என் மலர்tooltip icon

    திருச்சிராப்பள்ளி

    • குடிபோதைக்கு அடிமையான அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை .
    • மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.

    திருச்சி

    திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் .இவரது மனைவி இந்திரா (வயது 57 ).

    இவர் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார் .இவரது மகன் பாலாஜி ( 27 ). குடிபோதைக்கு அடிமையான அவரால் அதிலிருந்து மீள முடியவில்லை .இந்த நிலையில் மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை எடுத்து குடித்து விட்டார்.

    பின்னர் பெற்றோர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நெல்பயிர் நடவு பணிகளுக்காக காலை வேலையில் சென்ற ரங்கம்மாள் வரப்பில் நடந்து சென்ற பொழுது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் விழுந்துள்ளார் .
    • ஒயரில் மின் கசிவு காரணமாக உயர் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் உயிரிழந்தார் .

    உப்பிலியபுரம்

    கோட்டப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கம்மாள் (வயது 66). கணவர் பெயர் நல்லு.

    இவர் பச்ச பெருமாள் பட்டியில் வசிக்கும் தனது மகள் மல்லிகாவை பார்க்க 2 தினங்களுக்கு முன் சென்றுள்ளார். அங்கு கூலி வேலைக்கு செல்லும் மல்லிகா தனது தாயையும் கூலி வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆலத்துடையான் பட்டி ஏரிக்கரையில் உள்ள ராஜி என்பவர் தோட்டத்தில் நெல்பயிர் நடவு பணிகளுக்காக காலை வேலையில் சென்ற ரங்கம்மாள் வரப்பில் நடந்து சென்ற பொழுது எதிர்பாராத விதமாக வழுக்கி விழுந்து அருகில் இருந்த மின் இணைப்பு பெட்டியில் விழுந்துள்ளார் . அப்பொழுது மின் இணைப்பு பெட்டியில் இருந்த ஒயரில் மின் கசிவு காரணமாக உயர் அழுத்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே ரங்கம்மாள் உயிரிழந்தார் .

    தகவலின் பேரில் மின் துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் உப்பிலியபுரம் சப் இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ் செபாஷ்டின் சந்தியாகு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 43). மரவியாபாரம் செய்து வருகிறார்.
    • அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் காரின் முன் பகுதியில் வந்து காரை வழிமறித்து உள்ளனர்.

    மணப்பாறை

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியைச் சேர்ந்தவர் பாரதி (வயது 43). மரவியாபாரம் செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று நள்ளிரவு வியாபாரத்தை முடித்துக் கொண்டு காரில் திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் முத்தபுடையான்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் காரின் முன் பகுதியில் வந்து காரை வழிமறித்து உள்ளனர்.

    அப்போது பாரதி காரை நிறுத்தவே 2 மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய 4 பேரும் அவரை மிரட்டி காரில் இருந்த ரூ.3 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் திருச்சி நோக்கியும், மற்ற இருவர் திண்டுக்கல் நோக்கியும் தப்பி சென்றனர். சம்மந்தப்பட்ட பகுதி இருள் சூழ்ந்த பகுதி என்பதால் அந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இருக்காது.

    பின்னர் பாரதி இதுதொடர்பாக மணப்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் கடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சி எட்டரை பூ காட்டில் விஷ வண்டு கடித்து 25 பேர் காயமடைந்துள்ளனர்
    • காயம்பட்டவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதி

     ராம்ஜிநகர்,

    திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கிராமத்தில் உள்ள வயல்களில் மல்லிகை பூ செவ்வந்தி பூ உள்ளிட்ட பூ வகைகளை பயிர் இடுவது வழக்கம் அதே போன்று பெற்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி வீரமலை என்பவர் தனது சொந்த ஒரு ஏக்கர் பரப்பளவு உள்ள வயலில் மல்லிகைப்பூ பயிரிட்டுள்ளார் அதனை தினமும் காலை 7 மணிக்கு சுமார் 10 - க்கும் மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூ பறித்துள்ளனர். அதனைப் போல அருகில் இருந்த வயலில் அதே பகுதியைச் சேர்ந்த அங்காண்டி என்பவரும் தனது வயலில் மல்லிகை பூ பெயரிட்டுள்ளார் அவரும் பத்திரிக்கை மேற்பட்ட பெண்களைக் கொண்டு பூப்பறித்துள்ளார். அப்போது சுமார் 8 மணி அளவில் கூட்டமாக வந்த விஷ வண்டுகள் பூ பறித்துக் கொண்டிருந்த அஞ்சுகம், சின்ன பொண்ணு, வளர்மதி, மலர், மூர்த்தி, ராஜா, முருகாயி, செல்வி உள்பட 25க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களை கடித்தது. வலி தாங்காமல் கதறிய பெண்கள் மற்றும் ஆண்களை அருகில் இருந்தவர்கள் தங்கள் வைத்திருந்த இருசக்கர வாகனத்தின் மூலம் குழுமணி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சோமரசம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தால் கிராம மக்கள் வயலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர்.

