நெல்லை சந்திப்பில் காரில் அரிவாளுடன் சுற்றியவர் கைது

நெல்லை சந்திப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். உடையார் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
நெல்லை சந்திப்பில் காரில் அரிவாளுடன் சுற்றியவர் கைது
Published on

நெல்லை:

நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற காரை போலீசார் சோதனை செய்தனர். அந்த காரில் அரிவாளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

உடனே அந்த காரில் இருந்த நபரை சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த வாலிபர் தாழையூத்து பகுதியை சேர்ந்த உடையார் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் இவர் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆயுதத்தை பதுக்கி வைத்திருந்ததாக உடையார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com