search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி தாளக்குடி மணல் குவாரியில் 3-வது முறையாக அமலாக்கத்துறை சோதனை
    X

    திருச்சி தாளக்குடி மணல் குவாரியில் 3-வது முறையாக அமலாக்கத்துறை சோதனை

    • தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர்.
    • 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் கூட 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    திருச்சி

    தமிழகத்தில் கடந்த மாதம் மணல் குவாரிகளை மையம் வைத்து அமலாக்கத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் புதுக்கோட்டையை சேர்ந்த மணல் குவாரி ஓப்பந்ததாரர் உள்ளிட்ட சில மணல் மாபியாக்களை சுற்றி வளைத்து வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அந்த சோதனையில் பல கோடி மதிப்பிலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    திருச்சி மாவட்டத்தில் கொள்ளிடம் தாளக்குடி நொச்சியம் மாதவப் பெருமாள் கோவில் கொண்டையம்பேட்டை ஆகிய பகுதிகளில் அரசு மணல் குவாரி செயல்பட்டு வருகிறது.இந்த குவாரிகளில் அரசு அனுமதித்த டோக்கன்களை விட அதிகமான லாரிகளுக்கு மணல் விற்பனை செய்வதாகவும் 10 அடி ஆழத்துக்கு மேல் மணல் அள்ளுவதாகவும் புகார்கள் எழுந்தன.

    இந்த மணல் குவாரிகளில் கடந்த மாதம் 12ம் தேதி 3-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றில் இயங்கி வந்த மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். பல முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் கடந்த சில நாட்களூக்கு முன்பு மீண்டும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நொச்சியம் மாதவப்பெருமாள் கோவில் தாளக்குடி, கொண்டையம்பேட்டை மணல் குவாரிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த குவாரிகளில் இன்று அமலாக்க துறையைச் சார்ந்த அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் 2 பேர் என 10 பேர் பாதுகாப்பு படை வீரர்களுடன் மீண்டும் சோதனையில் ஈடுபட்டனர். கொள்ளிடம் ஆற்றின் நடுவே எவ்வளவு ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து ஐஐடி கான்பூர் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த மாணவர்கள் உதவியுடன் மிதவை படகுடன் கூடிய ஆழம் கண்டறியும் கருவியுடன் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்று விதிமுறை இருந்தாலும் கூட 15 அடிக்கும் மேல் மணல் அள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

    Next Story
    ×