நாங்குநேரி அருகே மின் மோட்டார் திருட்டு

வேல்முருகனுக்கு சொந்தமான தோட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ளதுசம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்து, மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர்.
நாங்குநேரி அருகே மின் மோட்டார் திருட்டு
Published on

களக்காடு:

நாகர்கோவில், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன். இவருக்கு சொந்தமான தோட்டம் நாங்குநேரி அருகே உள்ள நெடுங்குளத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்க்க மின் மோட்டார் பொருத்தப்பட்டிருந்தது.

சம்பவத்தன்று இரவில் மர்ம நபர்கள் தோட்டத்திற்குள் நுழைந்து, மின் மோட்டாரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.30 ஆயிரத்து 500 ஆகும். இதுபற்றி தோட்டக் காவலாளி நாங்குநேரி தம்புபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது 42) மூன்றடைப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com