என் மலர்
திருநெல்வேலி
- முத்தாரம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
- விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை:
பாளையில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற 12 அம்மன் ஆலயங்களில் முத்தாரம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது.
தொடர்ந்து தாமிரபரணி நதியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு இன்று அதிகாலை வரை 4 கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது.
மேலும் கும்பாபி ஷேகத்திற்கு தேவையான பிரதான பூஜைகளும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து 3 நாட்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட மகா கும்பம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மூலவர் விமானத்தில் மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மதியம் மகா அபிஷேகமும், இரவு சகஸ்ர நாம அர்ச்சனையும், திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
- சந்திரயான்-3 வெற்றி விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது.
- சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. துணை பிரிவு தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கிராஸ் சப்னா கலந்துகொண்டார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் சந்திரயான்-3 வெற்றி விழா டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் நடைபெற்றது. இயற்பியல் துறை மாணவி மரியா ஆர்த்தி வரவேற்றார். கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். செயலர் வி.பி.ராமநாதன், கல்லூரிக்குழு உறுப்பினர் எஸ்.கே.டி.பி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக மகேந்திரகிரி ஐ.பி.ஆர்.சி. துணை பிரிவு தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான கிராஸ் சப்னா கலந்துகொண்டு மாணவர்களுக்கு சந்திரயான்-3 உருவான வரலாற்றை பற்றி எடுத்துரைத்து அவர்களுடன் கலந்துரையாடினார். அகத்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் புஸ்பராஜ் வாழ்த்துரை வழங்கினார். விழா ஏற்பாடுகளை இயற்பியல் துறை பேராசிரியர்கள் பாலமுருகன், சுஜா பிரேம ரஜினி, ராய் ரிச்சி ரெனால்ட், பிருந்தாமலர் மற்றும் ராஜகுமாரி ஆகியோர் செய்திருந்தனர். 2-ம் ஆண்டு மாணவி விஜய பாரதி நன்றி கூறினார். பல்வேறு துறைகளை சார்ந்த 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- விழாவின் முதன்மை விருந்தினராக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ் பங்கேற்றார்.
- கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.
வள்ளியூர்:
கூடங்குளம் ஹார்வர்டு ஹைடெக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஹார்வர்டு இன்டர்நேஷனல் பள்ளிகளின் ஆண்டு விழா கொண்டா டப்பட்டது. இரு பள்ளிகளின் தாளாளர் டாக்டர் தினேஷ் தலைமை தாங்கினார்.
டாக்டர் ரோஸ்லின் தினேஷ் மற்றும் டாக்டர் ஸ்டீவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின் முதன்மை விருந்தினராக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், சிறப்பு விருந்தி னர்களாக முருகன் (திருவம்பலபுரம்), வின்சி மணியரசு (கூடங்குளம்), சகாயராஜ் ( விஜயாபதி), செல்வி வளர்மதி (கூத்தங்குழி), பொன் மீனா ட்சி அரவிந்தன்(ராதாபுரம்), கந்தசாமி மணிகண்டன் (உதயத்தூர்) ஆகிய பஞ்சா யத்து தலைவர்கள் கலந்து கொண்டனர். இரு பள்ளி முதல்வர்கள் முருகேசன் மற்றும் செல்வராணி பள்ளி ஆண்டு அறிக்கையை வாசித்தனர்.
கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவ-மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. துணை முதல்வர் ஜெனி நன்றி கூறினார். மேலும் துணை முதல்வர்கள் டேனியல் மற்றும் ஷைலா கலந்து கொண்டனர்.
- ஜெகனுக்கும்,பிரபுவுக்கும் இருந்து வந்த முன்விரோதத்தில் ஜெகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
- தலைமறைவாக உள்ள பிரபுவை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
நெல்லை, செப்.3-
பாளை மூளிக்குளம் விரல் மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜெகன். இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளாராக இருந்தார்.
படுகொலை
கடந்த 30-ந்தேதி இரவு அவர் மூளிக்குளம்- வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அதில் நெல்லை மாநகர தி.மு.க. பிரமுகர் பிரபுவுக்கும், ஜெகனுக்கும் இருந்து வந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக பாளையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், விக்னேஸ்வ ரன், வள்ளிக்கண்ணு, முத்து இசக்கி ஆகிய 8 பேர் கைதாகினர்.
தி.மு.க. பிரமுகர் தலைமறைவு
நேற்று பாளை திம்மராஜ புரத்தை சேர்ந்த மாணிக்க ராஜா (27), தச்சநல்லூர் கரையிருப்பு முத்துபாண்டி(25) ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். இந்நிலையில் பாளை செந்திவேல் நகர் பகுதியை சேர்ந்த பரமராஜ்(29) என்பவர் கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த கொலையில் 11 பேர் கைதாகி உள்ளனர்.
எனினும் தி.மு.க. பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறை வாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கிடையே பிரபுவை கைது செய்யும்வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என ஜெகன் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக அவர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார்.
- வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.
