என் மலர்
திருநெல்வேலி
- அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அயன்சிங்கம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அடுத்த மணிமுத்தாறு அருகே உள்ள அயன் சிங்கம்பட்டி மடத்து தெருவை சேர்ந்தவர் பேச்சி முத்து (வயது 55). இவருக்கு தங்கமணி என்ற மனைவியும், வனராஜ் (28) மற்றும் சரவணன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். வனராஜிக்கு திருமணமாகவில்லை.
இவர்களுக்கு சொந்தமான வயல் மணிமுத்தாறு 40 அடி கால்வாயை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இந்நிலையில் வயலில் போட்டிருந்த பயிருக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காகவும், காட்டு விலங்குளிடம் இருந்து பயிரை பாதுகாக்க காவல் பணிக்காகவும் நேற்று இரவு 10.30 மணியளவில் பேச்சிமுத்து தனது மகன் வனராஜை அழைத்துக் கொண்டு வயலுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அங்குள்ள வயலை ஒட்டிய ஓடையில் இறந்து கிடந்தனர். அதனை சிலர் பார்த்து பேச்சிமுத்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் காட்டுத்தீ போல் அயன்சிங்கம்பட்டி கிராமம் முழுவதும் பரவியது. இதனால் கிராம மக்கள் காட்டுக்கு சென்று பார்த்தனர்.
அப்போது தந்தை-மகன் 2 பேரும் இறந்து கிடப்பதை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்து மணிமுத்தாறு போலீசார் அங்கு விரைந்து வந்து உயிரிழந்த 2 பேர் உடலையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், இரவு நேரங்களில் வயலுக்கு வனவிலங்குள் வருவதை அறிந்து கால்வாயில் வைத்து அவற்றை வேட்டையாடுவதற்காக சிலர் மின்வேலி அமைத்துள்ளனர். அந்த வேலிக்கு மின்சாரம் செலுத்த அருகில் சென்ற தாழ்வழுத்த மின்கம்பியில் அந்த மர்ம நபர்கள் கொக்கி போட்டு வயர் மூலமாக மின்சாரம் செலுத்தி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனை அறியாமல் பேச்சிமுத்துவும், வனராஜூவும் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சியபோது, மர்ம நபர்கள் போட்டிருந்த மின்வயர், மின்வேலியில் தண்ணீர் பட்டு, அதில் மின்சாரம் பரவி உள்ளது. இதனால் அங்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த தந்தை-மகன் மீதும் மின்சாரம் பாய்ந்து அவர்கள் பலியானது தெரியவந்தது.
இதுதொடர்பாக அயன்சிங்கம்பட்டி பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தை, மகன் இருவரும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அயன்சிங்கம்பட்டி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணி வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.
- அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் வெற்றிக் கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
நெல்லை:
பாளை அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 26-ந்தேதி தொடங்கிய கருவேலம் கோப்பைக்கான ஆக்கி போட்டி இன்று காலையுடன் முடிவு பெற்றது. ஆண்கள் பிரிவில் பாளை லெவன் ஆக்கி அணியும், பெண்கள் பிரிவில் ராணி அண்ணா கல்லூரி அணியும் வெற்றிக்கோப்பைகளை தட்டிச்சென்றனர். முன்னதாக இன்று காலையில் இறுதி போட்டிகளை முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு முன்னாள் அகில இந்திய பல்கலைக்கழக ஆக்கி வீரர் ரமேஷ் தலைமை தாங்கி வெற்றிக் கோப்பைகளையும், தனி பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார். நிகழ்ச்சியில் ஆக்கி கழகம் சேவியர் ஜோதி சற்குணம், முருகேசன், பீர் அலி, ஜான்சன், மங்கை ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது.
- நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் சந்திர கிரகணத்தை காண அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
2023-ம் ஆண்டிற்கான பகுதி சந்திர கிரகணம் இன்று நள்ளிரவு 1.05 மணிக்கு தொடங்கி அதிகாலை 2.22 மணி வரை நிகழ்கிறது. அந்த நிகழ்வை காண்பதற்காக நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் அதிநவீன தொலைநோக்கி கருவி வைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் இலவசமாக கண்டு கழிக்கலாம் என மாவட்ட அறிவியல் மைய அலுவலர் எஸ்.எம். குமார் தெரிவித்திருந்தார். இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் மைய கல்வி அதிகாரி மாரி லெனின் செய்திருந்தார். நெல்லை, தென்காசி மாவட்டங்களிலிருந்து ஏராளமான பள்ளி மாணவ-மாணவி கள் அழைத்து வரப்பட்டு பார்வையிட்டனர். ராயகிரி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் இருந்து மாணவர்கள் வந்து தொலைநோக்கியை பார்வையிட்டனர்.
- மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது.
- மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நெல்லை:
நெல்லை தாமிரபரணி ஆற்றில் சில இடங்களில் அடிக்கடி கழிவு நீர் கலந்து ஓடுகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மேலப்பாளையம் சுற்று வட்டார பகுதியில் உள்ள கழிவு நீர் நேரடியாக பாளையங்கால்வாயில் கலந்து வருகிறது. அந்த சாக்கடை தண்ணீர் மேலநத்தம் பகுதியில் நேரடியாக ஆற்றில் கலந்து நீர், கருப்பு நிறமாக காட்சி அளிக்கிறது என சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.
இன்று காலை ஆற்றில் குளிக்க சென்ற பொது மக்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சாக்கடை நீர் கலப்பது குறித்து அந்தப் பகுதி கவுன்சிலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மேலநத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் அந்த பகுதியில் செல்லும் நீரை பாட்டில்களில் பிடித்து வைத்துள்ளனர். அதனை கலெக்டரிடம் காண்பித்து நிரந்தர தீர்வு காண மனு அளிக்க உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் உடனடியாக ஆற்றில் நேரடியாக கலக்கும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி நதியில் கழிவு நீர் கலப்பது குறித்து அவரிடம் கேட்டபோது, இதுபற்றிய தகவல் என்னுடைய கவனத்திற்கு காலையில் வநதது. உடனடியாக மாநகராட்சி ஊழியர்களை அனுப்பி சாக்கடை நீர் தாமிரபரணி நதியில் கலப்பதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
- ஆலோசனை கூட்டத்திற்கு இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
- கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டார்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் நெல்லை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் நடைபெற்றது.
புறநகர் மாவட்ட செயலா ளர் இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயண பெருமாள், அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க. மருத்துவ அணி இணை செயலாள ரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னருமான டாக்டர் சரவணன் சிறப்பு அழைப்பா ளராக கலந்து கொண்டு வருகிற பாராளுமன்ற தேர்தலில் பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும், அவர்களது பணிகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டை குறித்து விரி வாக எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, மாவட்ட துணைசெயலாளர் செவல் முத்துசாமி, ஞானபுனிதா, பொதுக்குழு உறுப்பினர் பார்வதி பாக்கியம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செய லாளர் பெரிய பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் அம்பை விஜய பாலாஜி, சேரை மாரி செல்வம், களக்காடு வேல்சாமி, ராதா புரம் அந்தோணி அமல் ராஜ், செல்வராஜ், முத்து குட்டிப்பாண்டியன் நகரச் செயலாளர்கள் அம்பை அறிவழகன், வி.கே.புரம் கண்ணன், களக்காடு செல்வராஜ் சாமிநாதன், கல்லிடை முத்துகிருஷ்ணன், சேரை பழனிகுமார், நாங்குநேரி சங்கரலிங்கம், அம்பை நீர் பாசன கமிட்டி தலைவர் மாரிமுத்து, மணி முத்தாறு முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் சிவன்பாபு, அம்பை ஒன்றிய துணை செயலாளர் பிராங்க ளின், வக்கீல்கள் சுரேஷ், ஸ்டாலின் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- சுயம்புலிங்கசுவாமி கோவில் முன்பு 108 அடி உயரத்தில் ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது
- ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது.
திசையன்விளை:
தமிழ்நாட்டில் உள்ள சிவ ஆலயங்களில் பிரசித்தி பெற்றது திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் இங்கு சுவாமி சுயம்புவாக எழுந்தருளியுள்ளார்.
இக்கோவில் முன்பு 108 அடி உயரத்தில் 9 நிலைகொண்ட முழுவதும் கருங்கற்களால் ஆன ராஜகோபுரம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கோபுர நிலையில் 108 சிவதாண்டவத்தை நினைவுகூறும் வகையில், கோபுர நிலைகளில் 108 சிவதாண்டவ சிற்பங்கள் அழகிய கலை வேலைப் பாடுகளுடன் அமைக் கப்பட்டுள்ளது.
