என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. பரிசுகளை வழங்கினார்.
    • 71 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. நாங்குநேரி சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 11-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள் களை 18 மாணவர்களுக்கு வழங்கினார்.

    71 மாணவர்கள்

    தொடர்ந்து திருக்குறுங்குடி டி.வி.எஸ். அரசு மேல்நிலைப்பள்ளியிலும் அந்த பள்ளியில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு, 12-ம் வகுப்பில் கடந்த 2022-2023-ம் ஆண்டு வெளிவந்த ஆண்டுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். அதன்பின் தமிழ்நாடு அரசின் இலவச சைக்கிள்களை 71 மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறு ப்பாளர் வி.என்.கே. அழகிய நம்பி, திருக்குறுங்குடி பேரூ ராட்சி தலைவர் இசக்கி தாய், நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.எஸ். சுடலைகண், மறுகால்கு றிச்சி ஊராட்சி தலைவி சாந்தகுமாரி செ ல்லையா, மாவட்ட துணைத் தலைவர் கக்கன், மாவட்ட பொதுச் செய லாளர் நம்பி த்துரை, தி.மு.க. பொதுக்குழு உறு ப்பினர் மாடசாமி, முன்னாள் மாநில பொ துக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் போர்டு, மாவட்ட செய ற்குழு உறுப்பினர் சுந்தர், திருக்குறுங்குடி காங்கிரஸ் நகர தலைவி ராசாத்தி, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், கவுன்சிலர் மீகா, நாங்குநேரி மத்திய வட்டார தலைவர் ராமஜெயம், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், முன்னாள் ஏ.ஐ.சி.சி. வசந்தா, நெல்லை பாராளு மன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.எம். ராஜா, தி.மு.க. செயற் குழு உறுப்பினர் மாய கிருஷ்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் உடையார், ராம நாதன், வின்சென்ட், தங்க லெட்சுமி, லதா மற்றும் காங்கிரஸ், தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.
    • சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர்.

    திசையன்விளை:

    திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமி தாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் முத்தையா(வயது 19). இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

    கொலை

    நேற்று முன்தினம் இரவில் முத்தையா தன்னுடைய நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார். பின்னர் நீண்ட நேர மாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    உடனே அவரை குடும்பத்தினர், உறவினர்கள் தேடிப் பார்த்தபோது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    நண்பர்கள் சிக்கினர்

    கொலை செய்யப்பட்ட முத்தையா, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்பட்டது. எனவே காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக அவருடைய நண்பர்களே அவரை கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக முத்தையாவின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நண்பர்களில் ஒருவரின் கையில் காயம் இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரித்தனர்.

    அப்போது அவர் கூறுகையில், எங்களுடைய நண்பரான அப்புவிளை கக்கன் நகரை சேர்ந்த சுரேஷ்(19), மதியழகன்(31) ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் வைத்து மது அருந்தினோம்.

    அப்போது எங்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சுரேசும், மதியழகனும் சேர்ந்து கத்தியால் முத்தையாவை குத்திக்கொலை செய்தனர். அதனை தடுக்க சென்ற எனக்கு காயம் ஏற்பட்டது என்றார்.

    இதையடுத்து கொலை செய்த சுரேஷ் மற்றும் மதியழகன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே முத்தையா காதல் விவகாரத்தில் தான் கொலை செய்யப்பட்டார் என்று கூறி அவரது உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் போலீசார் அந்த கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.

    • மகாராஜன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் குடும்பத்தினருக்கும் பொது சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
    • இதில் காயமடைந்த இசக்கித்தாய் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    களக்காடு:

    ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி சாலை தெருவை சேர்ந்தவர் மகா ராஜன். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் (வயது53) குடும்பத்தினருக்கும் பொது சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் மகாராஜன் மனைவி இசக்கித்தாயை (48), அடைக்கலம், அவரது மனைவி இசக்கித் தாய், உற வினர் சத்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து கம்பால் தாக்கி னர்.

    இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனு மதிக் கப் பட்டார். இது பற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய் யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அடைக்கலம், அவரது மனைவி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.

    • சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார்.
    • கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    சிங்கை:

    தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்கத்தின் நெல்லை மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் வி.கே.புரத்தில் நடந்தது. அமைப்புசாரா மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வைரமணி தலைமை தாங்கினார், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் பால் மாணிக்கம், கணேசன், கிளை தலைவர் சிவக்குமார், செயலாளர் அந்தோணி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் பேச்சியப்பன் வரவேற்று பேசினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கட்டிட தொழிலாளர்கள் பொதுநல மத்திய முன்னேற்ற சங்க மாநில தலைவர் மகாலிங்கம் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் பென்ஷன்தாரர்களுக்கு அரசு வழங்கி வரும் ஓய்வூதிய தொகையை ரூ. 2 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், குடும்ப ஓய்வூதிய தொகையை ஆயிரம் ரூபாய் உயர்த்துவது, அரசு நலத்திட்டங்களை தெரிந்து கொள்ளும் வகையில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடத்துவது, தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்குவது, அமைப்பு சாரா தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு அரசு வழங்கி வரும் கல்வித் தொகையை ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரி படிப்பு வரை வழங்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில சட்ட ஆலோசகர் சக்திவேல், மாநில கவுரவ ஆலோசகர் குமாரசாமி, மாநில அமைப்பாளர் கிருஷ்ணன், மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தன், நிர்வாக குழு உறுப்பினர்கள் சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.
    • வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு பள்ளி சுவர்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை, பஸ் நிலைய சுவர்கள், பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.

    இவை வாகனத்தில் செல்வோர்களின் கவனத்தை திசை திரும்பி விபத்துக்கள் உண்டாக காரணமாக அமைந்து விடுகிறது. இதேபோல் நெடுஞ் சாலைகளில் சாலைகளில் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விடுகிறது. எனவே உடனடியாக அரசு இதில் தலையிட்டு கல்விக் கூடங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் அரசு உத்தரவை மீறி போஸ் டர்கள் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யிருந்தார்.

    முன்னதாக பொது இடங்களில் போஸ்டர் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதனமான முறையில் அவர் தனது உடலில் போஸ்டர்களை சுற்றி கட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாய் வழி யாக கார் சாகுபடி பணிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளர் மைதீன்கான் தலைமை யில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    இதில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாலைராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், வெள்ளாளங்குளம் பஞ்சா யத்து தலைவர் மகாராஜன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதில் பாளை கக்கன் நகர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் எனது கணவரும், மகனும் இறந்து விட்டார்கள் தற்போது எனது பேரன் என்னிடம் இருந்த 3 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு சென்று விட்டான். மேலும் அவன் என்னை அடித்து துன்புறுத்துகிறான். எனவே எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

    உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.

    உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.

    உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.


     


    • மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • பதிவை தவறவிட்டவர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    அதனை நிறைவேற்றும் விதமாக வருகிற செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    528 சிறப்பு முகாம்கள்

    இதனையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் மாவட்டம் தோறும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விண்ணப்ப ங்களை பதிவு செய்ய மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளையும் சேர்த்து 528 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்பட்டு வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    பாளை யூனியன் முன்னீர் பள்ளம் பஞ்சாயத்து பகுதியில் மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்யும் முகாம் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்துள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் உரிமைத் தொகை விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட 528 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    20-ந்தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் கிராம ஊராட்சிகளில் 2, 00,119 விண்ணப்பங்கள் வழங்கப்ப ட்டுள்ளது. முதற்கட்ட சிறப்பு முகாம் கிராமப் பகுதிகளில் இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஏற்க னவே வழங்கப்பட்டுள்ள டோக்கள் வரிசைப்படி 2 முறைகளில் விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்டு பெறப்படுகிறது. இணைய வசதி நன்றாக செயல்படும் பகுதிகளில் விண்ணப்பம் வாங்கப்பட்டு உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்பட்டு, கைரேகை பெறப்பட்டு குறுந்தகவல் மூலம் ஒப்புகை வழங்கப்படும். இணைய வசதி முழுமை யாக செயல்படாத பகுதி களில், நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு பொது மக்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் பின்னர் தாசில்தார் அலுவல கங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப் பங்களை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்தந்த நாளில் பதிவை தவறவிட்டவர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பாளை தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலைகுனிய வேண்டிய சம்பவம்.

    நெல்லை:

    மணிப்பூர் மாநிலத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக கலவரம் நடந்து வரும் நிலையில் சமீபத்தில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணப்ப டுத்தப்பட்டு வீதியில் ஊர்வல மாக இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர்.

