என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
- நவம்பர் 30-ந்தேதிக்குள் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நிறைவு பெறும்.
- ஆய்வின்போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உள்பட பலர் உடன் இருந்தனர்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு பஸ் நிலைய கட்டுமான பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நவம்பர் 30-ந்தேதிக்குள் நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகள் நிறைவு பெறும். டிசம்பர் மாதம் பஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் காணொலி மூலம் திறந்து வைப்பார். நீதிமன்ற வழக்குகள் காரணமாக தாமதமாகி விட்டது என்றார்.
அப்போது ஆட்சியை கலைப்பது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,
ஆட்சியை கலைப்பது குறித்து அவர்கள் யோசித்து பார்க்கட்டும் என மத்திய மந்திரி எல்.முருகன் பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி பதிலடி கொடுத்தார்.
ஆய்வின்போது நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்ச ரும், நிதியமைச்ச ருமான தங்கம் தென்னரசு, கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் மைதீன் கான், கலெக்டர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவராவ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






