search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லைக்கு வந்த அமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு
    X

    நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் வரவேற்ற காட்சி.

    நெல்லைக்கு வந்த அமைச்சர் உதயநிதிக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

    • உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • வரவேற்பு நிகழ்ச்சியையொட்டி நான்கு வழிச்சாலை இருபுறமும் மின்னொளியில் ஜொலித்தது.

    நெல்லை:

    தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

    இதற்காக நேற்றிரவு விருதுநகரில் இருந்து காரில் நெல்லை வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு தாழையூத்து அருகே பண்டாரகுளம் பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் வந்திருந்தனர். தொடர்ந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது செண்டை மேளம் முழங்க சிலம்ப குழுவினரின் சாகசங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் பண்டாரகுளம் பகுதியில் நான்கு வழிச்சாலை இருபுறமும் மின்னொளியில் ஜொலித்தது.

    இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான விஜிலா சத்யானந்த், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், பாளை யூனியன் சேர்மனும், பாளை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான கே.எஸ்.தங்கபாண்டியன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு, தச்சை பகுதி செயலாளரும், முன்னாள் மண்டல சேர்மனுமான தச்சை சுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு துணை அமைப்பாளர்கள் பல்லிக்கோட்டை செல்லத்துரை, வீர பாண்டியன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆறுமுகராஜா, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவரும், கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளருமான அனுராதா ரவி முருகன், சமூக ஆர்வலரும், ராதாபுரம் ஒன்றிய இளைஞரணி விஜயாபதி ஏ.ஆர்.ரகுமான், மானூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருள்மணி, நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா, நாங்குநேரி கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின், மாவட்ட தொழில்நுட்ப அணி பிரபா அருள்மணி, முன்னாள் ஒருங்கிணைந்த நெல்லை மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான நவநீதன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மீரான் மைதீன் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×