    மகளிர் அணி ஆர்ப்பாட்டம்

    இந்த கொடுமையான சம்பவத்தை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பா.ஜ.க. அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க மகளிர் அணி சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    நெல்லை வண்ணார்பேட்டையில் செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெல்லை கிழக்கு மாவட்ட மற்றும் மத்திய மாவட்ட தி.மு.க மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார்.

    கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவர் கமலா நேரு, கிழக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா அருள், மத்திய மாவட்ட மகளிர் அணி செயலாளர் மகேஸ்வரி, மகளிர் தொண்டரணி செயலாளர் அனிதா, மாவட்ட துணைச் செயலாளர்கள் கிரிஜா, தமயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து மகளிர் அணியினர் மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்து எதிர்ப்பு பதாகைகளுடன் கோஷங்கள் எழுப்பினர். பின்னர் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் கூறுகையில்,

    மணிப்பூர் கலவரம் மற்றும் பாலியல் வன்கொடுமை விவகாரம் வெட்கி தலை குனிய வேண்டிய சம்பவம். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரலுடன் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனாலும் பிரதமர் வாய் திறக்கவில்லை. பெண்கள் மீது மத்திய அரசு மரியாதை வைத்திருந்தால் உடனடியாக மணிப்பூரில் ஆளும் பா.ஜனதா அரசை டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மணிப்பூர் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புலன் விசாரணை நடத்தி கைதானவர்களை தூக்கிலிட வேண்டும் என்றார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன்கான், அப்துல் வஹாப் எம்.எல்.ஏ., துணை மேயர் கே.ஆர். ராஜூ, மூத்த நிர்வாகி சுப சீதாராமன், மேயர் சரவணன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், கிழக்கு மாவட்ட அவைத்தலைவரும், வள்ளியூர் வடக்கு ஒன்றிய செயலாள ருமான கிரகாம்பெல், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், பாளை யூனியன் சேர்மன் தங்கபாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலை ராஜா, சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் தச்சை சுப்பிரமணியன், அண்டன் செல்லத்துரை, ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, ஜோசப் பெல்சி, போர்வெல் கணேசன், மாரியப்பன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகர் இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், கவுன்சிலர்கள் பவுல்ராஜ், வில்சன்மணித்துரை, ரவீந்தர், உலகநாதன், கிட்டு என்ற ராமகிருஷ்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் மாயா, விவசாய அணி அமைப்பாளர் அய்யாச்சாமி பாண்டியன், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், 31-வது பகுதி சபா உறுப்பினர் சேதுசெல்வம், கட்டுமான அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பொன்னையா பாண்டியன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பேச்சிபாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் அனு ராதா ரவி முருகன்,

    மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், ராஜகுமாரி, ராஜேஸ்வரி, சைபுன் நிஷா, ரேவதி, மாமன்ற உறுப்பினர் பிரபா சங்கரி, மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், நிர்வாகிகள் வீரபாண்டியன், ஆறுமுக ராஜா, மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    வள்ளியூர்:

    நெல்லை தெற்கு மாவட்டம் ராதாபுரம் தெற்கு ஒன்றியம் பா.ஜனதா சார்பில் ராதாபுரம் பஸ் நிலையம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ராதை காமராஜ் பொறுப்பு வகித்தார். அரசு தொடர்பு பிரிவு தலைவர் வக்கீல் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து குடும்ப தலைவிக்கும் ரூ.1000 வழங்கிட கோரியும், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த கோரியும், டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தியும், மின்சார கட்டணத்தை குறைத்திட வேண்டியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர் கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் மாவட்ட பேச்சாளர் கணேசன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு சட்டமன்ற பார்வையாளர் சுந்தரம், கிளை தலைவர் சந்திரன், காரியாகுளம் முருகன், கணபதிநகர் தாசன், தவசிகுமார், சுப்பிரமனியபேரி ஈஸ்வரன், சுபாஸ், முருகன், மாணிக்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது.
    • நிகழ்ச்சியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    களக்காடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீவலப்பேரி ஊராட்சியில் உள்ள எஸ்.என். பள்ளிவாசல் கிராமத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணை தலைவர்கள் சந்திரசேகர், ராஜகோபால், சீவலப்பேரி ஊராட்சி தலைவர் அய்யம்மாள், துணை தலைவர் லலிதா, களக்காடு தெற்கு வட்டார தலைவர் அலெக்ஸ், மத்திய வட்டார தலைவர் காளப்பெருமாள், நகராட்சி காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன், துணை தலைவர் காமராஜ், மூலைக்கரைப்பட்டி நகர காங்கிரஸ் தலைவர் முத்துகிருஷ்ணன், பாளை தெற்கு வட்டார தலைவர் நளன், கிழக்கு வட்டார தலைவர் சங்கரபாண்டி, கவுன்சிலர்கள் சங்கீதா ஆண்ட்ரூ, முத்துபாண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தர், மாவட்ட பொதுச்செயலாளர் ஓபேத், முன்னாள் ஏ.ஐ.சி.சி. உறுப்பினர் வசந்தா, மகிளா காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் குளோரிந்தாள், மாநில இணை செயலாளர் கமலா, காங்கிரஸ் ஊடகத்துறை ஆறுமுகராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.ஆர்.துரை, வில்சன், தங்கராஜ், வேலுச்சாமி, வேலம்மாள், ஶ்ரீ தேவி, முருகன், சுகுமார், தி.மு.க. நிர்வாகி செந்தில் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    களக்காடு:

