search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் 528 முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை  விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி தொடக்கம்- கலெக்டர் நேரில் ஆய்வு
    X

    முன்னீர்பள்ளம் சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமை கலெக்டர் கார்த்திகேயன் பார்வையிட்ட காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் 528 முகாம்களில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணி தொடக்கம்- கலெக்டர் நேரில் ஆய்வு

    • மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
    • பதிவை தவறவிட்டவர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    நெல்லை:

    கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ.1000 தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

    அதனை நிறைவேற்றும் விதமாக வருகிற செப்டம்பர் 15-ந்தேதி முதல் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    528 சிறப்பு முகாம்கள்

    இதனையொட்டி கடந்த 20-ந்தேதி முதல் மாவட்டம் தோறும் மகளிர் உரிமை தொகை பெற தகுதியானவர்களுக்கு விண்ணப்பம் மற்றும் டோக்கன் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு விண்ணப்ப ங்களை பதிவு செய்ய மாவட்டந்தோறும் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்ப ட்டுள்ளது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் அனைத்து கிராம ஊராட்சி பகுதிகளையும் சேர்த்து 528 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு இன்று முதல் செயல்பட்டு வருகிறது.

    கலெக்டர் ஆய்வு

    பாளை யூனியன் முன்னீர் பள்ளம் பஞ்சாயத்து பகுதியில் மகளிருக்கான உரிமைத் தொகைக்கான விண்ணப்பத்தை பதிவு செய்யும் முகாம் அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்றது. இந்த முகாமை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாமினை தொடங்கி வைத்துள்ளார்.

    நெல்லை மாவட்டத்தில் உரிமைத் தொகை விண்ண ப்பங்கள் பதிவு செய்யும் முகாம் அனைத்து கிராம ஊராட்சிக்குட்பட்ட 528 இடங்களில் நடைபெற்று வருகிறது.

    20-ந்தேதி முதல் நேற்று வரை 4 நாட்களில் கிராம ஊராட்சிகளில் 2, 00,119 விண்ணப்பங்கள் வழங்கப்ப ட்டுள்ளது. முதற்கட்ட சிறப்பு முகாம் கிராமப் பகுதிகளில் இன்று முதல் வருகிற 4-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    இன்று நடைபெறும் சிறப்பு முகாம்களில் ஏற்க னவே வழங்கப்பட்டுள்ள டோக்கள் வரிசைப்படி 2 முறைகளில் விண்ணப் பங்கள் பதிவு செய்யப்பட்டு பெறப்படுகிறது. இணைய வசதி நன்றாக செயல்படும் பகுதிகளில் விண்ணப்பம் வாங்கப்பட்டு உடனுக்குடன் இணைய பதிவு மேற்கொள்ளப்பட்டு, கைரேகை பெறப்பட்டு குறுந்தகவல் மூலம் ஒப்புகை வழங்கப்படும். இணைய வசதி முழுமை யாக செயல்படாத பகுதி களில், நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டு பொது மக்களுக்கு ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும். இந்த விண்ணப்பங்கள் பின்னர் தாசில்தார் அலுவல கங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.

    கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் மட்டும் பொதுமக்கள் வருகை தந்து தங்களது விண்ணப் பங்களை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அந்தந்த நாளில் பதிவை தவறவிட்டவர்கள் மீண்டும் பதிவு செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

    இவர் அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது பாளை தாசில்தார் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×