search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Krishna jeyanthi"

    • 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
    • கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது. 6-ந்தேதி தமிழக முறைப்படியும், 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், மகா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    • கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
    • கிருஷ்ண ஜெயந்தி விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி அகண்ட நாம ஜெபம், சாயரக்சை, சகஸ்கர நாம அர்ச்சனை, சுவாமி திருவீதி உலா, நாம கீர்த்தனம், கும்பஜெபம், அபிஷேகம், கிருஷ்ண ஜனனம், தீபாராதனை ஆகியன நடைபெற்றது.

    சனிக்கிழமை காலை உறியடி உற்சவத்துடன் விழா நிறைவு பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கிருஷ்ண ஜெயந்தி விழா ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரியார் தலைமையில் செய்திருந்தனர்.

    ×