பணகுடி:
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூர் மதகனேரி மேற்கு தெருவை சேர்ந்தவர் சுந்தர் மணி. இவரது மனைவி சுபாஷினி (வயது 34). இவரது தாயும் அவருடன் தங்கி உள்ளார்.
நகை திருட்டு
சம்பவத்தன்று சுபாஷினி அந்த பகுதியில் உள்ள அவரது சகோதரர் வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் அவரது தாயார் மட்டும் இருந்தார். அவர் கதவை பூட்டாமல் அருகே உள்ள கடைக்கு சென்றுவிட்டு சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்.
இந்நிலையில் சுபாஷினி வீடு திரும்பினார். அவர் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது. இதனால் சுபாஷினி அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் ஆள் இல்லாததை அறிந்து மர்மநபர்கள் வீடு புகுந்து நகையை திருடி இருப்பது தெரிய வந்தது.
கைரேகை நிபுணர்கள்
இதுகுறித்து அவர் பழவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடந்தது.
- 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
- கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.
நெல்லை:
பாளை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது. 6-ந்தேதி தமிழக முறைப்படியும், 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், மகா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.
- 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
- விபத்து தொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரித்து வருகிறார்.
நெல்லை:
நெல்லையை அடுத்த பேட்டை மையவாடி அருகே உள்ள ரஹ்மத் நகர் பகுதியை சேர்ந்த சுமார் 20 பேர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நடைபெறும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வேனில் இன்று காலை புறப்பட்டு சென்றனர்.
நெல்லையை அடுத்த ராமையன்பட்டியை தாண்டி சங்கரன்கோவில் சாலையில் சிவாஜி நகர் அருகே வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் குறுக்கே ஆடு ஒன்று ஓடியது. இதனால் ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக வேனை டிரைவர் திருப்பி உள்ளார். அவர் பிரேக் போட்ட போது, திடீரனெ கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
உடனே வேனில் பயணித்த குழந்தைகள், சிறியவர்கள், பெரியவர்கள் என அனைவரும் அலறி துடித்தனர். அவர்களது சத்தம் கேட்டு அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு வேன் அருகே ஓடிச் சென்றனர்.
விபத்தில் சிக்கிய வேனின் முன்பக்க கண்ணாடி உடைந்ததால் அந்த வழியாக பொதுமக்கள் உள்ளே சென்று வேனுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதில் பெரும்பாலானோர் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினர். சுமார் 13 பேருக்கு தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அதிகமான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் 108 ஆம்புலன்சு மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அழைத்துச்செல்லப்பட்ட மும்தாஜ்(வயது 35), அப்துல்லா(30), ஷேக் மீரான்(8), அமீர் பாத்து, பீர் மைதீன்(59), மைதீன் அப்துல் காதர், அப்துல் காதர்(35), முகமது மைதீன்(3), முகமது அஜ்மல்(2), பீவி(85), முகமது ரியாஸ்(2), அருணாச்சலம் உள்ளிட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆடு மீது மோதாமல் இருப்பதற்காக வேனை திருப்பிய போது நடைபெற்ற இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் போலீசார் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இந்த விபத்து தொடர்பாக மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரிடம் விசாரித்து வருகிறார்.
- பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது.
- 16 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 5 அடி அதிகரித்து 54 அடியாக உயர்ந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி மேலும் 2 அடி அதிகரித்து 56.25 அடியானது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 69.75 அடியாக உள்ளது. இந்த அணைகளில் நேற்று மழை குறைந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு 3 ஆயிரம் கனஅடியில் இருந்து 941 கனஅடியாக குறைந்தது. அணைகளில் இருந்து 354 கனஅடி நீர் வினாடிக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 43.60 அடியாக உள்ளது.
மாவட்டத்தில் நேற்று பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் லேசான சாரல் மழை பெய்தது. மாநகரிலும் காலையில் வெயில் அடித்த நிலையில் மதியத்திற்கு பின்னர் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. அங்கு 1.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் மிகச்சிறிய அணையான 36 அடி கொள்ள ளவு கொண்ட குண்டாறு அணையின் நீர்மட்டம் நேற்று 20 அடியாக இருந்த நிலையில் இன்று மேலும் 1 அடி அதிகரித்து 21 அடியாக உள்ளது.
இதேபோல் ராமநதி மற்றும் கருப்பாநதி அணைகளின் நீர்மட்டமும் தலா 1 அடி உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை சற்று குறைந்ததால் மணிமுத்தாறு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தணிந்தது.
களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் தலையணை நீர்விழ்ச்சி அமைந்துள்ளது. அதில் குளிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினசரி உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் தலையணைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இன்றி கடும் வெயில் கொளுத்தியது.
