என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமையில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டபோது எடுத்த படம்.
கங்கைகொண்டான் பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
- முகாமிற்கு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார்.
- இதில் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.
நெல்லை:
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் கங்கைகொண்டான் வடகரை புனித ஜான்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் நடைபெற்றது. முகாமிற்கு மானூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அருள்மணி தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன், வட்டார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
முகாமில் முன்னாள் மானூர் யூனியன் சேர்மன் ஆ.க.மணி, யூனியன் சேர்மன் ஸ்ரீலேகா அன்பழகன், மானூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் மாலதி செல்லத்துரை, கிளைச்செயலாளர் செல்லத்துரை, கங்கை சின்னத்துரை, துரை, மகாராஜன், செல்வி, ராமசாமி, அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்றனர்.






