என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஏர்வாடி அருகே பெண் மீது தாக்குதல்
- மகாராஜன் குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் குடும்பத்தினருக்கும் பொது சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
- இதில் காயமடைந்த இசக்கித்தாய் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
களக்காடு:
ஏர்வாடி அருகே உள்ள கோதைசேரி சாலை தெருவை சேர்ந்தவர் மகா ராஜன். இவரது குடும்பத்தினருக்கும், அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் (வயது53) குடும்பத்தினருக்கும் பொது சுவர் தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று மீண்டும் ஏற்பட்ட தகராறில் மகாராஜன் மனைவி இசக்கித்தாயை (48), அடைக்கலம், அவரது மனைவி இசக்கித் தாய், உற வினர் சத்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து கம்பால் தாக்கி னர்.
இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நாங்குநேரி அரசு மருத்துவ மனையில் அனு மதிக் கப் பட்டார். இது பற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய் யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அடைக்கலம், அவரது மனைவி உள்பட 3 பேரை தேடி வருகின்றனர்.
Next Story






