என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வண்ணார்பேட்டை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா- 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது
    X

    வண்ணார்பேட்டை இஸ்கான் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா- 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது

    • 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
    • கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது.

    நெல்லை:

    பாளை வண்ணார்பேட்டை இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா வருகிற 6, 7-ந்தேதிகளில் நடக்கிறது. 6-ந்தேதி தமிழக முறைப்படியும், 7-ந்தேதி கிருஷ்ணர் அவதரித்த மதுரா முறைப்படியும் விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் சிறப்பு தரிசனம், சிறப்பு பூஜைகள், மகா ஆரத்தி, ஹரிநாம சங்கீர்த்தனம் நடைபெறுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. கிருஷ்ணன், ராதை அலங்காரம் செய்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

    Next Story
    ×