என் மலர்tooltip icon

    திருநெல்வேலி

    • நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர்.
    • உடையார் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

    உடனே அந்த காரில் இருந்த நபரை சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியை சேர்ந்த உடையார் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆயுதத்தை பதுக்கி வைத்திருந்ததாக உடையார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • மழையின்றி போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது.
    • இன்று வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் நெல்லை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி கொண்டு வரப்பட்டது.

    நெல்லை:

    வடமாநிலங்களில் வரலாறு காணாத அளவில் கனமழை யால் அத்தியாவசியபொருட்களான தக்காளி, இஞ்சி உள்ளிட்டவைகளின் கடந்த ஒரு மாதமாகவே உயர்ந்து காணப்படுகிறது.

    தக்காளி வரத்து

    மேலும் தமிழகத்தில் பொய்த்துப்போன தென்மேற்கு பருவமழை காரணமாக குளங்கள் வறண்டுவிட்டது. இதனால் காய்கறிகள், கார் பருவ நெல் சாகுபடி பணிகள் முற்றிலும் ஓய்ந்துவிட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் குறைவாக காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்னர்.

    வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் பாவூர்சத்திரம், சுரண்டை, ஆலங்குளம், அழகியபாண்டியபுரம் மானூர் உள்ளிட்ட நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், கொத்தமல்லி இலை, சின்ன வெங்காயம் உள்ளிட்ட ஏராளமான காய்கறிகள் விளைந்து நெல்லை மார்க்கெட்டுகளுக்கு அதிகளவு விற்பனைக்கு வரும்.

    விலை உயர்வு

    ஆனால் மழையின்றி போதிய விளைச்சல் இல்லாததால் காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டதால் நெல்லை மார்க்கெட்டுகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

    2 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ. 130-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் ரூ. 160-க்கு விற்கப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது. மேலும் தேவையும் அதிகரித்து இருந்தது. இதனால் ஒரேநாளில் ரூ. 40 உயர்ந்து ரூ. 200-க்கு விற்கப்பட்டது.

    இந்நிலையில் இன்று வெளிமாநிலங்களில் இருந்து லாரிகள் மூலம் நெல்லை மார்க்கெட்டுகளுக்கு தக்காளி கொண்டு வரப்பட்டது. இதனால் கிலோவுக்கு ரூ. 50 குறைந்து ஒரு கிலோ தக்காளி ரூ.150-க்கு விற்பனையானது.

    ஆனால் மகாராஜநகர், டவுன் உழவர்சந்தைகளில் தக்காளி கிலோ ரூ. 130-க்கு விற்கப்பட்டது. மிளகாய் கிலோ ரூ. 80-க்கும், சின்ன வெங்காயம் தரத்திற்கேற்ப ரூ. 60 முதல் ரூ. 80 வரை விற்கப்பட்டது. 

    • மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது.
    • இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது.

    நெல்லை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற ஆகஸ்ட் 20-ந்தேதி மதுரை வலையங்குளத்தில் அ.தி.மு.க. சார்பில் வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

    இந்த மாநாட்டை சிறப்பாக நடத்தும் விதமாக அ.தி.மு.க. மூத்த தலைமை நிர்வாகிகள் மாவட்டந்தோறும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நெல்லை மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளிக்கவும், அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இன்று பாளை கே.டி.சி. நகரில் உள்ள மாதா மாளிகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், எம்.எல்.ஏ.க்கள் நத்தம் விஸ்வநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், ராஜன் செல்லப்பா, மகளிர் அணி செயலாளர் வளர்மதி, மாநில இளைஞர் பாசறை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. பரமசிவன், அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் பங்கேற்று எழுச்சி உரையாற்றினர்.

    ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:-

    மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் சொத்து வரி உயர்வு தொடங்கி, காய்கறி விலை வரை கடுமையாக உயந்து விட்டது. மு.க.ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர்.

    நீதிமன்றம் கூட எடப்பாடி பழனிசாமி தான் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என உறுதி செய்து தீர்ப்பு தந்தது. அதனை ஏற்க முடியாது என சொல்லி கொண்டிருக்கின்றனர். தூக்கத்தில் இருப்பவர்களை எழுப்பிவிடலாம் தூங்கு வதை போல சிலர் நடித்து கொண்டிருக்கின்றனர் அவர்களை எப்படி எழுப்புவது. அவர்களை தேடி கொண்டிருக்கிறோம்.ஆட்சி மாற்றத்தின் கால்கோள் விழாவாக மதுரை மாநாடு அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியதாவது:-

    அ.தி.மு.க.வின் போதிதர்மனாக எம்.ஜி.ஆர் இருந்தபோது 17 லட்சம் பேர் தொண்டர்களாக இருந்தனர். அதன் பின்னர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 1½ கோடி தொண்டர்களாக உயர்ந்தனர். தற்போது எடப்பாடியார் காலத்தில் இரண்டு கோடி தொண்டர்கள் உள்ளனர். இந்தியாவில் 3-வது பெரிய ஜனநாயக கட்சியாக அ.தி.மு.க. இருக்கிறது. உலக அளவில் 7-வது பெரிய கட்சியாக ஏழாவது அதிசயமாக அ.தி.மு.க. இயக்கம் இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பெண்ணுடன் வாலிபருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
    • பெண்ணை விசாரணைக்காக மகளிர் போலீஸ் நிலையம் வருமாறு அனுப்பி வைத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மணப்படை வீடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    கொரோனா காலத்தில் வேலை நிமித்தமாக வடக்கு தாழையூத்தில் குடியேறிய அவருக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுடன் வாலிபருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.

    இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அவர்கள் தாழையூத்து போலீசில் புகார் செய்தனர்.

    இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் அங்கிருந்து பேட்டை பகுதிக்கு குடி பெயர்ந்தார். இந்நிலையில் பேட்டை பகுதியில் குடியிருந்து வரும் இளம் பெண்ணுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்திய வாலிபர் அங்கு அடிக்கடி சென்று இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார்.

    இது கள்ளக்காதலனின் மனைவிக்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். நேற்றிரவு அந்த பெண்ணின் தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் உள்பட 10 பேர் பேட்டையில் இளம்பெண் குடியிருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர்.

    அங்கு அந்த பெண்ணின் வீட்டை வெகு நேரமாக தட்டியும் கள்ளக்காதல் ஜோடி கதவை திறக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணின் குடும்பத்தினர் ஜோடியை தாக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே போலீசார் அந்த ஜோடியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    பின்னர் அந்த பெண்ணை இன்று விசாரணைக்காக மகளிர் போலீஸ் நிலையம் வருமாறு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாலர் ஞாயிறு பண்டிகை நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம்.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

    நெல்லை:

    சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் ஆண்டுதோறும் பாலர் ஞாயிறு பண்டிகை சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    இந்த நாளில் தேவாலயங்களில் சிறப்பு பவனிகள் நடைபெறுவது வழக்கம். மேலும், ஆராதனையின் வேதபாட வாசிப்பு, பாடல்கள் ஆகியவற்றை சிறுவர்- சிறுமிகளே செய்வார்கள்.

    இந்த ஆண்டுக்கான பாலர் ஞாயிறு பண்டிகை சுதந்தரம் - கடவுளின் பரிசு என்ற தலைப்பில் கொண்டாடப் படுகிறது. இதையொட்டி நெல்லை மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட சி.எஸ்.ஐ. தேவாலயங்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றன.

    மேலப்பாளையம் அருகே சேவியர்காலனி சேகரத்திற்கு உள்பட்ட தூய பேதுரு ஆலயம் சார்பில் நடைபெற்ற பாலர் ஞாயிறு பவனிக்கு சேகர தலைவர் காந்தையா தலைமை தாங்கினார். சபை ஊழியர் கிறிஸ்டோ பர் முன்னிலை வகித்தார்.

    தேவாலயத்தில் இருந்து ஞாயிறு பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் பவனியாக சென்றனர். காமராஜர் சாலை, அந்தோணியார் ஆலய சாலை உள்பட முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் தேவாலயத்தை வந்தடைந்தது.

    தொடர்ந்து உலகின் அனைத்து பகுதியிலும் வசிக்கும் குழந்தைகள் கல்வி, ஆரோக்கியத்தில் சிறந்து விளங்க சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மேலும் மழைவளம் பெருக வேண்டியும், சமாதானம், சமத்துவம் உருவாக வேண்டி யும் மழலைகள் ஜெபம் செய்தனர்.

    • முகாமிற்கு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார்.
    • இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

    நெல்லை:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கங்கைகொண்டான் வடகரை புனித ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், வட்டார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் முன்னாள் மானூர் யூனியன் சேர்மன் ஆ.க.மணி, யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் மாலதி செல்லத்துரை, கிளைச்செயலாளர் செல்லத்துரை, கங்கை சின்னத்துரை, துரை, மகாராஜன், செல்வி, ராமசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.

    • பீட்டர் தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார்
    • இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை மேலத்தெருவை சேர்ந்தவர் இம்மானுவேல் மனைவி மேகலா (வயது 36). இவர் களக்காட்டில் தையல் கடை வைத்துள்ளார். இவரது கணவரின் நண்பரான அதே ஊரை சேர்ந்த பீட்டர் (33) தங்க நகைகள் விற்பனை மற்றும் அடகு கடை நடத்தி வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் மேகலாவிடம் ரூ.1 லட்சம் கடன் கேட்டுள்ளார். மேகலா வும் ரூ.1 லட்சம் கொடுத்து ள்ளார். ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். அதன் பின்ன ரும் பணம் கொடு க்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று பீட்டர், மேகலாவின் வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். இதைப்பார்த்த மேகலா, பீட்டரிடம் பணத்தை திருப்பிக் கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பீட்டர் நீ பணம் தரவே இல்லை. பணத்தை கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். மேலும் மேகலாவை அவதூறாக பேசியுள்ளார். இதுபற்றி மேகலா களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி பீட்டரை தேடி வருகின்றனர்.

