என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்
    X

    களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் படுகாயம்

    • தரை பாலத்தில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது.
    • விபத்தில் வீரகாளி முத்து, சூர்ய நரேஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

    களக்காடு:

    ராதாபுரம் அருகே உள்ள சமூகரெங்கபுரத்தை சேர்ந்தவர் சூர்ய நரேஷ்குமார் (வயது21). சம்பவத்தன்று இவரும், திசையன்விளையை சேர்ந்த முருகன் மகன் வீரகாளி முத்துவும் (20) மோட்டார் சைக்கிளில் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு சென்றனர். பின்னர் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை வீரகாளிமுத்து ஓட்டினார். சூர்யநரேஷ்குமார் பின்னால் அமர்ந்திருந்தார்.

    திருக்குறுங்குடி திருமலை நம்பி கோவில் செல்லும் சாலையில் உள்ள தரை பாலத்தில் மோட்டார் சைக்கிள் வந்த போது, திடீர் என மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரகாளி முத்து, சூர்ய நரேஷ்குமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து இருவரும் நாகர்கோவில் அரசு மருத்து வமனையில் சேர்க்கப்பட்டனர். இதுபற்றி திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    Next Story
    ×