என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கள்ளக்காதல் ஜோடியை மடக்கி பிடித்த காதலனின் மனைவி குடும்பத்தினர்- நள்ளிரவில் போலீசார் மீட்டனர்
- பெண்ணுடன் வாலிபருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
- பெண்ணை விசாரணைக்காக மகளிர் போலீஸ் நிலையம் வருமாறு அனுப்பி வைத்தனர்.
நெல்லை:
நெல்லை மணப்படை வீடு பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
கொரோனா காலத்தில் வேலை நிமித்தமாக வடக்கு தாழையூத்தில் குடியேறிய அவருக்கு இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
அந்த பெண்ணின் கணவர் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணுடன் வாலிபருக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது.
இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குடும்பத்தினருக்கு தெரிய வரவே அவர்கள் தாழையூத்து போலீசில் புகார் செய்தனர்.
இதைத்தொடர்ந்து அந்த இளம்பெண் அங்கிருந்து பேட்டை பகுதிக்கு குடி பெயர்ந்தார். இந்நிலையில் பேட்டை பகுதியில் குடியிருந்து வரும் இளம் பெண்ணுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்திய வாலிபர் அங்கு அடிக்கடி சென்று இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார்.
இது கள்ளக்காதலனின் மனைவிக்கு தெரிய வந்ததும் அவர் அதிர்ச்சியடைந்தார். நேற்றிரவு அந்த பெண்ணின் தந்தை, சகோதரர்கள், உறவினர்கள் உள்பட 10 பேர் பேட்டையில் இளம்பெண் குடியிருக்கும் பகுதிக்கு சென்றுள்ளனர்.
அங்கு அந்த பெண்ணின் வீட்டை வெகு நேரமாக தட்டியும் கள்ளக்காதல் ஜோடி கதவை திறக்கவில்லை. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பெண்ணின் குடும்பத்தினர் ஜோடியை தாக்கும் நிலை ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே போலீசார் அந்த ஜோடியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் அந்த பெண்ணை இன்று விசாரணைக்காக மகளிர் போலீஸ் நிலையம் வருமாறு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