    • மணப்பாறையில் சிறுமியை கடத்த முயன்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது
    • முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது

    மணப்பாறை,

    மணப்பாறை பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறாள். இவள் நேற்று வீட்டின் அருகே இருந்தபோது அங்கு வந்த முகமூடி அணிந்திருந்த மர்ம நபர் திடீரென சிறுமியை பிடித்து கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுமி கூச்சலிடவே குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் திரண்டனர். இதையடுத்து மர்ம நபர் சிறுமியை விட்டு விட்டு தான் வந்த மொபட்டில் தப்பிச்சென்றார். இது பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார்? சிறுமியை எதற்காக கடத்த முயன்றார்? என்பது குறித்தும், அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் ஏதேனும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என்பதை பார்வையிட்டும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி பஞ்சப்பூரில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் ஆம்னி பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை தயாரானது

    திருச்சி,

    திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.

    பின்னர் ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் ரெயில்வே நிர்வாகம் மற்றும் பஸ் நிலைய கதவுகளை அடைத்து விட்டது.

    இதனால் தற்போது ஆம்னி பஸ்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பஞ்சப்பூரில் ரூ.349 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி ஒருங்கிணைந்த பஸ் முனையம் அருகில் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதற்கு 2 ஏக்கர் பரப்பளவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த பஸ் முனைய பகுதியில் டைட்டல் பார்க், ட்ரக் டெர்மினல், ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் போன்றவை வருகிறது.

    இந்தப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளது.

    ஆம்னி பஸ் நிலையத்துக்கு தனியாக இடமில்லாததால் திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலைய பகுதிகளில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த புதிய ஆம்னி பஸ் நிலையத்துக்கு ரூ. 18. 75 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்திற்கு நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • துறையூரில் படியில் பயணம் செய்த மெக்கானிக் பலி
    • படியில் தொங்கிக்கொண்டு செல்போன் பேசியதால் விபரீதம்

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு uட்பட்ட ஆலத்துடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 43). இவர் மெக்கானிக்காக பணி புரிந்து வந்தார். இவருக்கு திருமணமாகி கிருஷ்ணவேணி என்கிற மனைவியும், கோகுல், வசந்தகுமார் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று சொந்த வேலை காரணமாக துறையூர் வந்துவிட்டு, மீண்டும் தன்னுடைய கிராமத்திற்கு புளியஞ்சோலை செல்லும் அரசு பஸ் ஒன்றில் சென்றுள்ளார். அப்பொழுது வடிவேல் படியில் தொங்கிக்கொண்டு செல்போன் பேசியதாகவும், அப்பொழுது தவறி கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து பஸ்ஸை ஓரமாக நிறுத்திவிட்டு டிரைவரும், பயணிகளும் சென்று பார்த்த பொழுது வடிவேல் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.

    இதை அறிந்த துறையூர் போலீசார், வடிவேலின் பிரேதத்தை கைப்பற்றி துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருச்சியில் மார்க்கெட் கட்டிடத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் சிக்கினார்
    • ஏரியாவுக்குள் ‘பெரிய ஆளாக வேண்டும்’ என்று துணிகர செயல்

    மலைக்கோட்டை,

    திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பின்புறமுள்ள காளியம்மன் கோவில் தெரு மாநகராட்சி மார்க்கெட் எதிரில் அப்பகுதியை சேர்ந்த குற்ற வழக்கில் தொடர்புடையவர் உள்பட 2 பேர் நேற்று மாலை அமர்ந்து, மது அருந்தியுள்ளனர். அப்போது, ஏரியாவுக்குள் 'பெரிய ஆளாக என்ன செய்யலாம்' என்று தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது.