    • வேல்முருகனுக்கு சொந்தமான தோட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ளது
    • சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்து, மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர்.

    களக்காடு:

    நாகர்கோவில், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சொந்தமான தோட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்க்க மின் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது.

    சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்து, மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 500 ஆகும். இதுபற்றி தோட்டக் காவலாளி நாங்குநேரி தம்புபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 42) மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது.
    • அன்னக்கிளி, அவரது மகன்கள் ராபின், சுபின் ஆகியோர் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கினர்.

    களக்காடு:

    திருக்குறுங்குடி அருகே உள்ள ஆவரந்தலை, மேலத்தெருவை சேர்ந்தவர் பாண்டித்துரை மனைவி அன்னக்கிளி என்ற லெட்சுமி (வயது 58). இவருக்கும்,அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வ அரசிக்கும் (53) இடப்பிரச்சினை இருந்து வருகிறது.

    சம்பவத்தன்று செல்வ அரசி பிரச்சினைக்குரிய இடத்தில் சாணம் தட்டியதாக கூறப்படுகிறது. இதனை அன்னக்கிளி தட்டிக் கேட்டார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, மோதல் உருவானது. செல்வ அரசி, அவரது கணவர் கிருஷ்ணன் (61), அவரது மகன் மார்ஸ் நிக்ஸ் கோல்டன் (27) ஆகியோர் சேர்ந்து அன்னக்கிளியை தாக்கினர். அதனை தடுக்க வந்த அன்னக்கிளியின் மகன்கள் ராபின் (36), சுபின் (31) ஆகியோரையும் தாக்கினர். இதுபோல அன்னக்கிளி, அவரது மகன்கள் ராபின், சுபின் ஆகியோர் சேர்ந்து செல்வ அரசியை கம்பால் தாக்கினர். இந்த மோதலில் பெண்கள் உட்பட 4 பேர் காய மடைந்த னர். இதுபற்றி இரு தரப்பி னரும் திருக்குறுங்குடி போலீசில் தனித்தனியாக புகார் செய்த னர். போலீசார் இது தொடர்பாக இரு தரப்பை யும் சேர்ந்த 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • செல்வி தனது மகளுடன் தேவர்குளம்-கயத்தாறு ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.
    • மொபட் கவிழ்ந்ததில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

    நெல்லை:

    நெல்லயை அடுத்த தேவர்குளம் அருகே உள்ள மேல இலந்தைகுளம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி செல்வி (வயது 40), மகள் இசக்கியம்மாள் (19). இவர்கள் 2 பேரும் கடந்த 24-ந் தேதி தேவர்குளம்-கயத்தாறு ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அங்குள்ள பஞ்சாயத்து அலுவலகம் அருகே எதிர்பாராத விதமாக மொபட் கவிழ்ந்தது. இதில் தாய்- மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேவர்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.
    • லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று அரைஇறுதியில் இந்தியாவின் லக்ஷயா சென்-இந்தோனேசியாவின் ஜோனதன் கிறிஸ்டி மோதினார்.

    இதில் லக்ஷயா சென் 15-21, 21-13, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. மற்றொரு அரைஇறுதியில் ஆக்சல்சென் (டென்மார்க்)-நரோகா (ஜப்பான்) பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

    • வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் ‘கியூ ஆர்’ கோடு ஒட்டும் பணியில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • கியூஆர்’ கோடு மூலம் வரிகள், புகார்களை வீடுகளில் இருந்து செய்ய முடியும்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின் படி மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர் சாகுல் அமீது ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் நெல்லை மாநகராட்சியில் வீடுவீடாக 'கியூ ஆர்' கோடு ஒட்டும் மணி தீவிரமடைந்துள்ளது.

    அதன்படி தச்சை மண்டலத்திற்கு உட்பட்ட நெல்லை சந்திப்பு செல்வி அம்மன் கோவில் பகுதியில் சுகாதார ஆய்வாளர் முருகன் தலைமையில் துப்புரவு ஆய்வாளர் ஜானகிராமன், தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள் சங்கர், மகாலட்சுமி, சந்துரு, இசக்கி, ஆறுமுகம், பிரேமா, கணேசன், முருகன், வகாப், ராஜசேகர், சுரேஷ், கிருஷ்ணன் ஆகியோரை கொண்ட குழுவினர் வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் 'கியூ ஆர்' கோடு ஒட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    இந்த 'கியூஆர்' கோடு மூலம் சொத்து வரி, தொழில்வரி, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரைபட அனுமதி தொழில் நிலுவைத் தொகை, தெருக்களில் உள்ள புகார்கள் அனைத்தையும் வீடு மற்றும் கடைகளில் இருந்து செய்ய முடியும். 

    ×