என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ஆலங்குடி வாலிபர் கைது செய்யப்பட்டார்
    • சிங்கப்பூரில் இருந்த வந்தபோது அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்

    கே.கே. நகர்,

    சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 40 ) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை இமிக்ரிவேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து குமாரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார். குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • திருச்சியில் மின்னல் பாய்ந்து செல்போன் வெடித்து சிதறியதில் 3 பெண்கள் காயமடைந்தனர்
    • வயலில் வேலை பார்த்த போது சோகம்

    திருச்சி,

    திருச்சி மருங்காபுரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருச்சி கிராப்பட்டியில் அரசு விடுதி மாணவர்கள். தரமற்ற உணவு வழங்கப்படுவதாக கூறி திடீர் மறியல்
    • இட்லியை எடுத்துக்கொண்டு கலெக்டர் அலுவலகத்துக்கு புறப்பட்டதால் பரபரப்பு

    திருச்சி,

    திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர்கள் பல முறை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை.

    விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று திருச்சி - மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான காலை உணவான இட்லியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டுகட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தரமற்ற உணவுகளால் விடுதியில் பயின்ற 3 மாணவர்கள் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் போலீஸாரிடம் தெரிவித்தனர்.

    பின்னர் மாணவர்கள் இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். இதை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி - மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. 

    • திருச்சி லால்குடி, புள்ளம்பாடி, சிறுகுடியில் இரவு முழுவதம் மழை கொட்டித் தீர்த்தது
    • 296.5 செ. மீட்டர் மழை பதிவானது

    திருச்சி,

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந் துள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் மழை பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று காலை வரை பெய்தது. தொடர்ந்து நேற்று தொடர்ச்சியாக லால்குடி, புள்ளம்பாடி சிறுகுடி ஆகிய பகுதிகளில் பெய்தது.

    இந்த தொடர் மழை காரணமாக பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழைநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பகலில் வெயில் அடித்தாலும் நேற்று காலை முதல் ஆங் காங்கே மழை பெய்தது. பின்னர் மீண்டும் மாலையில் மழை வெளுத்து வாங்கியது.

    திருச்சி மாவட்டத்தில் லால்குடி, புள்ளம்பாடி சிறுகுடி ஆகிய பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    லால்குடி-10.4 புள்ளம்பாடி-38.2 தேவிமங்கலம்-16.4, சமயபுரம்-19.4 , சிறுகுடி- 49.2. வாத்தலை அணைக்கட்டு-3, மணப்பாறை-3.2, பொன்னியாறு அணை-2, கோவில்பட்டி-3, மருங்கா புரி-5.2, முசிறி-9, புலிவலம்-6, நவலூர் குட்டப்பட்டு-1.5, துவாக்குடி-14, கொப்பம் பட்டி-10, தென்பறநாடு-36, துறையூர்-8, பொன்மலை- 8, திருச்சி விமானநிலை யம்-12, திருச்சி ஜங்ஷன்- 7.6, திருச்சி நகரம்-4 ஆகும். திருச்சி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 296.5 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதன் சராசரிமழை அளவு 12.35 மில்லி மீட்டர் ஆகும். 

    • துறையூர் பஸ் நிலையம் அருகே சுவீட் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது
    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு போலீசார் விசாரணை

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் தியாகி சிங்காரவேலர் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 38). இவர் அதே பகுதியில் டீ கடையுடன் கூடிய சுவீட் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இரவு வழக்கம் போல் தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து உள்ளே சென்று பார்த்த போது, கடையின் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த பணம் ரூ.10 ஆயிரம் மற்றும் சுமார் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருள்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

    இது குறித்து முருகன் துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற துறையூர் போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது.
    • வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மருங்கால்புரி அடுத்த வகுத்தால்வார்பட்டியை சேர்ந்தவர் மணிமேகலை (வயது 30).

    சம்பவத்தன்று இவரும் அதே பகுதியை சேர்ந்த முத்து லெட்சுமி(40), பெரியம்மாள் (55) ஆகியோர் வயலில் வேலை பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது இடியுடன் கூடிய மழை பெய்தது. திடீரென அங்கு மின்னல் பாய்ந்தது. மணிமேகலை வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறியது. இதில் மணிமேகலை படுகாயம் அடைந்தார். மற்ற இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து காயமடைந்த 3 பேரையும் மணபாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் ஏற்பாட்டில் நடைபெற்றது.
    • அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    திருச்சி

    மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் இளம்பெண்கள் பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆய்வு கூட்டம் ஏ.பி. மகாலில் பகுதி செயலாளர் அன்பழகன் ஏற்பாட்டில் நடைபெற்றது.

    திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி மாநகர் மாவட்ட பொறுப்பாளரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, கலந்து கொண்டு பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதில் அவைத்தலைவர் அய்யப்பன், ஜெயலலிதா பேரவை செயலாளர் கார்த்திகேயன், தொழிற்சங்க மண்டல செயலர் ஜெகதீசன், விவசாய அணி செயலாளர் கருடா நல்லேந்திரன், சிறுபான்மை பிரிவு செயலாளர் மீரான், பொதுக்குழு உறுப்பினர் மல்லிகா செல்வராஜ் மாமன்ற உறுப்பினர் அரவிந்தன், தில்லை நகர் பகுதி செயலாளர் முஸ்தபா, பீடி பிரிவு சகாபுதீன், என்ஜினியர் இப்ராம்ஷா, கலிலுல்ரகுமான், ஜோதிவாணன், பாலாஜி, மகாதேவன், ஷாஜஹான், வட்டசெயலாளர்கள் பொன்.அகிலாண்டம், ராமமூர்த்தி, ராஜ்மோகன் வெற்றிவீரன்.மலைக்கோட்டை ஜெகதீசன், கதிர்வேல். ஜெயகுமார்.சிங்கமுத்து, ராமநாதன் புகலேந்திரன், கார்த்திகேயன். கே.சக்திவேல், சந்தோஷ்ராஜ், பாசறை குமார், இசக்கி அம்மாள், முருகன், நவமணி, ரத்தினம். குவைத் மனோகர் ரவிசங்கர், கதிரவன், எல்.ஐ.சி.பெரியண்ணன், பொம்மாசி பாலமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் தில்லை நகர் பகுதி சார்பாக மாநகர் மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் பகுதி செயலாளர் .எம். ஆர்.ஆர் முஸ்தபா, ஜங்ஷன் பகுதி சார்பாக சண்முகா மகாலில் பகுதி செயலாளர் நாகநாதர் பாண்டி ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

    • அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.
    • அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார்.

    திருச்சி

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெமினா ஓட்டலில் அ.ம.மு.க. தலைவர் கோபால் தலைமையில் நடைபெற்றது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலை வகித்தார். இந்த செயற்குழு கூட்டத்தில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர்கள் ரெங்கசாமி, செந்தமிழன், சண்முகவேல், மாணிக்கராஜா, அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர்கள் ராஜசேகரன், மகேந்திரன், பொருளாளர் எஸ்.கே. செல்வம், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர் சரஸ்வதி, அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் சாருபாலா தொண்டைமான், தேர்தல் பிரிவு செயலாளர்கள் பார்த்திபன், குமரேசன் உள்ளிட்ட அமைப்புச் செயலாளர்கள், 150 செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

    திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். இதில் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், காசி மகேஸ்வரன், மாவட்ட அவைத்தலைவர் சாத்தனூர் ராமலிங்கம், முதலியார்சத்திரம் ராமமூர்த்தி, வக்கீல் சரவணன், பாசறை ஜான் கென்னடி, ஒன்றிய செயலாளர் சண்முகம், பெஸ்ட் கே பாபு, சிறுபான்மை பிரிவு பகுருதீன், பகுதி செயலாளர்கள் செல்வம் என்ற பன்னீர் பாண்டியன், வேதாத்ரி நகர் பாலு, நாகநாதர் சிவக்குமார், வெங்கட்ரமணி, சதீஸ்குமார்,தனசிங் மதியழகன், தருண், மீரான், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
    • 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் கூட 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருச்சி

    தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் குவாரி ஓப்பந்ததாரர் உள்ளிட்ட சில மணல் மாபியாக்களை சுற்றி வளைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் தாளக்குடி நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கன்களை விட அதிகமான லாரிகளுக்கு மணல் விற்பனை செய்வதாகவும் 10 அடி ஆழத்துக்கு மேல் மணல் அள்ளுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்த மணல் குவாரிகளில் கடந்த மாதம் 12ம் தேதி 3-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். பல முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் கடந்த சில நாட்களூக்கு முன்பு மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நொச்சியம் மாதவப்பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த குவாரிகளில் இன்று அமலாக்க துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 பேர் என 10 பேர் பாதுகாப்பு படை வீரர்களுடன் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் உதவியுடன் மிதவை படகுடன் கூடிய ஆழம் கண்டறியும் கருவியுடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் கூட 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    • மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது.
    • இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    திருச்சி