    இதைத்தொடர்ந்து அவர்கள், அங்கிருந்த சரக்கு ஆட்டோவில் இருந்து டீசலை டியூப் போட்டு பிடித்து, மதுபாட்டிலில் ஊற்றி டீசல் குண்டாக மாற்றி எதிரில் இருந்த மாநகராட்சி மார்க்கெட் கட்டிடம் மீது வீசியுள்ளனர். அந்த பாட்டில் கட்டிடத்தைச் சுற்றி வைக்கப்பட்டிருந்த தகரத்தின் மீது விழுந்து டீசல் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப்பார்த்து அப்பகுதியில் இருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    இதற்கிடையே அவர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து, அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. இச்சம்பவத்தால் நேற்று மாலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர்.
    • ரவுடி வீட்டை குறி வைத்து மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    திருச்சி:

    திருச்சி திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது பூர்வீகம் திருச்சி மேல கொண்டயம்பேட்டை ஆகும்.

    பிரபல ரவுடியான மணிகண்டன் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன.

    கடந்த 2021ல் ஆட்டோ முருகன் என்பவரை கொலை செய்த வழக்கில் மணி கண்டன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் முருகன் ஆதரவாளர்கள் அவருக்கு குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு ரவுடி மணிகண்டன் வீட்டின் மீது 3 மர்ம நபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் பார்த்தபோது வீட்டின் நிலை கதவு கண்ணாடி உடைந்து கிடந்தது. வாசலில் நாட்டு வெடி துகள்கள் சிதறி கிடந்தன. ரவுடி மணிகண்டனை குறி வைத்து வெடிகுண்டு வீசினர். ஆனால் அந்த குண்டு குறி தவறி வாசலில் வெடித்துள்ளது. இதனால் அதிர்ஷ்டவசமாக வீட்டுக்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்க நாதன் மற்றும் மாநகர துணை போலீஸ் கமிஷனர் அன்பு மற்றும் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் நாட்டு வெடிகுண்டுக்கான எந்த மூலப்பொருட்களும் அங்கு கண்டறியப்படவில்லை.

    ஆகவே வீசப்பட்டது வெங்காய வெடி என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ரவுடி வீட்டை குறி வைத்து மர்ம நபர் நாட்டு வெடிகுண்டை வீசுவது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து மணிகண்டனின் எதிரிகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

    இந்த சம்பவம் திருவானைக்காவல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழகத்தில் ஒரு சுத்தமான அரசியல் இருக்க வேண்டும். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது.
    • இந்திய மக்களை வறுமைக்கோட்டில் வைத்திருந்ததுதான் காங்கிரஸ் ஆட்சி.

    திருச்சி:

    திறந்த வேனில் நின்றவாறு பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு வாய்ந்த ஊர் மணப்பாறை. மணப்பாறை முறுக்கிற்கு கடந்த மார்ச் மாதம் புவிசார் குறியீடு வழங்கியவர் பிரதமர் மோடி. இங்கு குழுமியிருக்கும் மக்கள் எதிர்பார்ப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான். பிரதமர் மோடி ஆட்சி 3-வது முறையாக தொடர வேண்டும், இங்கு 30 மாத காலம் ஆட்சி செய்யும் தி.மு.க.வின் ஆட்சி அகல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் ஒரு சுத்தமான அரசியல் இருக்க வேண்டும். குடும்ப அரசியல் இருக்கக்கூடாது. சாமானியனுக்காக இந்த அரசியல் நடத்தப்பட வேண்டும்.

    இந்தியா - பாரதம் என்று சொன்னால் ஒரு தனி மரியாதை இருப்பதை இப்போது பார்க்க முடிகிறது. 2011-ம் ஆண்டில் காங்கிரசும், கூட்டணியில் இருந்த தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டை காட்டு மிராண்டி விளையாட்டு என்று சொன்னார்கள். ஆனால் மீண்டும் இப்போது தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கு காரணம் நரேந்திரமோடி மட்டும்தான்.

    சமீபத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட சில வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனி வராது என்றால் அதை உருவாக்கி கொடுத்தவர் பிரதமர் மோடி.