    களக்காட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் ஏ.ஐ.டி.சி.யின் மாநில தலைவர் காசி விஸ்வநாதன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நெல்லை மாவட்ட செயலாளர் லட்சுமணன், துணைச் செயலாளர் முத்துகிருஷ்ணன், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகன், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் பாலன், இளைஞர் பெருமன்ற சுரேஷ், லெனின், முருகானந்தம் மற்றும் நெல்லை களக்காடு, அம்பை, சேரை, பத்தமடை, நாங்குநேரி, வள்ளியூர் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மாநாட்டில் 17 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. கமிட்டி தலைவராக தங்கையா, செயலா ளராக பாலன், பொருளாளராக ரமேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதனைதொடர்ந்து 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். இத்திட்டத்தை நகராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், அரசு நிர்ணயித்த கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி.
    • தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளைளில் பெருந்தலைவர் காமராஜரின் 121-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டியினை நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திட்டக்குழு தலைவரும், நெல்லை மாவட்ட அமைச்சூர் கபடி கழக சேர்மனுமான வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் தொடங்கி வைத்தார்.

    40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்ட இப்போட்டியினை தொடங்கி வைத்து பேசும் போது, தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டத்தில் நடைபெறும் மிகச்சிறப்பு வாய்ந்த விளையாட்டு கபடி போட்டி. இப்போட்டியில் தமிழக இளைஞர்கள் தற்போது மிக ஆர்வமாக கலந்து கொண்டு வருகின்றனர் என கூறி கொண்ட விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை கூறினார்.

    நிகழ்ச்சியில் ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் முரளி, தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ்த்தாக் கெனிஷ்டன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர். ரமேஷ், ஊராட்சிமன்ற தலைவர் அருள், தக்காளி குமார், முன்னாள் திசையன்விளை நகர தலைவர் ராஜன், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை போரூர் கழக இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், ஒன்றிய தொண்டரணி சங்கர், குமார், எழில் ஜோசப், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் கன்னியப்பன். தொழிலாளி. இவரது மகன் முத்தையா(வயது 19).

    இவர் திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு தனது நண்பர்களை சந்தித்துவிட்டு வருவதாக கூறிவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரம் வரை அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்த பகுதிகளில் தேடி சென்றனர். அப்போது சுவாமிதாஸ் நகரில் உள்ள காட்டு பகுதியில் அவரது மோட்டார் சைக்கிள் கிடந்தது. உடனே உறவினர்கள் அந்த பகுதியில் தேடி பார்த்தனர். அப்போது கழுத்து, முதுகு, வயிறு உள்ளிட்ட பாகங்களில் பலத்த வெட்டுக்காயங்களுடன் முத்தையா ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று முத்தையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை நடந்த இடத்தை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

    இதுதொடர்பாக திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முத்தையா அப்பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளனர். இந்த விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு சமீபத்தில் தெரியவந்ததகாவும், அவர்கள் அதனை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த பெண்ணின் தரப்பினர் யாரேனும் இந்த கொலையை செய்திருக்கலாமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×