மேலப்பாளையம் கால்வாய் பகுதியில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்

பாளையங்கால்வாய் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .
மேலப்பாளையம் கால்வாய் பகுதியில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்
Published on

நெல்லை:

நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாளையங்கால்வாய் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

மேலும் பொது இடங்களிலும், கால்வாய் களிலும் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com