    ஏற்கனவே ஆட்சியில் இருந்த கட்சிகள் வளர்ச்சியை கொடுக்கவில்லை. இதுபற்றி மக்கள் கேட்க ஆரம்பித்தால் மத்திய அரசு இந்தியை திணிக்கிறது என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். மோடி இந்தியை திணிக்கிறாரா?. ஐ.நா. சபையில் தமிழில் மோடி பேசுகிறார். திருக்குறளை 100 மொழிகளில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று விரும்புகிறார். எங்கு சென்றாலும் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பற்றி பேசுகிறார். செம்மொழி ஆய்வு நிறுவனம் உருவாக்குகிறார். காசி தமிழ்ச்சங்கம் உருவாக்கி உள்ளார். நம் பாரம்பரிய சின்னமான செங்கோலை பாராளுமன்றத்தின் மையக்கட்டிடத்தில் வைக்கிறார். சவுராஷ்டிரா தமிழ் சங்கம் வைக்கிறார்.

    இந்தியாவின் எந்த மொழிக்கும், எந்த கலாசாரத்திற்கும் கொடுக்கப்படாத மரியாதையை கடந்த 9 ஆண்டுகளாக பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும், தமிழக கலாசாரத்திற்கும் கொடுத்துள்ளார். எனவே மோடி மீது தி.மு.க. குற்றச்சாட்டு வைக்க வேண்டும் என்றால் தமிழை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைய்யுங்கள். இந்தியை திணிக்கிறார் என்ற குற்றச்சாட்டை வைக்க வேண்டாம். இந்திய மக்களை வறுமைக்கோட்டில் வைத்திருந்ததுதான் காங்கிரஸ் ஆட்சி.

    தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.10 ஆயிரம் கோடி வழங்கப்பட்டு விட்டது. அந்த தொழிலாளர்களின் வங்கிக்கணக்கில் தீபாவளிக்கு முன் ஊதியம் வந்து விடும். இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் அவர்களை வளப்படுத்திக் கொள்வார்கள், அவ்வளவுதான். அவர்களால் எந்த நல்லதும் நடக்காது.

    தி.மு.க.வில் உள்ளவர்களிடம் ஒரு கேள்வியை மட்டும் கேளுங்கள். அரசியலுக்கு வருவதற்கு முன் அவர்களின் சொத்து என்ன? அமைச்சர், எம்.எல்.ஏ. ஆன பின் இப்போது அவர்களின் சொத்து விவரம் என்ன என்பதை கேட்டுப்பாருங்கள். இந்தியாவில் 92 முறை ஆட்சியை கலைத்தது காங்கிரஸ் கட்சி. ஆனால் நரேந்திர மோடியின் 9 ஆண்டுகால ஆட்சி காலத்தில் ஒருமுறையாவது எங்காவது ஆட்சி கலைப்பு நடந்தது உண்டா?. தமிழகத்தில் காவல்துறையை வைத்து சர்வாதிகார ஆட்சியை தி.மு.க. அரசு நடத்துகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குமார் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது.
    • குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கே.கே. நகர்:

    சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு ஸ்கூட் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்து கொண்டு இருந்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா பட்டத்தி காடு கிராமத்தைச் சேர்ந்த குமார் (வயது 40 ) என்ற பயணியின் பாஸ்போர்ட்டை இமிக்ரிவேஷன் பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அவர் மீது கந்தர்வகோட்டை காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்கு இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து குமாரை ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    ஏர்போர்ட் போலீசார் கந்தர்வகோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் குமார் ஒப்படைக்கப்பட்டார்.

    குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    • விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி-மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

    திருச்சி:

    திருச்சி கிராப்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் 120 பேர் தங்கி கல்வி பயின்று வருகின்றனர்.

    இவர்களுக்கு கடந்த 3 மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதுபற்றி அவர்கள் பல முறை மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக சென்று மனு அளித்தும், போராட்டம் நடத்தியும் எந்த ஒரு பலனும் இல்லை. விடுதி வார்டனும், துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளாததால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் இன்று திருச்சி-மதுரை சாலையில் கிராப்பட்டி மேம்பாலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்ட மோசமான காலை உணவான இட்லியுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மாணவர்களை குண்டு கட்டாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தரமற்ற உணவுகளால் விடுதியில் பயின்ற 3 மாணவர்கள் வாந்தி பேதி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், இதுபோன்று மற்ற மாணவர்களுக்கும் இந்த நிலை ஏற்படக்கூடாது என்ற நோக்கிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் மாணவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் மாணவர்கள் இட்லி குண்டாவை தூக்கிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர்.

    இதை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    விடுதி மாணவர்களின் போராட்டத்தினால் திருச்சி-மதுரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது.

    ×