search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி தூய்மை பணிகள் தீவிரம்
    X

    மாநகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது எடுத்த படம்.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தையொட்டி தூய்மை பணிகள் தீவிரம்

    • நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.
    • சொக்கப்பனை முக்கு பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆனி பெருந்தேர் திருவிழா வருகிற 24-ந்தேதி தொடங்குகிறது.

    இதனையொட்டி டவுனில் உள்ள 4 ரத வீதிகளிலும் தூய்மை பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்த ரத வீதிகளில் பந்தல் போடும் நிகழ்வுக்காக சொக்கப் பனை முக்கு பகுதியில் இருந்து பேரிகார்டு அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரதவீதி களில் சிறப்பு கவனம் செலுத்தி தூய்மை பணி களை மேற்கொள்ள மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் சாக்கடை கால்வாய் அடைப்புகள் உள்ளிட்ட பிரச்சினைகளை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக டவுன் போலீஸ் குடியிருப்பு பின்புறம் உள்ள அறிஞர் அண்ணா தெருவில் சிறப்பு துப்புரவு பணி இன்று நடைபெற்றது. அந்த வார்டு கவுன்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் நடந்த தூய்மை பணியில் சாக்கடை கழிவுகள் அப்புறப் படுத்தப்பட்டு தெரு முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டது.

    Next Story
    ×