    மலேசியாவில் இருந்து நேற்று திருச்சி விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்து இறங்கியது. இந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளின் உடைமைகள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்பொழுது ஒருவரின் பாஸ்போர்ட்டை அதிகாரி வாங்கி சோதனை செய்தபோது அதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அக்ரமிசியை சேர்ந்த பாலுசாமி மகன் முருகன் (வயது 43) என்று இருந்தது.இதை அடுத்து அந்த நபரிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் அவருடைய உண்மையான பெயர் ஜெகன் (வயது 40) என்றும் ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டினம் கிராமத்தை சேர்ந்த நாகசாமி என்பவரின் மகன் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஏர்போர்ட் போலீஸ் நிலையத்தில் அதிகாரிமுகேஷ் ராம் கவுதம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகனை கைது செய்தனர்.

    • திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர்.
    • வழக்கத்தை விட வியாபாரம் அதிகளவில் இருந்ததாகவும், 80 சதவிகித ஆடுகள் விற்பனை ஆனது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    மண்ணச்சநல்லூர்:

    சமயபுரம் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடி அருகே பல ஆண்டுகளாக ஆட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டுச் சந்தைக்கு சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, பாடாலூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி ஆடுகளை வாரந்தோறும் கொண்டு வந்து விற்பது வழக்கம்.

    அவ்வாறு விவசாயிகள் விற்பனை செய்யும் ஆடுகளை திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகள் கடா ஆடுகளை விற்பனைக்காவும், கோட்டை ஆடுகள் மற்றும் ஆடு குட்டிகளை வளர்ப்பதற்காகவும் வாங்கி செல்வதை பல ஆண்டுகளாக வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆட்டுக்கறி விற்பனைக்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் இந்த வாரச்சந்தையில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை கொள்முதல் செய்தனர். வழக்கத்தைவிட அதிகளவில் ஆடுகளை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    திருச்சி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களிலிருந்தும் வேன் மற்றும் லாரிகளில் வியாபாரிகள் வந்திருந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட வியாபாரம் அதிகளவில் இருந்ததாகவும், 80 சதவிகித ஆடுகள் விற்பனை ஆனது என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஆடுகளின் விலைகளில் பெரிய அளவில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக அளவில் வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் வியாபாரம் களைகட்டியதாகவும், வியாபாரிகளும், விற்பனையாளர்களும் தெரிவித்தனர்.

    • எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது.
    • தமிழகத்தில் வீட்டுக்குள் பட்டா இடத்தில் கொடியேற்றினால் கைது செய்கிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் முன்னரே வருமான வரித்துறை சோதனை நடந்திருக்க வேண்டும். தற்போது நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் தான் அரசியல்வாதி என்கிற ஒரு தகுதியை வைத்து ஊழல் செய்து வருகிறார்கள். வருமான வரி சோதனை பற்றி, நான் ஏதாவது சொன்னால், நான் சொல்லித்தான் சோதனை நடத்துகிறார்கள் என்று சொல்வார்கள்.

    எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அமைச்சர்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி லஞ்சப் பணத்தை குவிக்கிறார்கள். அமைச்சர் எ.வ.வேலுவின் பின்னணி என்ன?. அரசியலை மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க.வில் பணம் சம்பாதிக்கிறார்கள்.

    இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டும், இலங்கை அரசு மேல்முறையீடு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது. கடல் கொள்ளையர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இந்த பிரச்சினைக்கு நல்ல முடிவு விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    பா.ஜனதாவின் 10 ஆண்டுகால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறிதான் அடுத்த தேர்தலில் வாக்கு சேகரிக்க உள்ளோம். தி.மு.க.வை பொறுத்தவரை 30 மாத ஆட்சியில் என்ன செய்து இருக்கிறீர்கள் என மக்கள் கேட்பார்கள்.

    தமிழகத்தில் வீட்டுக்குள் பட்டா இடத்தில் கொடியேற்றினால் கைது செய்கிறார்கள். நான் இதை ஒருவிதத்தில் ரசிக்கிறேன். இது கட்சி தொண்டர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். தமிழகத்தில் எவ்வளவு விஷயங்கள் இருக்கிறது. ஆனால் கொடிக்கம்பங்கள் பற்றி தி.மு.க. பேசுகிறது. பா.ஜனதாவை பார்த்து தி.மு.க. பயப்படுகிறது.

    இந்தியா கூட்டணியை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நேரம் வரும்பொழுது தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜனதா தலைவர்கள் பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×