ராஜகோபுர பணி 32 அடி நிறைவடைந்த நிலையில் நேற்று காலை உத்திரம் அமைக்கும் பணி நடந்தது. முன்னதாக கோ பூஜை நடந்தது.
பின்பு கோபுர உத்தி ரத்திற்கு மாலை அணி வித்து மலர்தூவி பால், பன்னீர், தேன் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு 12 டன் எடை கொண்ட 10 கருங்கல் உத்திரங்களை கிரேன் மூலம் நிறுவும் பணி வானவேடிக்கை முழங்க நடந்தது.
விழாவில் கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன், பேராசிரியை நிர்மலா ராதாகிருஷ்ணன், ராஜகோபுர கமிட்டி தலைவர் ஜி.டி.முருகேசன், துணைத்தலைவர் ்கனக லிங்கம், செயலாளர் வெள்ளையா நாடார், பொருளாளர் சுடலை மூர்த்தி, ராஜ கோபுரகமிட்டி உறுப்பினர் ராஜாமணி, தேர் திருப்பணி குழு செயலாளர் தர்மலிங்க உடையார், ஆடிட்டர் ஜீவரத்தினம், ஸ்தபதி சந்தானகிருஷ்ணன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதா கிருஷ்ணன் செய்திருந்தார்.
- தரை பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
- விபத்தில் வீரகாளி முத்து, சூர்ய நரேஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
களக்காடு:
ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் சூர்ய நரேஷ்குமார் (வயது21). சம்பவத்தன்று இவரும், திசையன்விளையை சேர்ந்த முருகன் மகன் வீரகாளி முத்துவும் (20) மோட்டார் சைக்கிளில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு சென்றனர். பின்னர் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வீரகாளிமுத்து ஓட்டினார். சூர்யநரேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.
திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்த போது, திடீர் என மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரகாளி முத்து, சூர்ய நரேஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கிருந்து இருவரும் நாகர்கோவில் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
- மிஷின் பள்ளிக்கூட தெருவில் சாக்கடை நீர் செல்ல வாறுகால் அமைக்கப்படவில்லை.
- மழைக்காலங்களில் தெருவே சகதிமயமாகி விடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
களக்காடு:
களக்காடு நகராட்சி 15-வது வார்டுக்குள்பட்ட மிஷின் பள்ளிக்கூட தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இத்தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு மற்றும் சாக்கடை நீர் செல்ல வாறுகால் வசதி அமைக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து கழிவு நீர் மற்றும் சாக்கடை நீர் தெருவிலேயே ஆறு போல் ஓடுகிறது. சாக்கடை நீருக்குள் இறங்கி தான் பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டியதுள்ளது. மேலும் அதில் கொசுக்கள் மற்றும் பூச்சிகளும் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, நோய்களை பரப்பி வருவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். சாக்கடைக்குள் குடிநீர் குழாயும் அமைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் சாக்கடை நீருடன், மழைநீரும் கலந்து விடுவதால் தெருவே சகதிமயமாகி விடுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். அத்துடன் அப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், தெருவில் சாக்கடை நீர் தேங்குவது பற்றி பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலன் இல்லை. எனவே இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு வாறுகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.
- நவம்பர் 30-ந்தேதிக்குள் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நிறைவு பெறும்.
- ஆய்வின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் 30-ந்தேதிக்குள் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நிறைவு பெறும். டிசம்பர் மாதம் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமாகி விட்டது என்றார்.
அப்போது ஆட்சியை கலைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
ஆட்சியை கலைப்பது குறித்து அவர்கள் யோசித்து பார்க்கட்டும் என மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்தார்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்ச ரும், நிதியமைச்ச ருமான தங்கம் தென்னரசு, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
- நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1,46,532 ஆண் வாக்காளர்கள் உள்ளனர்.
- நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,87,476 வாக்காளர்கள் உள்ளனர்.
நெல்லை:
1. 1.2024 -ம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் தொடர் சுருக்கமுறைத் திருத்தப்பணியில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்குரிய வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டருமான கார்த்திகேயன் அங்கீகரிக்கப்ட்ட அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிட்டார்.
