என் மலர்
உள்ளூர் செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட வாலிபர் கைது
- திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்ட ஆலங்குடி வாலிபர் கைது செய்யப்பட்டார்
- சிங்கப்பூரில் இருந்த வந்தபோது அதிகாரிகள் மடக்கி பிடித்தனர்
கே.கே. நகர்,
சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 40 ) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை இமிக்ரிவேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவர் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இதனைத் தொடர்ந்து குமாரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஏர்போர்ட் போலீசார் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார். குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






