என் மலர்
உள்ளூர் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்த காட்சி.
பாளை எம்.கே.பி.நகர் பகுதி குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்- 40 பேர் கைது
- கோரிக்கை குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
- 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லை:
பாளை மனக்கவலம் பிள்ளை நகரில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு உள்ள வீடுகளுக்கு பத்திரப்பதிவு செய்து பட்டா வழங்க வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர்.
இது தொடர்பாக கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என கூறி அவர்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று 7-வது வார்டு கவுன்சிலர் இந்திரா மற்றும் 7-வது வார்டு தி.மு.க நிர்வாகி சுண்ணாம்பு மணி ஆகியோர் தலைமையில் அப்பகுதி மக்கள் 60-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து பாளை-திருச்செந்தூர் சாலையில்திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து பாளை உதவி கமிஷனர் சரவணகுமார், இன்ஸ்பெக்டர் வாசிவம் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர்.