வெயிலின் தாக்கத்தால் தலையணை தண்ணீர் இன்றி வறண்டது. மரம், செடி,கொடிகளும் மழை இன்றி காய்ந்தது. தொடர் வறட்சியால் கடும் வெப்பம் நிலவியது. மேலும் வனப்பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ விபத்துகளும் ஏற்பட்டு வந்தன. இதையடுத்து வறட்சியின் காரணமாக களக்காடு தலையணை கடந்த மாதம் 18-ந்தேதி முதல் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து தலையணை நுழைவு கேட் மற்றும் சோதனை சாவடி மூடப்பட்டது. இதனிடையே கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தலையணை நீர்வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
இதனைதொடர்ந்து வறட்சியின் காரணமாக மூடப்பட்ட தலையணை இன்று மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. 16 நாட்களுக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
- முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
- இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் வார்டுகளில் பின்தங்கி உள்ள வரிவசூலை மேம்படுத்துவதற்காகவும், வார்டு பொதுமக்கள் தங்கள் கட்டிடங்களுக்கான வரியினை அன்றைய தினம் நிலுவையின்றி செலுத்திடவும் வாய்ப்பாக மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சிறப்பு முகாம்
அதன்படி மேலப்பாளையம் மண்டலம் வார்டு 47 மற்றும் 49 ஆகிய பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக நேரூஜி வீதியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இன்று சிறப்பு வரிவசூல் முகாம் நடந்தது.
இம்முகாமில் வார்டு 47 மற்றும் 49 பொது மக்கள் தங்கள் கட்டிடங்களின் சொத்து வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை சேவை கட்டணம் போன்ற வரியினங்கள் தொடர்பான குறைகள் தொடர்பாக மனு அளித்தனர். மேலும் சொத்துவரி, குடிநீர் கட்டண வரிவிதிப்பு பெயர் மாற்ற விண்ணப்பங்கள் போன்ற இதர சேவைகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கினர்.
இதேபோல் நெல்லை மண்டலம் வார்டு 22-ல் பேட்டை செக்கடி அருகில் உள்ள துர்காலெட்சுமி மகாலில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் திரளான மக்கள் கலந்து கொண்டு வரியை நிலுவையின்றி செலுத்தினர். இந்த பணிகளை மேயர் சரவணன் துணை மேயர் ராஜு ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது உதவி கமிஷனர் வெங்கட்ராமன், மண்டல சேர்மன் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தச்சநல்லூர் மண்டலம் வார்டு எண் 11 பகுதியை சேர்ந்த பொது மக்களுக்கான குறைதீர்க்கும் முகாம் வண்ணாரப்பேட்டை சாலை தெருவில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டலம் வார்டு எண் 32 பகுதிகளில் வரி வசூல் பணியினை மேம்படுத்தும் விதமாக சிறப்பு வரிவசூல் முகாம் நடைபெற்றது.
- நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
- இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.
களக்காடு:
நெல்லை மாவட்டம் களக்காடு சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் ஆண்டு தோறும் ஸ்தோத்திர பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான 30-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று தொடங்கியது.
விழிப்புணர்வு ஊர்வலம்
இதையொட்டி கிறிஸ்தவர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயத்தில் தொடங்கிய ஊர்வலம், களக்காடு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தை களக்காடு சேகரகுரு சந்திரகுமார் தொடங்கி வைத்தார். நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ் தலைமை தாங்கினார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிதம்பரராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
ஊர்வலத்தில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் பச்சை நிற ஆடை அணிந்து அணிவகுத்து சென்றனர். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த முழக்கங்கள் எழுப்பியவாறு கைகளில் விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி சென்றனர்.
மரக்கன்றுகள் நடப்பட்டது
இதில் களக்காடு, தோப்பூர், சிதம்பரபுரம், புதூர், ராமகிருஷ்ணாபுரம், கோவில்பத்து உள்பட 8 சபைகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர், இளைஞர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் பங்கேற்றனர்.
அதனைத்தொடர்ந்து களக்காடு அண்ணா சாலையில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. முன்னதாக ஆலய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஊர்வலம் கிறிஸ்தவ ஆலயத்தை வந்தடைந்ததும் கொடி ஏற்றப்பட்டது. சேகர குரு சந்திரகுமார் நன்றி கூறினார். ஸ்தோத்திர பண்டிகை நாளை (3-ந்தேதி) வரை தொடர்ந்து நடக்கிறது.
- பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
- தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லையை அடுத்த பழைய பேட்டை மாநகராட்சி பள்ளியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி யின் நூற்றாண்டு விழா வினை முன்னிட்டு மாற்றுத்தி றனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து முகாமில் கலந்து கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கு உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அவர்களுக்கு சர்க்கரை அளவு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர் மாற்றுத்திறனா ளிகள் பயன்படுத்தும் விதமாக மூன்று சக்கர ஸ்கூட்டர்கள், நிதியுதவி உள்ளிட்ட ரூ.30 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி உதவி கமிஷனர் வெங்கட் ராமன், மண்டல தலைவர் மகேஸ்வரி, கவுன்சிலர் உலகநாதன், சுகாதார அலுவலர் இளங்கோ மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பாளையங்கால்வாய் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
- அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாளையங்கால்வாய் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .
மேலும் பொது இடங்களிலும், கால்வாய் களிலும் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.






