என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெய்நிகர் ஓட்டுநர் பயிற்சி"

    • ஓட்டுனர் பயிற்சியை செம்மைப்படுத்த புதிதாக சிமு லேட்டர் முறை கடந்த 6-ந்தேதி நெல்லையில் அறிமுகமானது.
    • சிமுலேட்டர் பயிற்சி ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, வண்ணார் பேட்டை, பை பாஸ் சாலை யில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக பணிமனை உள்ளது. இங்கு சாலை போக்கு வரத்து நிறுவனம்(ஐ.ஆர்.டி.) சார்பில் 12 வார கால கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை எழுத்து மற்றும் செய்முறை மூலம் ஓட்டுனர் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    இதில் ஓட்டுனர் பயிற்சியை செம்மைப்படுத்த புதிதாக சிமு லேட்டர் முறை கடந்த 6-ந்தேதி நெல்லையில் அறிமுகமானது. இதனை சாபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார். இந்த சிமுலேட்டர் பயிற்சியில் பஸ்சை இயக்குவது, கட்டுப்ப டுத்துவது உள்ளிட்டவை களை டிஜிட்டலில், மெய்நிகர் தொழில் நுட்பத்தில் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிமுலேட்டர் பயிற்சி ஓட்டுனர் பயிற்சி பெறுபவர்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

    பயிற்சியானது தினசரி காலையில் பஸ்சில் நேரடியாக ஓட்டி பழகுவது, மதியத்திற்கு மேல் தியரி, அதனுடன் சேர்ந்து சிமுலேட்டர் பயிற்சியும் வழங்கப்பட உள்ளது என ஐ.ஆர்.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதுகுறித்து ஐ.ஆர்.டி. அதிகாரிகள் கூறிய தாவது:-

    குறைந்த கட்டணத்தில் அரசு சார்பில் பயிற்சி வழங்கப்படுகிறது. 12 வார பயிற்சிக்குப் பின் கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றுத்தரப்படும். இதனால் அரசு மற்றும் தனியாரில் வேலை வாய்ப்பு உறுதியாக கிடைக்கும். சிமுலேட்டர் மூலம் பயிற்சி பெற முதல் பேட்ஜூக்கான சேர்க்கை தற்போது நடைபெறுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×