அதன்படி நெல்லை சட்டமன்ற தொகுதியில் 1,46,532 ஆண் வாக்காளர்களும், 1,53,843 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் ஆக மொத்தம் 3,00,440 வாக்காளர்கள் உள்ளனர். அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் 1,20,602 ஆண் வாக்காளர்களும், 1,28347 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலின வாக்கா ளர்கள் ஆக மொத்தம் 2,48958 வாக்காளர்கள் உள்ளனர். பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,32,654 ஆண் வாக்காளர்களும், 1,37,923 பெண் வாக்காளர்களும், 29 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,70,606 வாக்காளர்கள் உள்ளனர். நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 1,40,922 ஆண் வாக்காளர்களும், 1,46,541 பெண் வாக்காளர்களும், 13 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 2,87,476 வாக்காளர்கள் உள்ளனர். ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் 1,28,780 ஆண் வாக்காளர்களும், 1,32,442 பெண் வாக்காளர்களும், 16 மூன்றாம் பாலின 5 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 6,69,490 ஆண் வாக்காளர்களும், 6,99,096 பெண் வாக்காளர்களும், 132 மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஆக மொத்தம் 13லட்சத்து 68 ஆயிரத்து 718 வாக்காளர்கள் உள்ளனர். 18-19 வயது நிரம்பிய இளம் வாக்காளர்கள் இம்மாவட்டத்தில் மொத்தம் 6960 பேர் உள்ளனர்.
- உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
- வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி நான்கு வழிச்சாலை இருபுறமும் மின்னொளியில் ஜொலித்தது.
நெல்லை:
தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதற்காக நேற்றிரவு விருதுநகரில் இருந்து காரில் நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து அருகே பண்டாரகுளம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் வந்திருந்தனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது செண்டை மேளம் முழங்க சிலம்ப குழுவினரின் சாகசங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பண்டாரகுளம் பகுதியில் நான்கு வழிச்சாலை இருபுறமும் மின்னொளியில் ஜொலித்தது.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை யூனியன் சேர்மனும், பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீர பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன், சமூக ஆர்வலரும், ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட தொழில்நுட்ப அணி பிரபா அருள்மணி, முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக மகேஸ்வரி நியமனம் செய்யபட்டார்.
- முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ள மகேஸ்வரி திருச்சியை சேர்ந்தவர் ஆவார்.
நெல்லை:
நெல்லை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்த ராஜேந்திரன் தமிழக உளவுப்பிரிவு டி.ஐ.ஜி.யாக மாற்றபட்டார். இதனால் அந்த இடம் நீண்ட நாட்களாக காலியாக இருந்து வந்தது.
புதிய கமிஷனர்
இந்நிலையில் அந்த இடம் நிரப்பட்டு ஐ.ஜி அந்தஸ்த்தில் இருக்கும் மகேஸ்வரி நியமனம் செய்யபட்டார். இதனையடுத்து இன்று அவர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது பொறுப்பினை ஏற்றுக்கொண்டார்.
போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்றுள்ள மகேஸ்வரி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று டி.எஸ்.பியாக தமிழக காவல்துறையில் சேர்ந்து பின்னர் எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.
இவர் கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு பிரிவு, சென்னை நகர போக்குவரத்து காவல் ஆகிய இடங்களில் பணியாற்றினார். அதன் பின்னர் டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்று தென் சென்னை இணை கமிஷனராகவும், சேலம் டி.ஐ.ஜி.யாகவும் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு மகேஸ்வரிக்கு ஐ.ஜி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு அவர் சென்னை நகர மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பணியாற்றினார்.
முதல் பெண்
பி.இ. மற்றும் எஸ்.எஸ்.(ஐ.டி.) முதுநிலை பட்டப்படிப்பு முடித்துள்ள மகேஸ்வரி திருச்சியை சேர்ந்தவர் ஆவார். நேர்மையான போலீஸ் அதிகாரி என்ற பெயர் பெற்ற இவர் சட்டம், ஒழுங்கில் அனுபவம் மிக்க அதிகாரியும் ஆவார்.
மேலும் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனராக முதன் முதலாக பொறுப்பேற்கும் முதல் பெண் ஐ.ஜி.யும் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.






