search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பஸ் நிலையம்
    X

    திருச்சி பஞ்சப்பூரில் புதிய ஆம்னி பஸ் நிலையம்

    • திருச்சி பஞ்சப்பூரில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் ஆம்னி பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது
    • விரிவான திட்ட அறிக்கை தயாரானது

    திருச்சி,

    திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகாமையில் ரெயில்வேக்கு சொந்தமான இடத்தில் ஆம்னி பஸ் நிலையம் செயல்பட்டு வந்தது.

    பின்னர் ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால் ரெயில்வே நிர்வாகம் மற்றும் பஸ் நிலைய கதவுகளை அடைத்து விட்டது.

    இதனால் தற்போது ஆம்னி பஸ்கள் திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி செல்கின்றனர்.

    இந்த நிலையில் பஞ்சப்பூரில் ரூ.349 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் மாநகராட்சி ஒருங்கிணைந்த பஸ் முனையம் அருகில் புதிய ஆம்னி பஸ் நிலையம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    இதற்கு 2 ஏக்கர் பரப்பளவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிர்வாக அனுமதிக்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே இந்த பஸ் முனைய பகுதியில் டைட்டல் பார்க், ட்ரக் டெர்மினல், ஒருங்கிணைந்த மார்க்கெட் வளாகம் போன்றவை வருகிறது.

    இந்தப் பணிகள் பல்வேறு நிலையில் உள்ளது.

    ஆம்னி பஸ் நிலையத்துக்கு தனியாக இடமில்லாததால் திருச்சி மத்திய பஸ் நிலையம் மற்றும் சத்திரம் பஸ் நிலைய பகுதிகளில் ஆம்னி பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

    இந்த புதிய ஆம்னி பஸ் நிலையத்துக்கு ரூ. 18. 75 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விரிவான திட்ட அறிக்கை நகராட்சி நிர்வாக இயக்குன ரகத்திற்கு நிர்வாக அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது.

    பின்னர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதும் பணிகள் தொடங்கும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×