்.
நாங்குநேரி அருகே தந்தையை தாக்கிய மகன் கைது
Published on

களக்காடு:

நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி முத்தையா (வயது 64). இவரது முதல் மனைவி பூலம்மாளின் மகன் அல்லாத்தான். முத்தையாவின் முதல் இரு மனைவிகள் இறந்து விட்டதால், 3-வது மனைவி தனலெட்சுமியுடன் வசித்து வருகிறார். தனக்கு சொந்தமான 2 வீடுகளில் ஒரு வீட்டை அல்லாத்தானுக்கு எழுதி வைத்துள்ளார். ஆனால் மற்றொரு வீட்டையும் தனக்கு எழுதி தருமாறு அல்லாத்தான் தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அல்லாத்தான், தனது தந்தை முத்தையாவை சரமாரியாக தாக்கினார். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி நாங்குநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அல்லாத்தானை இன்று கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com